Tuesday, July 21, 2009

ஸ்ரீ லங்கா முல்லைத்தீவு மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையினர் புத்தளத்தில் நடாத்திய தஃவா கருத்தரங்கும்,செயலமர்வும்.

ஸ்ரீ லங்கா ஜம் இய்யதுல் உலமாவின் முல்லைதீவு மாவட்ட கிளையினர் கடந்த பத்தொன்பது வருடங்களாக இடம் பெயர்ந்து வாழும் நிலையில் புத்தளம் மாவட்டத்தின்; கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள அம்மார் மண்டபத்தில் 'தஃவா கருத்தரங்கும் செயலமர்வும்' என்ற தலைப்பினில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 2009.07.04 ம் திகதி நடைபெற்றது . இந்நிகழ்வுக்கு முல்லைத்தீவு மாவட்ட மார்க்க அறிஞர்கள், அரசஅதிகாரிகள், அகதி முகாங்களிளுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், மற்றும் சமூகப்பணிகளில்ஆர்வமுள்ளவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்வுக்கு மௌலவி அல்ஹாஜ் எம்.எச்.எம்.இப்றாஹீம் [காஸிமி] ஜே.பி தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் பிரமுகர்கள் பலர் கலந்துநிகழ்வை சிறப்பித்தனர்.

பிரதம அதிதி

அல்-ஹாஜ் மௌலவி எம்.எம்..முபாறக் [மதனி] பி,
[
பிரதித்தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதிபர், கபூரிய்யாஅரபுக்கல்லூரி, மஹரகம.]


விசே அதிதிகள்

அல்-ஹாஜ் மௌலவி எஸ்.எல்.நவ்பர் [கபூரி] பி,
[
பணிப்பாளர்:சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு, சமூகசேவைகுழு செயலாளர் ,
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா]


அல்-ஹாஜ் மௌலவி ஜே.எஸ்.எம்.ஷ்ரப் [சஹ்வி] பி. . றியாத்
[பணிப்பாளர் நிதாஉல்ஹைர் பவுண்டேசன் கொழும்பு.]

கௌரவ அதிதிகள்
அல்-ஹாஜ் மௌலவி எச்.
அப்துல் நாஸர் [ரஹ்மானி]
[பொதுச்செயலாளர் அகிலஇலங்கை ஜம் இய்யத்துல் உலமா]


அல்-ஹாஜ் மௌலவி எம்.எச்.எம்.புர்ஹான் [பஹ்ஜி]
[
பிரதித்தலைவர் ; அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ,அதிபர் றஹீமியா அரபிக்கல்லூரி மடவளை]


அல்-ஹாஜ் மௌலவி எம்.ஜே.எம்.றியால் [கபூரி] பி.
[
முன்னாள்பொதுச்செயலாளர் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா]


அல்-ஹாஜ் மௌலவி அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்
[
தலைவர்- புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா,அதிபர்-காஸிமி அரபிக்கல்லூரி, புத்தளம்.]

மேலும் பல அதிதிகளும் கலந்து கொண்டு நிகழ்சிகளை சிறப்பித்தனர்.

நிகழ்வுகளை முல்லைதீவு மாவட்ட ஜம் இய்யதுல் உலமாக்கிளையின்செயலாளர் மௌலவி எம். . ஹைஸர்கான் [கபூரி] பி. அவர்கள்தொகுத்தளித்தார்.

புகைப்படங்கள் பரீத்.எம்.பௌஸி [பவா கிராபிக்ஸ்- 0094714915701]
[ஊடகப்பொறுப்பாளர் :-இடம் பெயர்ந்த முஸ்லிம் அபிவிருத்தி அலகு ]

செய்திகளை தொகுத்து வழங்கியவர் : எம்.எஸ்.பரீத் ஜே.பி
0094714915703













No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.