Wednesday, July 21, 2010
"முஸ்லிம்அகதி" தனது வாசகர்களுக்கு மனபூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றது. . .
இலங்கையின் அழகிய, வளம் பொருந்திய மாவட்டமாக விளங்குவதுமுல்லைத்தீவு மாவட்டம் என்றால் அது மிகையாகாது. அம் மாவட்டத்தில்மிகச்சிறு பாண்மையினராக வாழக்கூடிய முஸ்லிம்கள் அம்மாவட்டத்தின்பெரும் பாண்மையினரான ஹிந்துக்களுடனும், மற்றும் கிருஸ்தவர்களுடனும்சமாதானமாகவும்,சமமாகவும் வாழ்ந்தவர்கள்.1591 ம் ஆண்டு காயல்பட்டணத்திலிருண்டு முஸ்லிம்கள் சாவச்சேரிக்குக்கு அருகிலுள்ள தென்மிரிசுவில்,உசன் போன்ற பகுதிகளில் வந்து குடியேறினார்கள் என்றும், அப்பிரதேசத்தில் சந்தைகளில் வியாபாரம் செய்தார்களென்றும் அப்பிரதேசம் அவர்களின் வாழ்க்கை வசதிக்கு பொருந்தாத காரணத்தால் யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் பிரதேசத்தில் இவர்கள் சென்றுகுடிஏறியதாகவும் கலாநி குணராச தனது ஈழத்த்வர்வரலாறு என்னும் புத்த்கத்தில்குறிப்பிட்டுள்ளார்.இவர்களில் ஒரு பகுதியினர் முல்லைத்தீவை நோக்கியும்வந்துள்ளார்கள் எனவும்அறிய முடிகிறது. [1593 ]ல் நல்லுர்ர் கோவில் பிரதேசத்தில் குடியிருந்தமுஸ்லிகள் 1749 ம் ஆண்டு நல்லூர் கோவில் அபிவிருத்தி கட்டுமானப்பணிக்கு தடையாக இருந்ததினால் அவர்களை தமிழர்கள் அவ்விடத்தை விட்டும் அகற்ற பலபேச்சு வார்த்தைகள் நடத்தியும் முஸ்லிம்கள் அவ்விடத்தைவிட்டகல மறுத்தனர். இறுதியில் பன்றியை வெட்டி அதன் மாமிசங்களை த்மிழ்ர்கள் முஸ்லிம்கள் நீரெடுக்கும் கிணறுகளில் போட்டனர். இதைக்கண்னுறமுஸ்லிம்கள் கதறி அடித்துக்கொண்டு நாவந்துறையை நோக்கிஇடமபெயர்ந்ததாக கலாநிதி குணராச கூறுகின்றார். இவர்களில் ஒருபகுதியினரும் முல்லைதீவை நோக்கி இடம் பெயர்ந்த்தாகவும் அறியமுடிகிறது, யாழ்ப்பாணத்தில் தமிழகளால் பாதிப்புக்குள்ளானவர்களும் முல்லைத்தீவில்தமிழர்களுடன் [ஹிந்து,ஹிருஸத்வர்கள்] முறண்பாடில்லாமல் வாழாந்துள்ள்னர். அக்கால கட்டட்டிலுள்ள அரசியல் வாதிகளினாலும் தண்ணீர்முறிப்பு,முத்தையன்கட்டு,முறிப்பு,மதவளசிங்கன்குளம்,நித்தகைக்குளம் நீர்ப்பாய்சல் விவசாய திட்டங்களின் காணி பகிர்வின் போது முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.அரச தொழில் வாய்ப்பிலும் கணிசமான இட ஒதிக்கீடு வழங்கப்பட்டது. 1990 இற்குப் பின்னர் முல்லைத்தீவில்முஸ்லிம்கள் இருந்தார்களா? என்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தெரியாமலிருந்தது.இதையுண்ர்ந்த முல்லைத்தீவு முஸ்லிம் புத்திஜீவிகளினால் முன் வைக்கப்பட்ட கருத்து 2009.07.5ம் திகதி www.muslimrefugee.blogspot.com என்னும் பெயருடைய இணையத்தளம் உருவாக்கப்பட்டது. ஒரு வருட காலத்தில் பத்தொன்பது சர்வதேச நாடுகளில் 298 விருந்தினர்கள் இத்த்ளத்தை12198 முறை வலம் வந்து எமக்குஊக்கம் அளித்துள்ளீர்கள். இன்று இலங்கையி லும் 100 வது வாசகர்வலம்வந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்தும் தளத்தை பார்வையிட்டு உங்கள் நண்பர்களுக்கு எத்தி வைப்பதுடன் எமக்கும் ஆலோசனை வழங்கவும் மறக்காதீர்கள். மீண்டும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.