Thursday, December 30, 2010

அல்-குர்ஆனைக்கற்று அதன்பாற்செயற்படுவோம்.

கேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா? print Email
ஐயமும்-தெளிவும் - பிற மதத்தினருக்காக
சனி, 16 டிசம்பர் 2006 18:00

இல்லை. அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டதுதான் திருக்குர்ஆன். இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதிவேதமாகியத் திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். திருக்குர்ஆன் கற்றுத்தரும் வாழ்க்கை முறையை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்காதவர்கள் முஸ்லிமல்லாதவர்கள்.

இந்த அடிப்படையில் நோக்கினாலே திருக்குர்ன் உலக மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இக்கேள்விக்கு திருக்குர்ஆன் கூறும் பதிலை கவனித்தாலும் அது உலக மக்கள் அனைவரையும் நல்வழிப்படுத்த அருளப்பட்டது தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இறுதித்தூதராக முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மொத்த உலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட குர்ஆனும் மொத்த உலகத்திற்கும் பொதுவானது என்பது தெளிவாகிவிட்டது. அதனை குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது:

"இந்தக் குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டி. சத்தியத்தையும், அசத்தியத்தையும் அது பிரித்தறிவிக்கிறது." (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 ஸூரத்துல் பகராவின் 185வது வசனம்).

3:138. "இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது ".

38:87. ''இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை."

இந்த குர்ஆனுடைய போதனைகள் நாத்திகர்களுக்கும், யூதர்களுக்கும், கிறஸ்தவர்களுக்கும், சிலையை வணங்குபவர்களுக்கும் , ஆண்களுக்கும், பெண்களுக்கும், அனைத்து உலக மக்களுக்கும் பொதுவானதுதான்.

தனக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனின் வசனங்களை இறைக்கட்டளைப்படி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் உலகுக்கு எடுத்தியம்பியதாலேயே திருக்குர்ஆன் வார்த்தெடுக்க விரும்பும் நேரான வாழ்க்கைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த இந்த முஸ்லிம் சமுதாயம் அமையப்பெற்றது. அவ்வாறு திருக்குர்ஆன் வழிகாட்டுதல்படி ஒரு சமுதாயம் அமைப்பெற்ற பிறகு, அதனை அதனால் உருவான சமுதாயத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்.

இறைவனை இவ்வுலகின் படைப்பாளனாக ஏற்றுக் கொண்டவர்கள்(முஸ்லிம்கள்) எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தனிப்பட்ட சட்டங்கள் குர்ஆனில் இருக்கின்றதே தவிர, இந்த மொத்த குர்ஆனும் முஸ்லிம்களுக்காகவே வந்தது என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.

திருக்குர்னுக்கு முந்தைய வேதங்கள் அதனை கொண்டு வந்த தூதரின் சமுதாயத்தை நேர்வழிப்படுத்துவதற்காக அத்தூதருக்கு அருளப்பட்டது. எனவே அவ்வேதங்கள் அத்தனி சமுதாயத்திற்கு மட்டும் உரியது என்ற வாதத்தில் உண்மையுண்டு. ஆனால் அதே நேரம் திருக்குர்ஆன் தனியொரு சமுதாயத்தை நேர்வழிப்படுத்த அருளப்பட்டதல்ல.

மொத்த உலகமும் படைத்தவனை மறந்து கணடதையெல்லாம் வணங்கி தான்தோன்றித்தனமாக வாழ்ந்து கொண்டிருந்த நேரம், அவர்கள் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டி இறைவனின்பால் மொத்த உலகையும் அழைக்க அருளப்பட்டதே இறுதி வேதமான இத்திருக்குர்னாகும்.

எனவே இது தனியொரு சமுதாயம் உரிமை கொண்டாடும் வேதமல்ல. மாறாக அகிலாத்தாருக்கெல்லாம் வழிகாட்டியாக - நல்லுபதேசமாக - அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக அருளப்பட்டதேயாகும்.

இறைவன் மிக அறிந்தவன்।

http://www.satyamargam.com/३६३ நனறி சத்தியமார்க்கம்।கொம்

Monday, December 27, 2010

கடவுளுக்கு எதற்காக?மனைவி

என்னைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றோ, இல்லையென்றோ சொல்ல முன் வரவில்லை. அதுபோலவே நீங்கள் அனைவரும் என் பேச்சைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமென்று கூறவில்லை. இன்னொன்றும் சொல்கிறேன், கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொள்ள அறிவாளி தேவையில்லை. சாதாரணமாக ஒரு முட்டாள்கூட சொல்லிவிடலாம். ஆனால், கடவுள் இல்லையென்று மறுத்துக்கூற ஒரு அறிவாளியால்தான் முடியும். மறுப்பதற்கான பல ஆதாரங்களைச் சொல்ல வேண்டும்; சிந்தித்து அதற்கான காரணங்களைக் கூற வேண்டும்.



உலகில் இன்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சுமார் 100 -கோடி மக்கள் இருப்பார்கள். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் சற்றுக் கூடுதலாக இருப்பார்கள். நாம் எல்லோரும் கடவுள் நம்பிக்கை உடையவர்களா? அப்படியானால் முகம்மதியர், கிறித்தவர் இவர்கள் நிலை என்ன? கிறித்தவர், முகம்மதியர்களுக்கு கடவுள் ஒன்று தானே! கிறித்தவர், முகம்மதியர்களை, உங்கள் கடவுள் எப்படியிருக்கிறார் என்று கேட்டால், யோக்கியமான கடவுள் என்கிறான்; அதற்கு உருவம் கிடையாது என்று சொல்லுகிறான்.



ஒழுக்கமே உருவானவர், கருணையை உடையவர், அவருக்கு ஒன்றும் தேவையில்லை என்று வேறு சொல்லுகிறான். ஏன் அப்படிப்பட்ட கடவுள் உங்களுக்கு இருக்கக்கூடாது என்று கேட்கிறேன். அவனுக்கு ஒரே ஒரு கடவுள் என்றால் நமக்கு எத்தனை ஆயிரம் கடவுள்கள்? அவர்களின் பெயர்களை எழுத வேண்டுமென்று ஆரம்பித்தால் மைதான் தீர்ந்துவிடுமே தவிர பெயர்கள் முடிவடையாதே! அதற்கெல்லாம் என்ன ஆதாரம்? யாராவது ஒரு பார்ப்பானைக் கேளுங்கள் எப்படி அந்தக் கடவுள்கள் ஏற்பட்டன, எப்போது, எங்கே என்று கோடிக்கணக்கிலா நமக்குக் கடவுள்கள் இருப்பது? நாங்கள் தலையெடுத்து இதையெல்லாம் கேட்காமல் விட்டிருந்தால் மைல் கற்கள், பர்லாங்குக் கற்கள் எல்லாம் கடவுள்களாகி இருக்குமே. படுத்திருக்கிற அம்மிக்கல்லை எடுத்து நிறுத்திவைத்து குங்குமம் மஞ்சள் பூசி விட்டுவிட்டால் அதுவும் ஒரு கடவுள். இதையெல்லாம் யார் கேட்கிறார்கள். இதைப்பற்றி நீங்கள் சிறிதளவாவது சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?



யானை, பன்றி, மீன், காக்கை, எருமை, பாம்பு இந்த உருவமுள்ளது எல்லாம் நமக்குக் கடவுள்கள், இவை எல்லாம் எதற்காக? புற்றைக் கண்டால் பால் ஊற்றுகிறான்; கழுகு ஆகாயத்தில் பறந்தால் கன்னத்தில் அடித்துக் கொள்கிறான்; மாட்டைப் பார்த்தால் கும்பிடுகிறான். ஒரு கடவுளுக்கு யானை முகம், மூன்று முகம் அய்ந்து முகம், 10 - முகம், பானை வயிறு; இன்னொரு கடவுள் ஆயிரம் தலையுடையாள், இரண்டாயிரம் கையுடையாள். இந்த கடவுள்களுக்கெல்லாம் என்ன வேலை? எதற்காக கடவுள் அம்சங்களைக் குறைவாக அவமானமாக நம்மிடையே புகுத்த வேண்டும்? இதைப்பற்றி யார் சிந்தித்தார்கள்?



1,500 - வருடங்களுக்கு முன்பு புத்தர்தான் கேட்டார். முதலில் அறிவுக்கு வேலை கொடு, சுதந்திரமாக இருக்கவிடு, எதையும் ஏன்? எப்பொழுது? எப்படி? என்று கேள் என்றார்; மகான் சொன்னார்; ரிஷி சொன்னார், கடவுள் சொன்னாரென்று எதையும் நம்பிவிடாதே என்றார். அவர் பேச்சை யார் கேட்டார்கள்? புத்தர்களை நாட்டை விட்டே ஓட்டினார்கள். அவர்கள் பெண்களை கற்பழித்தார்கள். வீடுகளைக் கொளுத்திப் போட்டார்கள். கொன்று விடுவேன் என்று அவரது சீடர்களைப் பயமுறுத்தினார்கள். ஏன் புத்தர் பிறந்த இடத்தில் அவர் கொள்கைகள் இல்லை? வெளிநாடுகளில் எப்படி பரவியது? பரவியதற்குக் காரணம் என்ன? அதற்குப் பிறகு வள்ளுவர் சொன்னார், எதிலும் உன் அறிவுக்கு வேலை கொடு என்று. அவர் சொன்னது எங்கே போயிற்று? எல்லாவற்றையும் குப்பைத் தொட்டியில் போட்டார்கள்.



பரம முட்டாள்தனமான மனுதர்மம், பகவத்கீதை, இராமாயணம், பாரதம் இவற்றைத்தானே மக்கள் கையாண்டார்கள்? எத்தனை பேருக்குத் தெரியும் இப்படித் தானே மகான் சொன்னார். ரிஷி சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார், வெங்காயம் சொன்னார் என்று நம் எல்லோரையும் படுகுழியில் தள்ளிவிட்டார்கள். அமெரிக்கா, துருக்கியில் இராமாயணக் கதையைச் சொன்னால் அங்கிருப்பவர்கள் எல்லாம் சிரிக்க மாட்டார்களா? சங்கராச்சாரியார் ஒரு மாத காலமாகச் சுற்றினார். அவரைப்பற்றி நம்மவனே அருள்வாக்கு என்று எழுதுகிறான். சங்கராச்சாரியாருக்கு அத்வைத மதம், இரண்டு கடவுள் கிடையாது. ஒரே ஒரு கடவுள் அதுவும் நான்தான் என்பார். உண்மையிலேயே சங்கராச்சாரியாருக்கு கடவுள் கிடையாது. வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள். அவர் கடைப்பிடிப்பது மாயாவாதம், பூசுவது திருநீறு, பூசை செய்வது ஒரு பெண் கடவுள். இதுபோல்தான் தவிர வேறு என்ன? கடவுளுக்கு பிறப்பேது இறப்பேது?



நம் கடவுள்களை எடுத்துக் கொள்ளுங்களேன். இராமன் நவமியில் பிறந்திருக்கிறான். சுப்ரமணியன் சஷ்டியில் பிறந்திருக்கிறான். கிருஷ்ணன் அஷ்டமியில் பிறந்தான் என்கிறான். இறப்பு பிறப்பு கொண்டவர்கள் எல்லாம் கடவுள்களா? இதையெல்லாம் இந்த 1958 - ஆம் வருடத்திலேகூட ஏன், எதற்கு என்று கேட்க ஆள் இல்லையே இதற்கெல்லாம் நாம்தானே பணம் கொடுக்கிறோம். எதற்காக கடவுளுக்குப் பூசை போட வேண்டும், உணவைப் படைக்க வேண்டும்? நம்முடைய ஆள் பணம் கொடுத்தால் பார்ப்பான் கடவுள் சிலையைச் சிங்காரிக்கிறானே தவிர அந்தப் பார்ப்பான் ஒரு நாளைக்காவது கடவுளைச் சிங்காரித்ததுண்டா? இவ்வளவு செய்தும் நாம் எல்லோரும் தாசிமகன், வேசிமகன், சூத்திரன்தானே?கடவுளுக்கு எதற்காக மனைவி? அப்படித்தான் ஒரு பெண்டாட்டியோடு விடுகிறாயா? பூதேவி ஒருத்தி, சீதேவி ஒருத்தி இரண்டு பெண்டாட்டி பற்றாமல் தாசி வீட்டுக்கு வேறு தூக்கிக் கொண்டு ஓடுகிறான். எதற்காக கடவுளை துலுக்க நாச்சியார் என்கிற தாசி வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும்?



இங்கிருக்கின்ற முகமதியர்கள் மைனாரிட்டிகள் மெஜாரிட்டியாக இருந்திருந்தால், எங்கள் ஜாதிப் பெண் உங்கள் கடவுளுக்குத் தாசியா என்று உதைப்பான், ஒரு தடவை தான் திருமணம் கடவுளுக்கு செய்கிறாயே, பிறகு வருடா வருடம் வேறு எதற்கு? முன் வருடம் செய்த மனைவியை யார் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்? செய்து வைத்த திருமணம் ரத்தாகி விட்டதா? அப்படியானால் எந்தக் கோர்ட்டில் தீர்ப்பு நடந்தது? இம்மாதிரிக் காரியங்களையெல்லாம் செய்து நீங்கள் ஜாதித்தது என்ன? கிறிஸ்துவரையும் முகமதியரையும் உங்கள் கடவுள் எப்படிப்பட்டவர் என்று கேட்டுப் பாருங்கள். அன்பாலும் அருளாலும் ஆனவன் ஆண்டவன் என்று கூறுவார்கள். நம் கடவுள்களைப் பாருங்கள்; ஒரு கடவுளிடம் கோடரி இருக்கும், மற்றொரு கடவுளிடம் வில், அம்பு இருக்கும். இப்படித்தானே சூலாயுதம் மழு, அரிவாள், சக்கரம் என்று கசாப்புக் கடையில் இருப்பது போல இருக்கிறது? எதற்காக இந்தக் கருவிகள்? அன்பே உருவான கடவுளுக்கு - கருணையே வடிவான கடவுளுக்கு எதற்கு இதெல்லாம்? ஆச்சாரியார், ஒரே கடவுள்தான் நம்மையெல்லாம் படைத்தார்; நடுவில் யாரோ இப்படிச் செய்துவிட்டார்கள். அதற்கு நாங்கள் என்ன செய்வது? என்று சொல்லுகிறார். அப்படியானால் அவர்கள் செய்துவிட்டுப் போய்விட்டால் உனக்கு எங்கே போய்விட்டது புத்தி? ஏன் இதையெல்லாம் சீர்திருத்தக்கூடாது?



அன்புமிக்க தோழர்களே! இதுமாதிரியான கேடான காரியங்களைப்பற்றி எனக்குமேல் நிறைய அநேகருக்குத் தெரியும். ரொம்பப் பேர் படித்திருக்கிறார்கள். ஆனால் என் போல் வெளியே சொல்ல முடியவில்லை. எங்கே தங்கள் வயிற்றில் மண்விழுந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள். ஏன் ஒவ்வொருவனும் எதற்கெடுத்தாலும் கடவுள் கடவுள் என்கிறான்? சதிரானால், பாட்டுப்பாடினால் எல்லாக் காரியங்களுக்கும் கடவுள் பெயராலேயே செய்கிறார்கள். இது மாதிரியான கொடுமைகளை நீக்க நாட்டில் ஆள் இல்லையே, 1000, 2000 - வருடமாக சூத்திரன், வேசிமகன் என்று இருக்கும் பட்டத்தை நீக்க இந்த நாட்டில் இருக்கிற கட்சிகள் என்ன பரிகாரம் செய்தன? மனிதர்களுள் பிரிக்கும் சக்தியை எதிர்த்து எந்தக் கட்சி என்ன செய்தது?



(தந்தை பெரியார் -"விடுதலை" -25-12-1958)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_29.हटमल
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&catid=174:periyar&id=2927:2008-08-21-19-28-०१ இத்தளத்திற்கு நன்றிகள்-முஸ்லிம் அகதி

Saturday, December 18, 2010

முல்லைத்தீவில் சமூகங்களுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய குழுக்களை அமைப்பது அவசியமாகிறது.

முஸ்லிம் அகதி முல்லைத்தீவுக்குச்செல்லும் வழியில் வவுனியாவின் முல்லைத்தீவுக்கு செல்லும் பஸ்ஸை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.அவரது பார்வை மட்டும் அவரது முன்னாள் முல்லைத்தீவு நண்பர்கள் யாராவது சந்திக்க மாட்டார்களாவென தேடிக்கொண்டிருந்தது.ஆம் அதோ அவர் முன்னான் கோடீஸ்வரன்,தொழிலதிபதி,சமூகசேவையாளர்,வாகனங்களின் உரிமையாளர் கொழுத்த அழகான மனிதர்.ஆனால் இன்று குழிவிழுந்த கண்களுடன், கையிலுள்ள உரப்பைகளில் சில உணவுப்பொருட்களைப்போட்டு சுமநதவராக கால் நடையாக தனது முகாமை நோக்கி சோகத்துடன் நடந்து கொண்டிருப்பவரை ஓரளவு அடையாளங்கண்டு கொண்டதும் அவரத பெயரைச் சொல்லி நீங்களா? என முஸ்லிம் அகதி கேட்டதும் பதிலுக்கு நீங்கள் யாரென கேட்டபடி முஸ்லிம் அகதியின் முகத்தை நோக்கினார்.முல்லைத்ததீவு பல-நோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் நீங்கள் தலைவராக இருக்கும் போது உங்களுடன் உபதலைவராகவிருந்த முஸ்லிம் என தன்னை அடையாளப் படுத்தியதும் ,என்னடாப்பா உங்கட ஆடகள் வந்ததும் குத்திப்பேசுறாங்கள்.என்ர குடும்பத்தில அதிகமானவர்கள் சுனாமியில போயிற்ரினம்.மிஞசினவையில 2009யுத்தத்திலயும் போயிற்ரினம்।என்ர வீடும் சுனாமியில கடலுக்குள்ள போயிற்றுது।என்ர கூட்டாளியும் கவலையில் குடிச்சே.... போயிட்டான்।இப்பவும் முகாமில கிடந்து நாங்கள் கஷ்டப்படேக்க வாற உங்கடஆட்கள் பழையவிடயங்களை குத்திப் பேசுறாங்கள் என்டா?“என நண்பன்என்றஉரிமையுடன்”முல்லைத்தீவு நகரப் பிரதேச முஸ்லிம் ஒருவரின் பெயரையும் குறிப்பிட்டார்.நான் அப்படி பேசுபவர்களையெல்லாம் மனநோயாளிகளாகவேபார்க்கின்றேன்.நான் அப்படியானவர்களை வெறுக்கின்றேன்.எனக்கூறி குறித்தகோதரருக்குஆறுதல்கூறினார்.
மற்றொருவரைச்சந்தித்த போது.....உங்களுடைய ஆட்கள் செய்யும் தவறுகளுக்கு சட்டநடவடிக்கை எடுக்கவும் உரிய அதிகாரிகளுக்கு முடியாமலிருப்பதாகவும் கூறினார்.வெளிமாவட்ட அரசியல்வாதிகளின் கையாட்களின் செயற்பாடுகள்தான் பொருத்தமற்றதாக காணப்படுவதாகவும் அவர்களின் சுயஇலாபத்திற்கான செயற்பாடுகள் எமது இரு சமூகங்களுக்கு மத்தியிலும் பிளவுகளை மீளவும்-ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.எனவே உங்களைப்போல சமூக ஈடுபாடுடையவர்களும்,நாமுமிணைந்து இச்செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டுமெனக் கூறினார்.
வைத்திய அதிகாரி ஒருவரைசந்தித்த போது ........ விடுதியிலுள்ள தமது உறவுகளான நோயாளிகளை பார்வையிடநேரம்தவறிவரும் சில முஸ்லிம் இளைஞர்கள் கடமையிலுள்ள காவலாளியுடன் முறண்படுவதாகவும் வெளியில வா பார்த்துக்கொள்ளுறன்என-அச்சுறுத்துவதாகவும் கூறினார்.ஆயுத கலாச்சாரமோ,றவ்டீசமோ தேவையில்லை.நாம் முன்னர் இங்கு வாழ்ந்தது போல சமாதானமாக வாழக்கூடிசூழலை எற்படுத்த உங்களைப்போன்றவர்களின் ஒற்றழைப்பும்,முயற்சியும் அவசியமெனவும் கூறிப்பிட்டார்.
இது சார்பான விடயங்களை ஒரு முஸ்லிம் சகோதரரிடம் பேசியபோது அவர் சொன்ன விடயம் “அமைச்சரொருவரினால் வழங்கப்பட்ட அடையாளஅட்டையை ஒரு வைத்திய அதிகாரிக்கு காண்பித்து எச்சரித்ததாகவும் அதன்பின்னர் அந்த வைத்திய அதிகாரி தன்னிடம் சரண்டெட் ஆனதாகவும் கூறி ஒருவர் பீற்ரிக்கொண்டாராம்” இவர்களுக்கெல்லாம் காலம் பதில் சொல்லுமென முஸ்லிம் அகதி கருதுகிறது.
இப்படி சொல்லிவிட்டு சும்மா இருந்துவிட முடியாது।முல்லைத்தீவு மாவட்டத்தில் அக்கறையுடைய முஸ்லிம்கள் அனைவரும் இப்படியான கீழ்த்தரமான செயற்பாடுகளைளயுடையவர்களை பொறுப்பான உண்மை முஸ்லிமகளாக முல்லைத்தீவில் வாழக்கூடியவர்களாக மாற்றி அமைப்பதற்கான செயற்பாடுகளில் இறங்கவேண்டுமென “முஸ்லிம்அகதி” எதிர்பார்க்கின்றான். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லையேல்......

முல்லைத்தீவு தண்ணீரூற்று ஜூம்ஆப்பள்ளிவாசலில்“முஸ்லிம்கள் எப்படி வாழவேண்டும்” என்ற தலைப்பில் கொத்பா பேருரை.

கடந்த வெள்ளிக்கிழமை(2010.12.17) சிறீலஙகா,முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நீராவிப்பிட்டி“மஸ்ஜிதுல் நூறாணியா” ஜூம்ஆப்பள்ளிவாசலில் மேற்கூறிய தலைப்பிலான கொத்பாபேருரை நிகழ்த்தப்பட்டது.(கொத்பா என்பது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிவாசல்களில் முஸ்லிம் சமூகம் முறையான வாழ்க்கை வழிபாடு களை செய்வதற்கு வழிகோலும் முகமமாக அல்லாஹ் வினால் வழங்கப்பட்ட அல்-குரஆன் கூறும் கட்டாய வழிகாட்டல களையும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய கூற்றுக்கள் (அல்-ஹதீஸ்) போன்றவற்றிலிருந்து ஆதாரங்களை முன்வைத்து கால நேரங்களுக்கமைவாக, முஸ்லிம்கள் சரியான வழியில் செல்வதற்கு செய்யப்படும் உபதேசமாகும்ஈஇதில் ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் கலந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது। ) இககொத்பா பெருரையை தற்போது புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும், முல்லைத்தீவு,தண்ணீரூற்ரைச் சேர்ந்த மௌலவி அல்-ஹாஜ் U.A.அப்துல் வதூத் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
நாம் பல வருடங்களுக்கு முன்னர் இந்த மண்ணிலிருந்து வெளியேற்றப் பட்டோம்।தற்போது நமது மண்ணுக்கு மீண்டும் வரக்கூடிய,வாழக்கூடிய நிலைமையை அல்லாஹ் ஏற்படுத்தித்தந்துள்ளான்।நாம் இச்சந்தர்ப்பத்தை சரியாகப்பயன் படுத்த வேண்டும்।மார்க்கத்தில் கூறிய விடயங்களை முறையாகப்பின்பற்ற வேண்டும்।நாம் மார்க்கக் கடமைகளை மட்டுமல்லாது நமது நல்ல பண்புகள்மூலம் அடுத்த சமூகத்தினரின மனங்களை வெண்றெடுக்க வேண்டும்।அடுத்த சமூகத்தினர் மனம்நோக நடந்து கொள்ளக்கூடாது।அவர்கள் மீது அன்பு காட்டுதல் வேண்டும்।அடுத்தவரின் பொருளை அபகரிப்பதோஈ, உரிமையாளரின் அனுமதியின்றி அதை பயன் படுத்துவதோ ஒரு முஸ்லிமுக்கு கறாமாகும்(விலக்கப்பட்டது) எனவே அடுத்தவரின் பொருட்களுக்கு ஆசைப்படக்கூடாது என்பதை அறைந்துரைத்தார் । மேலும் ஒருவரை ஒரு பாம்பு தீட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம்।அப்பாம்பு தன்வாய் மூலமாக மனிதனுக்கு தனது விஷத்தை ஏற்றிவிடுகிறது।அதனால்அந்தப்பாம்புக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.ஆனால் கடியுண்ட மனிதன் பாரிய உபாதைகளுக்கும்,சில வேளை இறப்புக்குள்ளாகின்றான்.அதுபோல் நமது சில செயற்பாடுகள் எமக்கு எந்தவித நன்மைகளையும் தராவிட்டாலும் அடுத்தவரின மனதை புண்படுத்திவிடும் என்பதனை நினைவில் வைத்து நாம் செயற்பட வேண்டும் என்றும் உதாரணத்துட்ன்அறிவுரை வழங்கினார்.


Saturday, December 11, 2010

ஊற்றங்கரை பிள்ளையார் கோவிலில் அதிசயமான பாடல்

கடந்த புதன் கிழமை(2010.12.15) முஸ்லிம் அகதி தனது தாய் மண்ணுக்கு விஜயம் ஒன்றைச் செய்திருந்தார்.ஆம் சிறீலங்காவிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல்யமான கிராமமான தண்ணீரூற்று என்னும் அழகிய கிராமம்தான் அவர் பிறந்த ஊர்.இங்கேதான் ஊற்றங்கரை பிள்ளையார் கோவிலும் அதிலிருந்து சுமார் ஐநநுர்று மீற்றர் துர்ரத்தில் தண்ணீரூற்று முகைதீன் ஜூம்ஆப்பள்ளிவாசலும் காணப்படுகிறது.அத்துடன்இருசமூக மக்களும் அருகருகே வாழுகின்றனர் என்பதை விட ஹிந்து,முஸ்லிம் குடும்பங்கள் கலந்து வாழும் கிராமம் தான் தண்ணீரூற்று எனச்சொல்லலாம். முஸ்லிம் அகதி குறித்த பள்ளிவாசலுக்கு முன்னுள்ள தனது உறவினரின் வீட்டில்தான அன்றிரவை கழிக்கவேண்டியதால் அங்கேயே தங்கிவிட்டார்.
வழமைபோல் அதிகாலையில் ஊற்றங்கரை பிள்ளையார் கோவிலிலின் ஒலி பெருக்கி பஜனைப்பாடல்களை ஒலிக்கத் தொடங்கியது.முஸ்லிம் அகதியின் துர்க்கம் கலைந்து அமைதியாகப்படுத்தே இருந்தபோது அந்த அதிசயம் நடந்தது.
அகதியின் ஐம்பது வருடகாலத்தில் அக்கோவிலில் கேட்டிருக்காத பாடல்தான் முஸ்லிம் அகதியை வாரிச்சுறுட்டி எழுந்திருக்கச் செய்தது. அப்பாடல் லாயிலாகஇல்லல்லாஹூ பாபா முஹம்மது றஸூலுல்லாஹ் (இதில் ஒரு சொல் தெளிவில்லாமலிருந்தது பாபர் அல்லது பாபா போலவு்ம் விளங்கியது.) இது பலமுறை பாடப்பட்டது.இந்த லாயிலாகஇல்லல்லாஹூ முஹம்மது றஸூலுல்லாஹ் என்பது அரபிச் சொல்லாகும் இதன் பொருளாவது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்ததவிர வேறு யாருமில்லை. முஹம்மது நபி (ஸல்லல்லாஹூ அலைவஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் உண்மை அடியாரும் துர்தரும் ஆவார்கள்.இதைனை கலிமா தையிபா என முஸ்லிம்கள் கூறுவார்கள்.ஒரு இஸ்லாமியன் ஏகத்துவத்தை இந்தக் கலிமாவின் மூலம் உறுதிப்படுத்திக் கொளவதை அவதானிக்க முடியும். இஸ்லாமிய மார்க்கத்தை தனது வழியாக ஏற்க விரும்பும் ஓருவர் இதையே முதலில் மொழிவதுடன் அதன்பால் நம்பிக்கை வைத்த செயலாற்றுவார். இக்கலிமா பிள்ளையார் கோவிலில் ஒலிப்பது புதுமையாக இருந்தாலும் அவர்கள் மூலம் ஹிந்து மதத்திலும் இஸ்லாம் சார்பான விட்யங்கள் மறைந்து கிடப்பததனை கோவில் பஜனை மூலம் முதன்முதலாக உணர முடிகிறது. எனவே இந்தக் கலிமா பற்றி ஹிந்து சகோதரர்களிடம் அறிந்து கொள்ள முஸ்லிம் அகதி விரும்புகிறது. தெரிந்த சகோதரர்கள் தமது கருத்துக்களை இதன் பின்னுர்ட்ட லாகத்தரவும். மேலும் அவர்களுக்கு இதனை விளக்கிச்சொல்ல வேண்டிய பொறுப்பும் முஸ்லிம் களுக்குண்டு எனவே முஸ்லிம்களும் தமது கடமையாக நினைத்து அவர்களுக்குகலிமாவின் அற்புத விளக்கங்களை சொல்லுங்கள். தவறான வழியில் சென்று கொண்டிருப்பவர் தனது புதிய வழியாக சரியான வழியென மீண்டுமொரு தவறான வழியை தேர்ந்தெடுக்கு முன்னர் சரியான வழியைக்காட்டவேண்டியது சரியான மார்க்கத்தில் செல்லக் கூடியவரின் பொறுப்பல்லவா?

Monday, December 6, 2010

எமது இலக்கினை வெண்றெடுக்க தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை அவசியம்- பாராளுமன்ற உறுப்பினர்-சிறிதரன்


மக்களின் ஒற்றுமை மூலமே எமது இலக்கினை வெண்றெடுக்க முடியும். எனவேதான் தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்த சில தீயசக்திகள் முயற்சிக்கின்றன. இவ்வாறு தமிழ் தேசிய கூட்ட மைப்பின் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
கடந்த 2010 நவம்பர்மாதம் திங்கட் கிழமை யாழ் பல-நோக்கு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற “தற்கொலைக் குறிப்புகள்” என்ற நுர்ல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்று கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எனவே கடந்தகாலத்தில் எற்பட்டவையை மறந்து தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் இணைவதன் மூலமே எமது இலக்கினை வெண்றெடுக்க முடியுமென்றார்.

Saturday, December 4, 2010

பட்டாணி றாசிக்[G.S.O] கடத்தப்பட்ட பத்தாவது மாதநிறைவில் மதுரங்குளி நகரில் 2010.12..03ம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அல்-ஹாஜ் மௌலவி அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் நிகழ்சி நிறைவின்போது உரையாற்றுகின்றார்.



















சிறீலங்கா.புத்தளம் மாவட்ட முந்தல்,பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள சமீரகம மாதிரி கிராம வீட்டுத்திட்டத்தில் வசித்தவரும்,ஓய்வு பெற்ற கிராம சேவையாளரும், சமூகநம்பிக்கை நிதியம்[C.T.F] என்னும் அரசசார்பற்ற நிதி நிறுவனத்தின் ஆரம்பகர்த்தாக்களிலொருவருமான பட்டாணி றாசிக் என்பவர் கடத்தப்பட்டு பத்து மாதங்களாகியும் கடத்தப்பட்வர் கண்டுபிடிக்கபபடவோ? சந்தேக நபர் பொலீஸாரினால் கைது செய்யப்படவோ இல்லை. என்பதற்காக மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று புத்தளம்,மதுரங்குளி ஜூம்ஆப்பள்ளி வாசலுக்கு முன்பாக2010.12.03ம் திகதி ஜூம்ஆத் தொழுகையின் பின் நடைபெற்றது.இந்நிகழ்வில் சுற்றுப்புறங்களிலிருந்து பெருமளவிலான ஆர்வலர்கள் சமூகமளித்திருந்தனர்.இந்நிகழ்வில் வடமாகான முஸ்லிம் அகதிகளும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.கடத்தப்பட்டவருக்கும் அவரது குடும்பத்ததிற்கும் அநீதி இழைக்கபபடுவதாக புத்தளம்வாழ் புத்திஜீவிகள் கருதுகின்றனர். எனவேதான் இந்நிகழ்வு மூலம் அரசிற்கும்,தேசிய மட்டத்திற்கும்,சர்வதேசத் திற்கும் இக்கடத்தல் நிகழ்வினை கொண்டு செல்வது மட்டுமல்லாது,சட்டத்தின் முன் குற்றவாளியை கொண்டு வருவதற்காகவும் இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பாக சந்தேகநபரொருவர் அடையாளம் காணப்பட்டும் அவர் ஏன்? கைது செய்யப்படவில்லை.என்ற குற்றச்சாட்டு பேரொலியாக ஒலித்தது.கவனத்தில் கொள்ளத்தக்கது.
இந்த சமூக நம்பிக்கை நிதியம்[C.T.F] என்ற நிறுவனம் மன்னார் மாவட்டத் திலிருந்து இடம்பெயர்ந்து வந்த கிராம அபிவிருத்தி நிறுவனத்திலிருந்து[R.D.F] பிரிந்து சென்றவர்களினால் உருவாக்கப்பட்டதாகும்.இதில் வடமாகாண முஸ்லிம் அகதிகள் அதிக மாகவும்,உள்ளுர் வாசிகள் சிலரும் ஆரம்ப காலகட்டத்தில் காணப்பட்டனர். இவ்வமைப்புக்கு இடம் பெயர்ந்த முஸ்லிம் ஒருவரினால் அதிக நிதி,மற்றும் வளங்களையும் பெறும் செல்வாக்கும்,அனுபவமும் இருந்தது.மேலும் அரச நிர்வாக அதிகாரிகளினதும்,அரசியல்வாதிகளினதும் ஆதரவும் இதற்கு நிறைந்து காணப்பட்டது.இதன் காரணமாக புத்தளத்தில் வல்லமை பொருந்திய அரசசார்பற்ற நிறுவனமாக விளங்கியது.இந்நிறுவனம் அகதிகளுக்கு சேவைசெய்ததோ? என்னவோ? நிறவன அதிகாரிகள் சொகுசு வீடுகளுக்கு சொந்தக்காரர்களாவும்,வாகனங்களின் உரிமையாளர்களாகவும், தென்னந் தோட்ட முதலாளிமார்களாகவும்,மற்றும் வசதி வாய்ப்புக்களுடனும் காணப்பட்டனர்.இதைக்கண்ணுற்ற அகதிகள் தமது பெயரில் வந்தததை யார், யாரில்லாமோ அனுபவிக்கின்றனர்.என்று மனங்குமுறினர்.
இதபோன்று றாசிக் ஜீ.எஸ். அவர்களும் அந்நிறுவனத்தில் நடைபெற்று வந்த மோசடிகளைத்தட்டிக் கேட்டதாகவும் அவரது குடும்பம் கூறுகிறது. கேள்வி கேட்டதிற்காக கடத்தலா? இஸ்லாம் சொல்லும் நீதி முறை இதுவா? மனித உரிமைகள் பற்றி முழங்குபவர்களின்[C.T.F] நடவடிக்கையும் இதுதானா? எனவே கடத்தியவரை விடுவித்து அவரது கேள்விகளுக்கு நியாயமான விடையளிப்பதுடன். அகதிகளுக்கு வந்த நிதி மற்றும் பொருட்களை அவர்களுக்கே கொடுத்து விடுங்கள். இதுவே “முஸ்லிம் அகதி”யின் வேண்டுதல்.

குறிப்பு -இந்த நிறுவனம் 1993ம் ஆண்டு ஆரம்பித்ததாக கூறப்படுவதும் பொய்யாகும் “முஸ்லிம் அகதி”க்கு கிடைத்துள்ள தகவல்களை கீழே தரப்படுகிறது. “இவர்கள்தான் அவர்கள்”

particulars of organization:-
01. Name :-Community Trust Fund
02. address :-'Rizna manzil"sameeragama,Kottantivu.[61252]

03. Key,contact persons ;-
[i] MR. P.Rasik
[ii] MR. M.S.Rafeek
[iii] MISS M.S.K.Janzila Majeed

04.Teliphone :- [i] 032-6656 [ii] 032-65292
Fax :- [iii] 032-65203 [iv] 032-65867
E-mail :- rfjny@sltnet.lk ,musni @ sltnet.lk

05. Year in which the NGO Estabished ;-1993

06. [a] date of registration :- 08.02.98 registration No. NWP/P/PD/8/98
[c] Registered with ;-
1. DEPARTMENT OF SOCIAL SERVICE
2. NATIONAL NGO COUNCIL OF SRI LANKA.
3. CENTRAL COUNCIL OF SOCIAL SERVICE

OFFICE BEARERS:- NAME DESIGNATION
1. MR. P.RASIK CHIEF TRUSTEE
2. MRS F.FASLIYA THAHIR ADD, TRUSTEE
3. MR. M.S.RAFEEK MANAGING TRUSTEE [SECRETARY]
4. MRS.K.JANZILA MAJID MANAGING TRUSTEE [FINANCE]
5. M.A.HILMI MANAGING TRUSTEE


Maiin project Titles ;[On-going] Project Period Projec Budjed
1. Income Generation For Mannar 1.09.98 - 30.08.99 508,,000.00
2. Helth Awarness Progranne For puttalam 1.09.98 - 30.05.99 196,000.00
3. Income Genaration For Puttalam 1.08.98 - 31.07.99 203,400.00
4. Income genaration for Nochchiyagamna[I.D.P.s] 1.10.98 - 25.09.99 186,540.00
5.Awarness On Humanrights to I.D.P.s in puttalam 5.05.98 - 04.08.99 50,000.00

PARTICULARS OF HEAD OF ORGANIZATION IN SRI LANKA
[a] Name : MUSTHAFA NIHMATH
[b] Address : KOLANY ROAD,PERUKKUWATTAN,KOTTANTIVU.[61252]
[c] disignation : TRUSTREE GENARAL
[d] Teliphonn No/s : 01-671710

Particulars of Bankers in sri lanka
[i] Bank of Ceylon,Puttalam. A/C 5718.
[ii] Bank of Ceylon,Puttalam. A/C 1534
[iii] Hatton National Bank,Puttalam A/C 3738012
[iv] Hatton National Bank,Mannar A/C 1875



பட்டாணி றாசிக்[G.S.O] கடத்தப்பட்டு எட்டாவது மாதம் நிறைவுற்ற நிலையில்(15.10.2010ல்) புத்தளத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும், வழங்கியதுண்டுப்பிரசுரமும்



90ம் ஆண்டு புகளிடமளித்ததற்கு புத்தளத்திற்கு கிடைத்த பரிசு ...............




Friday, December 3, 2010

முஸ்லிம் காங்கிறஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நுர்ர்தீன் மஸூர் அவர்கள் காலமானார்கள்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நூர்தீன் மசூர் அவர்கள் 2010.12.02ம் திகதி அதிகாலை கொழும்பில் காலமானார்.அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை புத்தளம் நாகவில்லு ஜும்மா பள்ளிவாசல் மையவாடி யில் இடம்பெற்றது.

கொழும்பில் அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப் பட்டபோதிலும், மன்னாரிலுள்ள மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜனாஸா நல்லடக்கம் புத்தளத்திற்கு மாற்றப்பட்டது.

அன்னாரின் பிறப்பிடமான மன்னார், எருக்கலம்பிட்டியில் வாழ்ந்த மக்கள் பலர் புத்தளம் நாகவில்லு பகுதியில் வசித்துவருகிறார்கள். இவர்களின் வேண்டு கோளுக்கமைய நூர்தீன் மசூரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 8.40 மணியளவில் புத்தளம் நாகவில்லுவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான பௌஸி, ரிஷாட் பதியுதீன் உட்பட ஏராளமான அரசியல் பிரமுகர்களும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது அஞ்சலி உரையில், மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் எமது கட்சியின் முன்னேற்றத்திற்கு அயராது உழைத்த ஒரு இளம் போராளி. அத்தகைய ஒரு இளம் உறுப்பினரை நாம் இன்று இழந்து தவிக்கின்றோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மர்ஹூம் நுர்ர்தீன் மஸூர் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டு அவருக்கு சொர்க்கத்தை கொடுக்கவேண்டுமென அல்லாஹ்விடமே முஸ்லிம் அகதி வேண்டுகின்றான்.அந்நாரின் மனைவி,பிள்ளைகளின்,மற்றும் குடும்பத் தினர்களின் துக்கத்திலும் “முஸ்லிம் அகதி”யும் இணைந்து கொள்கிறது.

Wednesday, December 1, 2010

முல்லைத்தீவு மாவட்டமுஸ்லிம்கள் சிலரின் செயற்பாடுகள் காரணமாக அங்குள்ள ஏனைய சமூகத்தினர் அதிர்ப்தியடைந்துள்ளனர். பகுதி-2


மாடு அறுத்தலும்,கடத்துதலும்
மேற்காட்டிய தலைப்பில் ஏற்கனவே தமிழ் (ஹிந்துக்கள்,கிருஷ்தவர்கள்) முஸ் லிம் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தக்கூடிய காணிசார்பான விடயத்தை தந்திருந்தேன்.அதுபோன்ற செயற்பாடான மாடுசார்பான சில விடயங்களையும் முஸ்லிம் அகதி ஆராய விரும்புகிறது. முதலாவது அடுத்தவரின பொருட்களை அபகரிப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இதனை ஏற்கனவே ஒரு இடுகை யில்வலியுறுத்தியிருந்தேன்.அப்படிச்செய்வது“ஹறாம்”எனஇஸ்லாம்கூறுகிறது. அதாவது தடைசெய்யப்பட்டது. இரண்டாவது அல்லாஹ்வின் பெயலைச் சொல்லி அறுக்கப்படாத அல்லது தானாக இறந்த மிருகத்தின் மாமிசத்தை உண்ப துவும் முஸ்லிம் ஒருவருக்கு ஹறாமாகும். இதன்படி அடுத்தவருக்குச் சொந்த மான மிருகத்தை அல்லாஹவின் பெயரைச்சொல்லி அறுத்தோ,அல்லது அறுக்காம்ல சாப்பிடுவதும் ஹறாம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படியான இறைச்சியென அறிந்து கொண்டும் அதைப்பணம் கொடுத்து வாங்கிச் சாப்பிடுவதும் ஹறாம்தான்எனத்தெரிந்த முஸ்லிம்களுடன், உணவுச்சாலை உரிமையாளர்கள் உட்படஅனைவரும் விலைகுறைவு என்பதா லும், கறித் தேவையை நிறைவேற்றவும் இந்த மாமிசத்தை (கள்ளமாட்டு) வாங்கி திருடர் களுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்குவதை காணக் கூடியதாவுள்ளது. கொலை செய்வதும்,கொலை செய்ய அல்லது அதை மறைக்க உடந்தையாக விருப்பதும் சமமானகுற்றமேஆகும்.அதுபோல் களவாகமாடு அறுப்பதும் அதன் இறைச்சி யைபணம் கொடுத்துவாங்குவதும் சமமானான குற்றச்செயலாகுமென் பதனை பாவனையாளர்மறந்து செயல்படுகின்றனர். இதன் காரணமாக கள்ளர்கூட்டம் பெருகமேலே குறிப்பிட்டவர்களும் காரணமா கின்றனர்.எனவே முதலில் இப்படியான இறைச்சியெனத் தெரிந்தும் விலை கொடுத்து வாங்கு வததை எச்சமூகத்தினராகவிருந்தாலும் தவிர்ந்து கொளளுதல் வேண்டும்.இதன் மூலம் மாடறுபபை 75 வீதம் கட்டுப்படுத்தலாம். அடுத்து அரசுசட்டப்படியான இறைச்சிக் கடைகளை உரிய காலத்தில் நடாத்த அனுமதிப்பதன் மூலமமும் 15 வீதமான மாடறுப்பைதடுக்கலாம். மிகுதிப்பத்து வீதத்தை சகல சமூகத்தவரும் கண்காணிப்பாகவிருந்து காவல் துறையிகருக்கு தகவல் கொடுப்தன் மூலம் இத்தொழில்செயபவரைஇல்லாமல்செய்யாமென“முஸ்லிம்அகதி” கருதுகின்றது.
முல்லைத்தீவில் கள்ளமாடுகள் அறுப்பதும்,வாங்கி உண்பதுவும் முஸ்லிம் கள்மட்டுமென பேசப்படுவதை முஸ்லிம்அகதி கண்டிக்கிறது.இதை முல்லைத் தீவிலுள்ள ஏனைய சமூகத்தைச்சார்ந்த மனட்சாட்சியடையவர்களும் முஸ்லிம் அகதியிடம் கூறியுள்ளனர். முல்லைத்தீவு,தண்ணீரூற்று என்னுமிடத் தில் மாடு சார்பான தொழிலுடன் தொடர்புடைய முஸ்லிம் நபருடன் மற்றுமொரு நபர் பேசும்போது முஸ்லிம்அகதி அருகில் நின்றுள்ளார்.அவர்கள் பேசியவற்றிலி ருந்து இவர்கள் அந்தஇரவு மாடு அறுக்கப்போவதை உறுதிப்படுத்திக்கொண்ட “முஸ்லிம் அகதி” அரசஅதிகாரியைப்போல் உடையணிந்து காட்சியளித்த அந்த புதியநபரை அணுகி நீங்கள் இந்த ஊரா?யாருயை மகன் போன்ற கேள்வி யைக்கேட்டபோது அவர் முஸலிம்களிலுர்ருக்கு அடுத்தஊரொன்றைக்கூறி,ஒரு அருமையான பெயரையும் சொல்லி அவரது மருமகன் என்றார்.ஆஹா 1990க்கு முன்னர் மாமா முஸ்லிம்களுடன் சேர்ந்து செய்ததை இப்போது டிப்ரொப் ஆசாமி புதிய முஸ்லிம்களுடன் இணைந்து செய்கின்றார்.என்ன ஒற்றுமை “திருடராய்ப் பார்த்து திரு ந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது” என்ற திரைப்பட பாடல் வரிகள் “முஸ்லிம் அகதியின்” காதில் ஒலிப்பதுபோன்ற பிரம்மையுடன் அவ்வடத்தை விட்டும் அகன்றார்.
இன்னுமொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முல்லைத் தீவில் கடற்றொழில் தற்போது குறைவானவர்கள் ஈடுபடுவதினால் மீனுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் அதிக விலையாக கிலோ ஒன்று 300 ரூபாயும் விற்கப் படுவதையும்காணமுடிகிறது.எனவே கறித்தேவைக்காக மாடொன்றை விலை யாகவாங்கி அதை இறைச்சியாகப்பயன்படுத்தும்போது கிலோ 200 ரூபாவுக்கும் குறைவாகவே முடிகிறது்.வருமானம் தற்போது குறைவாக உள்ளதன் காரணமாக முஸ்லிம்கள் இப்படிச்செய்கின்றனர்.பௌத்தமதம் இதை விரோதமாகப் பார்ப்பதி னாலும், இதற்கு முல்லைத்தீவில் இப்போதுஅனுமதி இல்லை என்பதினாலும். இப்படியானவர்களும் காவல்தறையினரால் கைது செய்யப்படும் போது இவர்க ளையும் திருடர்களாகவே சமூகம் பார்க்கிறது. பேசுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டியதொன்றாகும். எனையமாவட்டங்களைப்போலில்லாது முல்லைத் தீவில் உற்பத்தியாகும் மாட்டிறைச்சி தரம் கூடியதாகவுள்ளதுடன் மாட்டின் விலையும் அரைவாசியாகவும் காணப்படுகின்றது.இதன் காரணமாக இத்தொழி லுடன் தொடர்புடையவர்களும்,வேறு செல்வாக்குடைய வர்களும் இணைந்து அரசஅனுமதி பெற்று மாடுகளை அடுத்த மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பதன்மூலம் அதிக இலாபமடைவதனையும் காணமுடிகிறது.இதே செல்வாக்குகளுடன் மாடுதிருடுபவர்களும் பயன்பெற வாய்ப்புள்ளது. மேலும் முல்லைத்தீவில் பெறுமதியுடைய ஆயிரக்கணக்கான மாடுகள் உரிமை யாளரில்லாமல் அலைந்துதிரிகிறது. மாலையானதும் தமது பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்களக்கருகில் முகாமிடுவதையும் காணும்போது புதுமையாக வுள்ளது.இப்படியான மாடுகளை முல்லைத்தீவிலுள்ள ஏனைய சமூகத்தினரும் முஸ்லிம்களின் செல்வாக்கைப்பயன்படுத்தி வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்வதனையும் அறியமுடிகிறது. ஆகஇவ்வாறான செயற்பாடுகளுக்கு முல்லைத்தீவு முஸ்லிம்களை மட்டும் குறைகூறமுடியாது.காரணம் இச்செயற் பாடுகளுக்கு ஏனைய முல்லைத்தீவு சமூகத்தவர்களின் பங்களிப்பும்,வெளி மாவட்ட முஸ்லிம்களின் பங்களிப்பும் உண்டென்பதை “முஸ்லிம் அகதி”சுட்டிக் காட்ட விரும்பகிறது.
1990ம் ஆண்டு முஸ்லிம்களனைவரும் தமிழீழ விடுதலைப்புலிகளால் முல் லைத்தீவை விட்டும் வெளியேற்றப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும். அக்காலகட்டத்தில் அதிக மாடுவளர்பாளர்கள் அங்குகாணப்பட்டனர். வெளி யேறும் போது முஸ்லிம்களில் அதிகமானவர்கள் மாடுகளை அப்படியே விட்டு விட்டு வந்தனர். சிலர் வவனியாமாவட்ட எல்லைவரை கொண்டு சென்று அப்பால் முடியாது விட்டுசென்றவர்களுமுண்டு.சில்ர் ஏனைய சமூக நண்பர் களிடம் கொடுத்து விட்டுவந்தவர்களுமுண்டு.
1990ம் ஆண்டில் பத்துமாடுகளை ஒரு முஸ்லிம் வைத்திருந்தால் அதில் ஆறு பசுக்களாவது இருந்திருக்கும். இப்படியான ஒருசிறிய பட்டிமாடுகளை முல்லைத் தீவில்விட்டு சென்றிருந்தால் இருபது வருடங்களின் பின்னர் அந்தப்பட்டியில் குறைந்தது 1000 மாடுகளாகவாவது பெருக்கமடைய வாய்ப் புள்ளது.ஆக 1990 ல் முஸ்லிம்களுக்கு சொந்தமாவிருந்த மாடுகளின் எண்ணிக்கை 3000இற்கும் அதிகமாகும் அப்படியாயின் அதன் பெருக்கம் இன்று எவ்வளவு என்பதனை நீங்களே கண்கிட்டுக்கொள்ளுங்கள். முஸ்லிம்கள் தாம்பிறசமூக நண்பர்களிம் ஒப்படைத்து விட்டுவந்த மாடுகளை தற்போது சென்று கேட்ட பொழுது அவர்கள் கூறியபதில் நீங்கள் போனது்ம் அம்மாடுகளை யெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றுச்சென்றுவிட்டார்கள்.அதுஉண்மை யாகவும் இருக்கலாம். அதை பொய்யென எண்ணிய முஸ்லிம்கள் சிலர் நண்பர் களின் மாடுகளை தமதென உரிமைகொண்டாடபுறப்பட்டுமுறண்பாடுகளை வளர்த்தக்கொண்டனர். உண்மை யென எடுத்துக்கொண்டால் இன்று முல்லைத்தீவு முஸ்லிம் பிரதேசங்களிள் காணப்படும் உரிமைகோரப்படாத ஆயிரக்கணக்கான மாடுகளில் முஸ்லிம்க ளுக்கும் உரித்துடைய மாடுகளும் காணப்படலாமல்லவா? எதுஎப்படியிருப் பினும் எதையும் உரியவழிகளின் மூலமே பெற்றுக்கொள்ள முடியுமெனவும், இதற்கு அரசியல் வாதிகள்?,புத்திஜீவிகள், மதகுருமார்கள்,அரச அதிகாரிகள் பாதகாப்பு சார்பான அதிகாரகளின் ஒற்றுழைப்பும்,ஆதரவும், ஆலோசனையும் நிச்சயம் தேவையென “முஸ்லிம் அகதி” கருதுகிறது.