Monday, August 31, 2009
Sunday, August 30, 2009
கொத்தாந்தீவு பிரதேசத்தில் மழை வெள்ளம்.
ஸ்ரீ லங்கா, புத்தளம் மாவட்ட முந்தல் பிரதேச செயலாளர் பிரிவின் கொத்தாந்தீவு கிராம சேவையாளர் நிவாகத்தின் கீழ்வரும் கிராமம்தான் ரஹ்மத்புரம் ஆகும். இக்கிராமத்தில் 1990 ம்ஆண்டு வட மாகாணத்திலிருந்து அகதிகளாக்கப்பட்டமுல்லைதீவு,மன்னார் ஆகிய மாவட்ட
படம்:- பரீத் .எம். பௌஸி,+0714915701
முஸ்லிம்கள் சிலர் 1993 ம் ஆண்டு இக் கிராமம் அமைந்த இடத்தில் 10,பேர்ச்செஸ் காணித்துண்டு ஒன்று ரூபா 7000 முதல் 10000 ரூபா வரையான தமது சொந்தப்பணத்தில் வாங்கிக் கொண்டார்கள். இதன் மூலம் மூன்று வருட அகதிமுகாம் வாழ்க்கைக்கு முடிவும்கண்டனர். தமது பணத்திலேயே ஓலை குடிசைகளையும் அமைத்து வாழத் தொடங்கினார்கள் . 1994 ம் ஆண்டு பதவிக்கு வந்த மாண்புமிகு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கஅவர்களது அரசாங்கத்தில் கப்பல், துறை முகங்கள் புனர் வாழ்வு அபிவிருத்தி அமைச்சராக மர்கூம் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்கள் இருந்தார்கள். இவரது முயற்சியினால் முதலாவது இடைக்கால மீள் குடியேற்ற திட்டக்கிராமமாக இக் கிராமம் தெரிவு செய்யப்பட்டது. இதன் காரண கர்த்தாவாகஅப்போது முந்தல் பிரதேச செயலாளராகவிருந்த ஏ.சி. எம். நபீல் அவர்கள் இருந்தார்கள். இங்கு வீடு கட்டுவதற்கு 35 000 ரூபா வழஙகப்பட்டது. இத்திட்டத்திற்கமைவாகசிறிய வீடு கட்டப்பட்டுள்ளது சிலர் சிறிய தொகையான இப் பணத்தை பெற விரும்பவில்லை. இக்கிராமத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத்தாக நல்ல தண்ணீர்இலேசாகக் கிடைப்பதால் ரஹ்மத்புரம் என்னும் பெயர் வைக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் பெரு மழை ஏற்படும் போது இக்கிராமமும்வெள்ளத்தில் மூழ்குவது வழக்கம். 2008 ம் ஆண்டு ஒக்டோபர் மாதமும் இக்கிராமம் மழை வெள்ளத்தில் முழ்கிய காட்சியையே இங்கு காண்கின்றீகள்.
Tuesday, August 25, 2009
1993 ஜுலை மாதம் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் சார்பாக ;முஸ்லிம் சமய கலாச்சார இராஜாங்க அமைச்சர்அல்-ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களுக்கு
1993 .07.26ம் திகதி
இடம் பெயர்ந்த முஸ்லிம் அபிவிருத்தி அலகு [முல்லைத்தீவு மாவட்டம்]
என்னும் பெயரைக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனம் ஸ்ரீலங்கா புத்தளம் மாவட்டகடையாமோட்டை என்னும் கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது அதில் கலந்துகொண்ட முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களிடம் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள்சார்பாக கொடுத்த மகஜர். தயாரித்து வழங்கியவர்கள்:-
ஆலோசகர்:- எம்.எஸ்.எம்.பாரூக்,பர்சான கட்டிடம்,கடையாமோட்டை,மதுரங்குளி, புத்தளம்,ஸ்ரீலங்கா.
அமைப்பாளர் :- எம்.எஸ்.பரீத்,ஜே.பி. நீராவிப்பிட்டி,முள்ளியவளை, முல்லைத்தீவு,ஸ்ரீலங்கா.
உதவி அமைப்பாளர்:-எம்.எம்.மன்சூர்,தண்ணீ ரூற்று,முள்ளியவளை,
முல்லைத்தீவு, ஸ்ரீலங்கா
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றமும் , அபிவிருத்தியும்.
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றமும்,அபிவிருத்தியும் என்ற தொனிப்பொருளிலானகருத்தரங்கு கடந்த 2009.8.15 ம் திகதி ஸ்ரீலங்கா புத்தளம் மாவட்டத்திலுள்ள தில்லையடி கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள அம்மார்மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடு: மீள் குயேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள்அமைச்சின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் வை.ஜவாஹிர் ஜனோபர்
நிகழ்ச்சி அனுசரணை: சி.டி.ஒ நிறுவனம் [முல்லைத்தீவைப்பூர்வீகமாகக்கொண்டவர்கள்]
புகைப்படங்கள்: பரீத்.எம்.பௌஸி
நிகழ்ச்சி ஏற்பாடு: மீள் குயேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள்அமைச்சின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் வை.ஜவாஹிர் ஜனோபர்
நிகழ்ச்சி அனுசரணை: சி.டி.ஒ நிறுவனம் [முல்லைத்தீவைப்பூர்வீகமாகக்கொண்டவர்கள்]
புகைப்படங்கள்: பரீத்.எம்.பௌஸி
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்.
அல்-ஹாஜ் உசனார் மரைக்கார் அப்துல் வதூத் கிறாத் ஒதுகிரார்.
[தண் ணீ ரூற்று முள்ளியவளை]
மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் வை.ஜவாஹிர் ஜனோபர்
[ தண் ணீ ரூற் று, முள்ளியவளை]
சாகுல் ஹமீது, முஹம்மது ராசா[ஆசிரியர்]
[நீராவிப்பிட்டி ,முள்ளியவளை]
செயினுத்தீன் ஐயூப் [ஆசிரியர்]
[நீராவிப்பிட்டி,முள்ளியவளை]
அப்துல் முத்தலிப் பசீர் [முகாம் அதிகாரி]
[நீராவிப்பிட்டி, முள்ளியவளை ]
அல் -ஹாஜ் எம்.ஐ.பளீல்
[தண்ணீ ரூற்று, முள்ளியவளை]
மௌலவி எம்.ஐ.கைசர்கான்[ஆசிரியர்]
[தண்ணீ ரூற்று,முள்ளியவளை]
கதிர் லெவ்வை அப்துல் வகாப்
முல்லைத்தீவு
கச்சுமுகம்மது,முனாப்
நீராவிப்பிட்டி,முள்ளியவளை.
முகம்மது சுல்த்தான் பரீத்[ஜே.பி]
நீராவிப்பிட்டி,முள்ளியவளை.
ஜனாப் ஜவாஹிர் ஜனோபர்
பார்வையாளர்கள்
பார்வையாளர்கள்
பார்வையாளர்கள்
குழுக்கலந்துரையாடல்கள் .........
Saturday, August 15, 2009
இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் சமாதான பேச்சுவார்த்தைக்கான விசேச ஆலோசகர் எரிக்சொல்ஹெயிம் அவர்களுக்கு கொடுத்த கடிதம்
இலங்கை ,புத்தளம் மாவட் டத்திலுள்ள ஆலங்குடா என்னும்கிராமத்தில் முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகள் குடியமர்த்டப்பட்டுள்ள [ஏ] முகாமுக்கு நோர்வேயின்பிரதிநிதி எரிக்சொல்கிம்வருகை தந்தபோதுநேரடியாக கையளித்தகடிதத்தின் பிரதி, பதில் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.
Monday, August 3, 2009
ஸ்ரீலங்கா, புத்தளம் மாவட்டத்திலுள்ள பெருக்குவட்டான் அல்-மின்ஹாஜ்முஸ்லிம் வித்தியாலயம்
கடந்த 2001.10.03 ம் திகதி ஸ்ரீலங்கா, புத்தளம் மாவட்டத்திலுள்ள ,முந்தல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பெருக்குவ்ட்டான் அல்-மின்ஹாஜ் முஸ்லிம் வித்தியாலயத்திற்கென இடம் பெயர்ந்த முஸ்லிம் அபிவிருத்தி அலகு [டி.எம்.டி.யு] என்ற நிறுவனம் ,கெயா ஸ்ரீலங்காவின் அனுசரணையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிகொண்டு செய்யப்பட்ட அபிவிருத்தி பணிகளின் நிறைவு விழா நிகழ்வில் அதிபர் எஸ்.எம்.எம்.ஹனிபா உரையாற்றுகின்றார்.வீடியோ ஏ.ஏ.எம்.றிழா
Saturday, August 1, 2009
உங்களிடமிருந்து தகவகல்கள் எதிர் பார்க்கப்படுகின்றது
இந்த தளத்தில் இடுகை செய்யக்கூடிய -வீடியோ நறுக்குகள்,புகைப்படங்கள், பத்திரிகைச்செய்திகள்,தகவல்கள் துண்டுப்பிரசுரங்கள்,மற்றும் ஆக்கங்கள், என்பன உங்களிடமிருந்து எதிர் பார்க்கப்படுகிறது. உங்களது ஆக்கங்கள் கொம்பியூட்டரில் தட்டச்சு செய்து அதை பிரதி எடுத்து ஸ்கேன் செய்து ஈ -மெயில் மூலம் அனுப்பவும். கீழ் காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு ஈ -மெயில் முகவரியை பெற்றுக்கொள்ளவும்.
இத்தளத்திற்கு பொருத்தமானவை மட்டும் இடுகை செய்யப்படும்.
மேலதிக விபரங்களுக்கு:-+94714915703
Subscribe to:
Posts (Atom)