Wednesday, November 11, 2009

1994 ம் ஆண்டு போதுத்தேர்தல் [வன்னி] மோசடி நிறைந்தது.இணைப்பு :2

வேட்பாளருக்கான அடையாள அட்டை



வேட்பாளரினால் செய்யப்பட்ட முறையீடுவேட்பாளருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டமைக்கான அரச ஆவணம் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் .கே.அனஸ் என்பவரது வாக்கு கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலை வாக்குச்சாவடி க்கு முறைகேடாக மாற்ப்பட்டு. கள்ளவாக்கு போடப்பட்டது. .பி.ஆர.எல்.எப். கட்சியின் வேட்பாளர் .எஸ். பதுர்டீனின் வாக்கு புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆலங்குடா பாடசாலைக்கு கள்ள வாக்களிக்க எடுக்கப்பட்ட முயற்சி. இந்த மோச்டிகளுடன் இவருக்கும் தொடர்பிருக்கலாம் என மக்கள் கருதுகின்றனர்.
இறந்து போன முல்லைத்தீவைச் சேர்ந்த எம்.எம்.ஜுனைட் என்பரது வாக்கும் போட திருட்டு முயற்சி மேற் கொள்ளப்ட்டுள்ளது. புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் எம்.ஐ.நிவாஸ் என்பவரது வாக்கும் மோசடியான முறையில் நுரைச்சோலை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குடா பாடசாலைக்கு வாக்களிப்பதற்கு செய்யப்பட்ட சதி. பூர்த்தி செய்யப்படாத படிவத்தில்முல்லைத்தீவு ,நீராவிப்பிட்டி கிராம சேவையாளர் முஹம்மது ராசா சிம்சார்[232-] என்பவர் சகல படிவங்களிலும் றபர் சீல் பதித்து ஒப்பமிட்டுள்ளார். இவர் தற்போது வவுனியா மாவட்ட செட்டிகுளம் பிரதேச செயலாளர் அலுவலகத்தின் கீழ் கடமை செய்கின்றார். இவர் நீராவிப்பிட்டியில் கடமை செய்த 1990 ம் ஆண்டு ஜுலை ஏழாம் திகதிக்கு முன் பாவித்த றபர் சீல் இங்கு பயன் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.குருநாகல் மாவட்டத்தில் வசிக்கும் உசனார் மரைக்காயர் அப்துல் சுபைர் என்பவரது வாக்கும் புத்தளம் மாவட்டத்தில் போடப்பட்டது.


கீழ் வரும் படிவங்களில் குறிப்பிடப்பட்ட கச்சு முஹம்மது அப்துல் சமத் என்பவர் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் வசித்தவர். முல்லைத்தீவை பிறப்பிடமாகக் கொண்டவர்.இவரது பெயரில் இரண்டு வாக்குகள் கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் திருட்டு வாக்குகளாக போடுவதற்கு நிரப்பப்பட்ட படிவங்களே இது.














துறை முகங்கள் அபிவிருத்தி புனர் வாழ்வு ,புனரமைப்பு அமைச்சின் மூத்த இணைப்பாளரும் ,செயலாளருமான ஜனாப் எம்.ரீ.ஹசன் அலி அவர்களிடமிருந்து வந்த பதில் கடிதம்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.