Saturday, March 20, 2010

தேசிய வீர மாணவர் விருது வழங்கப்பட்டுள்ளது.


இலங்கையின் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட இரண்டாவது தேசிய வீர மாணவர் விருது வழங்கும் நிகழ்வு கடந்த 2010.03.19 ம் திகதி பத்ரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது . இந் நிகழ்வில் மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி செல்வி சின்னராசா தனுசிகா அவர்களுக்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் உக்கிரமாக யுத்தம் நடை பெற்ற நேரத்தில் படுகாயமுற்ற பதினொரு வயது மாணவனை பதுங்கு குழியில் இருந்து காப்பா ற்றியதற்காகவே இவ் விருது வழங்கப்பட்டுள்ளது. இவரை 'முஸ்லிம் அகதியும்' மனப் பூர்வமாகப் பாராட்டுகிறது. இவர் மேலும் சில படுகாயமுற்ற நபர்களை காப்பாறினார் என்றும் கூறப்படுகின்றது.

Sunday, March 14, 2010

முல்லைத்தீவு முஸ்லிம் யுவதிக்கு அமெரிக்காவில் மா பெரும் விருது.

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த் அப்துல் மஜீத் ஜென்ஸீலா என்பவருக்கு அமெரிக்காவின் அதியுயர் விருதுகளில்ஒன் றான "துணிச்சல்மிக்கபெண்' என்ற விருது . வழங்கப்பட்டுள்ளது.2010 ம் ஆண்டு மகளிர் தினத்தை யொட்டி சர்வ தேச ரீதியில் பத்துப் பெண்களுக்கு இவ்விருதுகள் அமெரிக்காவில் வழங்கப்பட்டது. பத்து விருதுகளில் ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்நீருற்றை பிறப்பிடமாகவும், இடம் பெயர்ந்த நிலையில் புத்தளத்தில் வாழ்ந்து வருபவரான அப்துல் மஜீத் ஜென்ஸீலா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது அமெரிக்க இராஜாங்கச் செயலகத்தில் வைத்து அமெரிக்க இராங்கச் செயலாளர் ஹிலாரி ஹிளிண்டன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதியின் பாரியார் மிச்சல் அவர்களும் கலந்து சிறப்பித்தார். ஜன்சீலாவை 'முஸ்லிம் அகதியும்' வாழ்த்துகி்றது.


இவர் புத்தளத்தில் உருவாக்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனமான சமூகஅபிவிருத்தி நிதியத்தின் [C.T.F] பணிப்பாளர்களில் ஒருவராகப்பணியாற்றுகின்றார். இந்த நிறுவத்தின் மற்றொரு பணிப்பாளர் கடந்த மாதம் காணாமல் போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா மேடையில் பதுல் மஜீத் ஜென்ஸீலா அவர்கள். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் பாரியார் மிச்செல் அவர்கள்ளுடன் நடுவில் அப்துல் மஜீத் ஜென்ஸீலா அவர்கள். விழா மேடையில் விருது வழங்கியவர்கள்,விருதுகள் பெற்றவர்கள், பார்வையாளர்கள் மத்தியில் அப்துல் மஜீத் ஜென்ஸீலா அவர்களும் காணப்படுகின்றார்.

Friday, March 5, 2010

அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

இததளத்தில் புத்தளம் மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் பற்றி பல வகையான தகவல்களைப் பார்த்திருப்பீர்கள்.அதன்உண்மைத்தன்மையை ஓரளவு கணிப்பீடு செய்யவும் முடிந்திருக்குமென முஸ்லிம்அகதி எண்ணுகிறது.
அண்மையில்; புத்தளம் மாவட்டதில் தொடங்கப்பட்டதும், புத்தளம் மற்றும்வேறு சில மாவட்டங்களிலும் உப
அலுவலகங்களை கொண்டிருக்கும் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளர் கிழக்கு மாகாணத்தில் காணமல் போயுள்ளார். இவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.என அறிய முடிகிறது. இந்நிலையில் குறித்த நிறுவனம் சார்பான இரகசியங்கள் மக்கள் மத்தியில் பேசபடுகின்றன. இதில் குறித்த் நிறுவனத்தின் அல்லது பணிப்பாளர்களின், அல்லது பணியாளர்களின் பெயர்களிலுள்ள தென்னந்தோட்டங்கள் அசையும்,அசையா சொத்துக்கள். மற்றும் உயர் பதவிகள் சார்பான போட்டிகள் மற்றும் பண மோசடிகள் என மக்கள் பேசுவதுடன் உயர் பதவிகள், சார்பாகவும் இழுபறிகள் இருப்பதாக பேசப்படுகிறது.
சில அரச சார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக எழுதப்படும் திட்டங்களில் பணியாற்றும் அதிகாரிகளின் கொடுப்பனவுகள் அரசாங்க அமைச்சர்களை விடவும் அதிகமாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள்வேதனைப் படுவதையும் கேட்க முடிகிறது. இந் நிலையில் அரசும் அண்மைக் காலங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளில் அதிர்ப்தி கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.மக்களும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவைகளை மனப்பூர்வமாக பாராட்டுவதுமில்லை. சில நிறுவனங்களுக்கு அரச உயர் அதிகாரிகளின் மற்றும் அரசியல் வாதிகளின் ஆசீர் வாதம் இருப்பதால் அரச சார்பற்ற நிறுவனங்களின் குறைபாடுகளை மக்கள் வெளிப்படையாகப் பேச அஞ்சுகின்றனர்.
எது எப்படி இருப்பினும் நாட்டின் அல்லது பாதிக்கப்பட்ட சமூகங்களின் பெயர்களைப் பயன் படுத்தி சர்வதேசநிதி நிறுவனங்களிடம் பெறப்படும் நிதிகள் உரிய நோக்கத்தை நிறைவு செய்வதனை உறுதிப்படுத்தும் பொறுப்பினை அரசு கொண்டிருக்க வேண்டும் . கடந்த காலத்தில் நிதிநிறுவனங்களின் இலங்கைக்கான தரகர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளில் அரசு தலையீடு செய்யக்கூடாதென கோரும் படிவங்களை வலுவற்ற அரச சார்பற்ற நிறுவனம் முதல் வலுவான நிறுவனங்களுக்கும் வழங்கி பூர்த்தி செய்து பெற்றுள்ளனர். இப்படிவங்கள் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமானதல்ல என முஸ்லிம் அகதி கருதுகி்ன்றது
இவற்றை எல்லாம் அரசு கவனத்தில் கொண்டு அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகளின் சட்ட விரோதமாகச் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் பற்றி ஆராய வேண்டும். அத்துடன் சந்தேட்கத்துக்குள்ளான நிறுவன அதிகாரிகளின் நண்பர்கள், மற்றும் குடும்பத்தவரின் பெயர்களிலுள்ள சொத்துக்களும் சேர்த்த விதம் பற்றியும் கவனஞ்செலுத்துதல் அவசியமென முஸ்லிம் அகதியும் பாதிக்கப்பட்டவர்களும் விம்புகின்றனர். அப்போதுதான் ஜனாதிபதியின் மகிந்த சிந்தனை நிறைவானதாகும்.