Tuesday, November 23, 2010

“ஏகத்துவக்கொள்கை“

1:1 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِي

1:1. ளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

அல்-குர்ஆன்-6:2 هُوَ الَّذِي خَلَقَكُم مِّن طِينٍ ثُمَّ قَضَىٰ أَجَلًا ۖ وَأَجَلٌ مُّسَمًّى عِندَهُ ۖ ثُمَّ أَنتُمْ تَمْتَرُونَ

6:2
. அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்

அல்-குர்ஆன்-31:26 لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ
ۚ إِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ
31:26. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் (யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன. நிச்சயமாக, அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன்; புகழப்படுபவன்.
அல்-குர்ஆன்-4:116 إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا

4:116 நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.
மேற் காட்டப்பட்டுள்ள மூன்று அல்குர்ஆன் வசனங்களிலிருந்து சில விடயங் களை (சத்தியத்தை) உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

1.
எம்மை படைத்த அல்லாஹ் (கடவுள்) எம்மை எமக்கு நிர்ணயிக்கப்பட்ட இவ்வுலக வாழ்வுக்கான காலம் முடிவுற்றதும் இறக்கச்செய்தபின் மீணடும் உயிர்ப்பிக்கச் செய்து நாம் உலகில் வாழ்ந்த. வணங்கிய ,வழிகாட்டிகள் பற்றி நிச்சயமாக கேள்வி கேட்டு நீதி வழங்குவான்.(சுவர்கம் அல்லது நரகம்)

2.
மனிதனை மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைத்தையும் அவனே உண்டாக்கி ஆட்சியும் செய்கின் றான்.அவனுக்கு யாருடைய உதவியும்,ஆலோசனையும் தேவையற்றவன்.

3. அல்லாஹ் (கடவுள்) தனக்குப்பதிலாக யாரையும் அல்லது எதையும் மனிதன் வணங்குவதை மன்னிக்கமாட்டான்.இணைவைப்பதைத்விர்ந்த பாவங்களை அவன் நாடியவர்களுக்கு மன்னிப் பதாயும் இணைவைப்பவர்களை அதாவது ஏகத்துவ இறைகோட்பாட்டிலில்லாதவர்களை அல்லாஹ் வழிகேட்டி லுள்ளவர்களென இழிவாக சுட்டிக்காட்டுகின்றான்.இன்னும் சற்று விபரமாக கூறுவதாயின் ஏனைய ஜீவராசிகளைப்போலில் லாது மனிதனை பிரித்தறியக்கூடிய ஆற்றலைக் கொண்டவனாக அவன் படைத் துள்ளான்.காரணம் தன்னால் அனுப்பபடும் துர்துவர்களை ஏற்று, அவர்கள் மூலம் அனுப்பப்படும் கட்டளைகளை பின்பற்றி வாழவேண்டுமென்பதற்காகவே ஆகும்.
உதாரணத்திற்கு ஒரு ஜனாதிபதி ஒருஇரானுவப்படைத்தளபதியிடம் சில இராணுவ வீரர்களையும், யுத்த வாகனங்களையும்,ஏவுகணைகளையும்,சில சுடுகலன்களையும்,சில கைக்குண்டுகளையும். உணவுப்பொதியுட்பட குளிர் பானங்கயையும் கொடுத்து குறித்த ஓரு பணியை வெற்றிகரமாகசெய்து முடிக்கு மாறு பணிகத்துள்ளார். குறித்த தளபதி ஜனாதிபதியினால் வழங்கிய கால அவகாசத்தினுள் வழங்கப்பட்டவற்றை முறையாக பயன்படுத்தி குறித்தபணி யினை நிறைவேற்றாது ஜனாதிபதி முன்வந்து நிற்கும் போது ஜனாதிபதி அத்தளபதிக்கு எதைப் பரிசாக வழங்குவார்?அதே தளபதி குறித்த காலத்தில் ஜனாதிபதியால் வழங்கிய அனைத்து வளங்களையும் முறையாகப்பயன்படுத்தி குறித்த பணியை வெற்றிகரமாக செய்து முடி்த்து ஜனாதிபதியின் முன்வந்தால் என்ன பரிசுஅவருக்கு கிடைக்கும்?
அல்லாஹ் ஜனாதிபதியாகவிருந்து மனிதர்களுக்கு வழங்கிய வளங்கள்தான் அல்குரஆன், நபிமார்கள் (
துர்துவர்கள்)கல்வி,செல்வம்,வீரம்,என்பனவாகும். ஒருநாட்டிற்கு எப்படி இரண்டு ஜனாதிபதிகள் இருக்கமுடியாதோ? அதுபோன்றுதான் , உலகத்திற்கும் ஒன்றிற்கு மேற்பட்ட கடவுகள் இருக்க முடியாது.எனவேதான் முஸலிம்கள் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட ஏனைய ஜீவராசி களையோ அல்லது மனிதனால் வரையப் பட்ட அல்லது உருவாக்கப் பட்டவறறையோ அல்லது உலகில் வாழ்ந்து மறைந்த நல்ல மனிதர்களையோ வணங்குவது மில்லை. இறந்த அவர்களிடம் உதவிகள் கேட்பதுமில்லை. குர்ஆனின் வழிகாட்டலுக்கும் நபிமார்களின் நற்போதனைகளுக்கும் மாறு செய்வதுமில்லை. அப்படி அவர்கள் செய்பவர்களாகவிருப்பின் அவர்கள் முஸ்லிம்களுக்குரிய பெயர்களை மட்டும் கொணடவர்களாகவே பார்க்க வேண்டும். இப்படியானவர்கள் அல்லாஹ்வின் முன்னே சென்று பரிசுகளை எதிர்பார்க்க முடியாது.
எனவே நீங்களும் அல்லாஹ்(கடவுள்) முன்னிலையில் செல்லவுள்ள நாளில் உங்களுக்கு விருப்பமான வற்றை பெற ஆசைப்படுவது நியாயமானதே!அப்படியானால் நீங்கள்
அல-குர்ஆனையும் அவனால இறுதியாக அனுப்பப்பட்ட
துர்தர் முஹம்மது நபி(ஸல்) அவர்களது அறிவுறுத்தல்களையும் (அல்-ஹதீஸ்)பின்பற்ற வேண்டும். எல்லாம்வல்ல அல்லாஹ் உங்களுக்கும் எனதும் எனது குடும்பத்தினருக்கும், நல்லருள் புரிவானாகவும். ஆமீன். ”அல்ஹம்துலில்லாஹ்”


Saturday, November 20, 2010

வடமாகாண முஸ்லிம் அகதிகள் புத்தளத்தில் வாழும் கிராமத்தின் பெயர்ப்பலகை நல்லிரவில் திருட்டு.


ஸ்ரீலங்கா,புத்தளம் மாவட்டத்திலுள்ள கொத்தாந்தீவு ஜூம்ஆப்பள்ளிவாசலின் கீழுள்ள கிராமம்தான் றஹமத்புரம்.வடமாகாணத்திலிருந்து 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 1993 ம்ஆண்டு கொததாந்தீவுக்கிராமத்திலிருந்து ஒருகிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஐந்து ஏக்கர் காணியை தமது பணத்தைக்கொண்டு வாங்கினார்கள்.அதைத்தாமே பத்து, இருபது பேர்சஸ் துண்டுகளாக்கி தமது செலவினில் சிறுகுடிசைகளை அமைத்து வாழ்ந்தனர்.1994 ம் ஆண்டின் பின்னர்அன்றைய அரசாங்கத்தில் புனர்வாழ்வு ,புனரமைப்பு. மற்றும் கப்பல் துறைமுக அமைச்சராகவிருந்த மர்ஹூம் எம்.எச.எம.அஸ்ரப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 35000.00ரூபா பெறுமதியான 34 வீடுகள் வழங்கப்பட்டது.அதன் பின்னர் பக்கத்திலுள்ள காணிகள் சிலவற்றையும் அகதிகள் வாங்கி தமது சொந்தச்செலவினில் வீடுகள் அமைத்துள்ளனர்.35000.00 பெறுமதியான வீடுகளும் பெரிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இப்போது இக்கிராமத்தில் சுமார் 65 குடும்ங்கள் வாழும் கிராமமாக காணப்படுகிது.இந்தக்கிராமத்தில் மக்கள் அமைதியாக வாழும் நிலையில்....................................... இந்தக்கிராமத்தின் மேலே காட்டியுள்ள பெயர்ப்பலகை நேற்று நல்லிரவில் இனந்தெரியாதவர்களினால் களவாடப்பட்டுள்ளது.இதன் காரணமாக அகதிகள் கிராமத்தின் பதட்டமான நிலைமை காணப்படுகின்றது. இதுசார்பான முறையீடு முநதல் பொலீஸில் இக்கிராம பள்ளிவாசல் பரிபாலனசபையினரால் செய்யப்பட்டுளளது.

Friday, November 19, 2010

கொத்தாந்தீவு ஜூம்ஆப்பள்ளிவாசலில் “முஸ்லிம்கள் மத்தியில் சமாதானத்தின் தேவையை வலியுறுத்தும்” கொத்பா பிரசங்கம்.

ஸ்ரீலங்கா புத்தளம் மாவட்டத்திலுள்ள கொத்தாந்தீவு ஜூம்ஆபப்பள்ளிவாசலில் முஸ்லிம்களுக்கு மத்தியில் சமாதனத்தின் தேவையை வலியுறுத்தும் வகையில் இன்று (2010.11.19) கொத்துபா பேருரை நிகழ்த்தப்பட்டது. மதுரங்குளி,கனமூலை சேர்ந்தவரும்,பெருக்குவட்டான் ஜூம்ஆபபள்ளிவாசலின் பேஷ்இமாமும் ,இதே பள்ளிவாசலில் நடாத்தப்படும் ஹிப்ளு மதரஸாவின் அதிபருமான அல்-ஹாஜ் மௌலவி முஜீபுர்றஹ்மான் அவர்களால் இப்பேருரை நடத்தப்பட்டது.
முஸ்லிகள் ஒன்றுபட்டுவாழ்வதன் மூலம்தான் நாம் அல்லாஹ்வின் றஹ்மத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.கடந்த செப்ரம்பர் 11 ம் திகதி எமது புனிதமான அல்-குர்ஆனை எதிரிகள் எரிப்பதற்கு திட்டமிட்டார்கள்.நடந்தது என்ன? அல்லாஹ் அவர்களைத் தோல்வியடையச்செய்தான்.காரணம் முஸ்லிம்களின் ஒற்றுமை யேயாகும். ஆனால் எம்மத்தியில் மார்க்கக் கோட்பாடுகள் எனற காரணங்களை வைத்தும் பிளவுகள் ஏற்படுகின்றது.அடுத்தஊரிலிருந்து ஒருவர் இந்த ஊரில் வந்து திருமணம் முடித்துவிட்டாரென்றால்அவரை வரத்தான் என்று சொல்லி விடுகின்றோம்.அப்படியென்றால் அப்பெண்ணை இநத ஊரிலுள்ளவர் திருமணம் செய்திருக்கலாமே. ஏன்? நாம் அப்படி பிரித்துப்பார்க்க வேண்டும். இன்று நாம் காணக்கூடிய விடயம் இடம்பெயர்ந்து வந்தவர்களை வெளியேற்றவேண்டு மென்ற நிலையில் சிலர் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.அவர்கள் மனம் நோகும்படியான துண்டுப்பிரசுரங்களை வெளிவருவதை காணக்கூடியதாகவுள்ளளது.ஏன் இந்த நிலை எனவும் கேளவியெழுப்பினார்.இன்று நாஸூக்காக கூறும் விடயம் ”விருந்தும்,மருந்தும் மூன்று நாள்”நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் சொல்லிய ஹதீதை இதற்கு பயன்படுத்தப்பார்க்கின்றனர்.அவர்கள் சொல்லியது ஒரு வீட்டிற்கு விருந்தாளியாக சென்றுவிட்டால் தொடர்ச்சி யாகவிருந்து அக்குடும்பத்தினரின் சந்தோசங்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காகவேயாகும்.இது இடம் பெயர்தவர் களுக்குபொருந்தாது. மக்காவிலிருந்து ஹிஜ்றத் சென்றவர்களுக்கு அன்சாரிகள் தமது வயல் நிலங்களுட்பட அனைத்தையும் கொடுத்து உதவியுள்ளனர். அந்த அன்சாரிகளைப்பற்றி அல்லாஹ் அல் - குர்ஆனில் குறிப்பிட்டுள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த முஸ்லிம்கள் அவர்களது உரிமைகள் பாதிக்கப்பட்டு வந்தவர்கள்.எனவே இவர்களை முஸ்லிம்களென்று பார்க்கவேண்டும்.இடம்பெயர்தவர்ளென்று சொல்லக் கூடாது.அதையே அல்லாஹ் குர்ஆனில் அன்சாரிகள்,முஹாஜிரீன்கள் எனுக்குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார்.அன்று முஸ்லிம்களென வரவேற்ற நாம் இன்று இடம் பெயர்ந்தவர்களெனப்பார்க்கின்றோம்.அவர்களை வெளியேற்றத் துடிப்பவர்களுடன் எம்மை துணையாக ஆக்கிவிடாமல் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.முஸ்லிம்கள் எச்தீய சக்திகளினாலும் பிரிந்துவிடக்கூடாது.நாம் பிரிந்துவிட்டால்அல்லாஹ்வின் றஹ்மத் எமக்கில்லாமல்போய்விடு மென்றார்.
எல்லாப்புகளும் அல்லாஹ்விற்கு மட்டும்.

இதுஅக்குத்பாவின்சுருக்கம் மட்டுமே.

Sunday, November 14, 2010

யாழ்பாணத்திலிருந்துவெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேற்றவேண்டும்




வீரகேசரி இணையம் 11/14/2010 8:20:51 PM Share
_Follow Virakesari on Twitter
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து 20 வருடங்களுக்கு முன்னர் பலவந்தமாக விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை உரிய முறையில் அங்கு மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் சார்பில் சாட்சியமளித்தவர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு சாட்சியமளித்தவர்களில் ஒருவராகிய சர்மிளா ஹனிபா வடமாகாணத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட திட்டம் ஒன்று அரசாங்கத்திடம் இல்லை என்பதை அவர் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மீள்குடியேற்றத்தின்போது, இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவது தொடர்பில் முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் நல்லிணக்க ஆணைக்குழுவினரிடம் அவர் வலியுறுத்தி;யிருக்கின்றார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து மனிக்பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களை மீள்குடியேற்றுவதில் காட்டப்படுகின்ற அதே அளவிலான அக்கறை இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதிலும் காட்டப்பட வேண்டும் எனவும் இடம்பெயர்ந்துள்ள வடமாகாண முஸ்லிம்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. ___ E-mail to a friend நன்றி வீரகேசரி

Saturday, November 13, 2010

முல்லைத்தீவு மாவட்டமுஸ்லிம்கள் சிலரின் செயற்பாடுகள் காரணமாக அங்குள்ள ஏனைய சமூகத்தினர் அதிர்ப்தியடைந்துள்ளனர்.

மேற்படி தலைப்பில நேரடியாக எழுதாமல் வேறு தலைப்புக்களில் முன்னர் சில இடுகைகளை வெளியிட்ட ”முஸ்லிம்அகதி”இபபோது நேரடியாக உரிய சில விடயங்களை ஆராய விரும்புகின்றது.

1 வது காணி விற்பனையும்,திரும்பக்கோருதலும்,அத்துமீறிகுடியிருத்தலும்.

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் முல்லைத்தீவிலுள்ள ஏனைய சமூகத்தின ருடன் மிகவும் கன்னியமாக வாழ்ந்தவர்கள்.கடந்தகாலத்தில் முஸ்லிம்களை விடஏனைய சமூகத்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாகக் காணப்பட்டனர்.இதன் காரணமாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்போது முஸ்லிம்கள் அவர்களது காணி களை ஏனைய சமூகத்தவர்களுக்கு ”நம்பிக்கையறுதி” என்ற முறையில் உறுதி யெழுதிக்கொடுத்து பணம் பெறுவதும் பின்னர் பணம் வந்ததும் காணியை மீட்டுக் கொள்வதும் வழக்கமான விடய மாகும். காணியைப்பெற்றுப்பணம் கொடுப்பவர் கள் நினைத்தால் காணியை திரும்பக்கொடுக்காமல் மறுக்கலாம்.காரணம் சட்டப்படி காணிக்குரிய ஆவணம் அவர்களுக்கு வழங்கித்தான் பணம் பெறுவது வழக்கம்.அப்படி அவர்கள் மாறுசெய்வதில்லை.சிலநேரங்களில் முஸ்லிம்கள் வட்டிவழங்கியுள்ளனர். சமூக ஒற்றுமைக்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.1990ம் ஆண்டு முஸ்லிம்கள் முல்லைத்தீவைவிட்டு வெளியேறும்போது தமது பொருட்கள் சிலவற்றை அவர்களது நண்பர்களான ஹிந்து,கிருஷ்தவ சகோதரர்களது வீட்டில் ஒப்படைத்துவிட்டு வந்தவர்களுடமுண்டு.
வடமாகாணத்திற்கு வெளியேவந்த முஸ்லிம்கள் சுமார் ஐந்து வருடங் களாக தமது மண்ணுக்கு திரும்புவோம் என்ற மனஉறுதியுடன் வாழ்ந்தனர். அதன் பின்னரே தமது பணத்தைக்கொண்டு ஐந்து,பத்து பேர்சஸ் காணித்துண்டுகளைப் பெற்று தனியான வீடுகளிலும்,குடிசைகளிலும் வாழத்தொடங்கினர். அவர்கள் மனதில் முல்லைத்தீவு காணிகளைப்பற்றியோ?பொருட்களைப்பற்றியோ கவலை யில்லை.காரணம் அவர்களுக்கு வல்ல அல்லாஹ்வின் மீதுள்ள அளவு கடந்த நம்பிககையும் வந்தஇடத்தில் கிடைத்த கண்ணியமுமாகும்.அத்துடன் மக்காவிலிருந்து மதீனாவிற்குஹிஜ்றத்சென்ற மஸ்லிம்கள் மக்காவிலிருந்த அவர்களின் செல்வங்களை மட்டுமல்ல உடலில் ஒட்டியிருந்த துர்சியைக்கூடதட்டிக்கொட்டிவிட்டுச் சென்றவர்கள்மதீனாவில்மாபெரும் செல்வந்தர்களாக வாழ்ந்ததுமட்டமல்லாது.மதீனாவிலுள்ளவர்களின் மனதை வென்றார்கள்.சிலகாலங்களின் பின்னர் ஹிஜறத் சென்ற முஸ்லிம்கள் மீளவும் மக்காவையும் வெண்றார்கள் என்ற உண்மை தெரிந்தவர்களாவும் இருந்தார்கள்.. சமாதான காலமாக மக்கள் கருதிய 2004 ம் ஆண்டு முல்லைத்தீவு முஸ்லிம்களும் தமது கிராமங்களை, வீடுகளைப் பார்க்கச்சென்றனர். அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளினாலும்,முஸ்லிமல்லாத இடம்பெயர்தவர்களினாலும் பயன்படுத்தப்பட்ட முஸ் லிம்களின் வீடுகள் மட்டும் பாதுகாக்கப்பட்டிருந்தது. ஏனையவர்களின் வீடுகளை உடைத்து பாதுகாப்பு அரன்கள் அமைத்தாலும் பரவாயில்லை.முஸ்லிம்களின் வீடுகளை உடைத்துச சென்று மாடிவீடு கட்டியதும்,அடுத்தவீட்டுக்காரன் தனது மண் வீட்டை கல்வீடா க்கிய விடயமும் அவர்கள்மூலமே அறிய முடிந்தது.உண்மை யான சம்பவமாகும்.அவர்கள் அப்படிக்கட்டிய வீடுகளிள் அவர்களினால் என்றும் நிம்மதியாக வாழமுடியாதென்பது இவர்களின்நம்பிக்கை.
இக்காலத்திலதான் இஸ்லாமிய மார்க்கத்தை விளங்காத.தெரியாத சமூகப் பற்றில்லாத ,குறுக்குவழியில் பணம் சேர்க்கஆசைப்படுபவர்களும் முல்லைத்தீவிற்குச் சென்றனர்.இவர்களுடன் ஊர்பார்க்கச்சென்றவர்கள்(பாதுகாக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்கள்) தமது வீடுகளை விட்டுவைத்தால் ஏனைய முஸ்லிம்களின் வீடுகள் போன்று களவாடப்ட்டு விடும் என ஊகித்தனர்.எனவே இவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்ததில் தமது பிள்ளைகளின் வாழ்டவை மேம் படுத்தமுடியுமென எண்ணி விற்கமுடிவெடுத்தனர்.சில் வீடுவிற்ற பணத்தைக் கொண்டு இஸ்லாமியரின புனிதக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றினர். எதுஎப்படியிருப்பினும் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள காணிகளை விற்றவர் களைஎதிர்கால்ம் மறக்காது.இவர்களைப்பின்தொடர்ந்து அகதிகளாக வாழ்ந்த எழைகளும் தமது பங்கிற்கு காணிகளை விற்கத்தவறவில்லை.தமது பரம்பரை காணிகள் பறிபோவதை எண்ணி சிலர் மனம்வருந்தினார்கள்.ஆசிரியர் எஸ.எச். எம். றிஸ்னி,எம்.எஸ.பரீத் போன்றோர் காணி விற்பதை எதிர்தது பிரச்சாரம் செய் தார்கள். துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டனர்.விற்பதை தடுக்க முடியவில்லை. வாங்குவதை தடுக்கும்படி வேண்டி உரியவர்களுக்கு கடிதங்களும் எழுதினார்ர் கள் அதற்கும் நல்ல பதில் கிடைக்கவில்லை.மாறாக தமிழீழவிடுதலைப்புலிகள் கூட்டங்கள்வைத்து முஸ்லிம்களின் காணிகளை என்னவிலை கொடுத்தாலும் வாங்கும்படி தமது சமூகத்தினரை வலியுறுத்தினார்களாம்.இதற்கு சில புத்தி ஜீவிகளும் மறுப்புத்தெரிவிக்காமலில்லை.முஸ்லிம்கள் மீண்டும் இங்குவந்து வாழவேண்டுமெனவும் கூறினார்களாம்.புலிகளின் பணிப்புரைகளை ஏற்றுக்கொண்ட சிலர் அங்கிருந்த குறுக்குவழியில் பணம்சம்பாதிக்க முயலும் நம்மவரை புரோக்கர்களாக்கி புத்தளத்திலுள்ள முஸ்லிம்களின் முல்லைத்தீவு காணிகளை வாங்கத்துடித்தனர்.இதனை தமக்குச்சாதகமாகப்பயன்படுத்த புரோக்கர்கள் தவறவில்லை. சிலர் நேரடியாகச்சென்று தமது முன்னோர்களின் காணிகளை இனங்கண்டு தனது அடுத்த பங்காளிக்கும் தெரியாமல் காணியை காசாகிவிட்டிருந்தனர்.சிலர் தமது காணியை முறையாக விற்றுள்ளனர்.சிலர் காணிக்கு முற்பணம் மட்டும் வாங்கியுள்ளனர.முற்பணம் கொடுத்தவர்களிடம் எந்த ஆதாரமும் இலலை.புரோக்கரகள் காணிகளின் புகைப்படப்பிரதிகளை காட்டி தமது பொக்கட்டுகளை நிரப்பியதாகத் தெரிகிறது.உதாரணத்திற்கு நுர்று ரூபாய்க்கு காணி வாங்கியவர் புரோக்கருக்கு கொடுத்த பணம் நுர்ற்றுப்பத்து ரூபாய் புத்தளத்தில் காணிக்காரனுக்கு கிடைத்ததோ வெறும் ஐம்பது ரூபாய் மடடுமே.சில புரோக்கர்கள் ஒவ்வொரு காணியும் விற்பதாக காட்டி முற்பணம் வாங்கிய கதையுமுள்ளது.காணியைப்பார்க்காமலேயே இலட்சக்கணக்கில் முற்பணம் கொடுத்துவிட்டு புரோக்கரை தேடித்திரியும் அன்பர்களையும் முல்லைத்தீவில் காணமுடிகிறது.ந்தக்காலத்தில் அவர்கள் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அவர்கள் மீறவிலலை.இன்று முஸ்லிம்கள் அதை விளங்காது அவர்களுக்கு துரோகத்தனம் செய்வதனை இஸ்லாமும் ஏற்க வில்லை. இஸ்லாமியனாலும் ஏற்க முடியாது. இச்செயற்பாடுகளுக்கு முஸ்லிம் களை மட்டும் குறைகாண்பது நியாயமாகத் தெரியவிலலை.காணி வாங்கிய வர்களுள் சிலர் தந்திரத்துடன் செயற்பட்டிருக்கின்றனர். புலிகள் சொல்லி விட் டார்கள் உறுதி,நோட்டு ஒன்றும் தேவையில்லை. அதுஎல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். என்றிருந்தவர்களுமுண்டு.எரியும் வீட்டில் பிடுங்குவதுதான் மிச்சம என்பது போல இவர்கள் இனி இங்கு வரமாட்டாகளென்றெண்ணி பத்து ரூபா பெறுமதியான காணியை இரண்டு ரூபாய்க்கு வாங்கியவர்களையும் காணமுடிகிறது.காணிக்கு ஒருசிறு தொகையை முற்பணமாகக் கொடுத்து விட்டு வீடு கட்டியவர்களையும,திருத்தி குடியிருப்பவர்களையும் காணமுடிகிறது.
தற்காலிக உத்தரவுப்பத்திரம் உடையவர்களின் காணிகளும் வாங்கப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.
இன்யறைய நிலையில் அங்கு போனவர்கள் வாங்கிய முற்பணத்தை தருவதாகவும் காணியை விடும்படியும்,சிலர் இதில் எனக்கு பங்குக்குண்டு என அக்காணியில் குடிலமைத்து குடியிருப்பதையும்,சிலர் காணியிலுள்ள மரத்தை விற்று உன்பணத்தை தருவதாக முட்டாள்த்தனமான பதிலையும்,சில காணிகள் சார்பாக இருசாராரும் இணக்கப்பாட்டுடன் செயலாற்றுவதையும் அவதானிக்க முடிகிறது.இச்செயற்பாடுகள் காரணமாக எல்லா முஸ்லிம்களின் பெயர்களும் நாறடிக்கப்படுகின்றன.இது நியாயமில்லாததொன்றாக முஸ்லிம் அகதி கருது கின்றது.இப்படியான நிலைமை வருமென உணர்ந்த முஸ்லிம் அகதி 2010.06.01ம் திகதிய கடிதமூலம் அரசாங்க அதிகாரிகள்,அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் பிரமுகர்கள்,வணக்க வழிபாட்டுத்தலங்களின் தர்மகர்த்ததாக்கள்,பாடசாலை அதிபர்களென பலருக்கும் ஆரூடம் வழங்கியதை எவரும் கண்டு கொள்ள விலலை.அதற்காக அவர்களிற்சிலர் இன்று துக்கப்பட்டுத்தான் ஆகவேண்டும். அக்கடிதத்தை இத்தளத்திலும் பார்வையிடலாம்.இப்படியான நிலைமைகள் காரணமாக மனட்சாட்சியுடைய பல முஸலிம் அகதிக்குடும்பங்கள் தமது தாயக மண்ணிற்கு போவதை தவிர்த்துக்கொள்வதாக தெரிகிறது.
காணிப்பிரச்சினைகளைப்பொறுத்தவரையில் இருசமூகத்தைசார்ந்த புத்திஜீவிகளை உள்ளடக்கிய குழுவொன்றினை அமைத்து அவற்றிற்கு நியாயமான தீர்வுகள் காணப்படுவது அவசியமாகும்.கட்டுப்படாதவர்களை பொலீசில் ஒப்படைப்பது இக்குழுவின் பணியாகவும் இருக்கவேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் மரணவீடாகக் காட்சியளிக்கின்றது.மரணவீட்டில் பங்குச்சண்டைபோடுவது நியாயமாகுமா?
சிந்தித்து செயலாற்றுக.
முல்லைத்தீவில் முஸ்லிம்களால் விற்கப்படாத வீடுகளில்பல முஸ்லிம்களல்லாத இடம் பெயர்ந்தவர்களினால் பாவிக்கப்பட்ட வீடுகள் பாதுகாப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டேன். இவ்வீடுகளும் இறுதி யுத்த காலத்தில் பாரிய குண்டுகள் மூலம் தகர்க்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.ஆனால் முஸலிம்களால் முஸ்லிமல்லாதவர்களுக்கு விற்கப்பட்ட பக்கத்திலுள்ள வீடுகள் பாதுகாப்பாக இருப்பதையும் காணமுடிகிறது.முஸ்லிம்களின் வீடுகள் தகர்கப்பட்டமைக்காக அங்கிருந்தவர்கள் கூறும் காரணம் புலிகள் பாவித்த வீடுகளாம்.அங்கு விடுதலைப்புலிப்பிரமுகர்களின் புகைப்படங்களிருந்ததாம்..

முஸலிம் அகதிகளே! நீங்கள் வாழ்ந்த,அல்லது வாழும் வீடுகளெல்லாம் இங்கு உங்களுக்கு அற்பமானவையே! நீங்கள் உண்மையான முஸ்லிம்களாக வாழும்வரையில் நீங்கள் சோதனைக்குட் படுத்தப்படலாம்.அதுவே நிரந்தரமான சோதனையுமல்ல! தோல்விகளுமல்ல! நிச்சயமாக வெற்றி இங்குமட்டுமல்ல மறுமையிலும் காத்திருக்கிறது. உண்மையான முஸ்லிம்கள் எந்தவிதமான சதிகாரர்களுக்கும் அஞ்சத்தேவையில்லை.எப்போதும் வெற்றிகளை சதிகாரர்களினால் பெறமுடியாது.அவர்களின் சதித்திட்டங்கள் அவர்களுக்கே வினையாக முடியும்.
நன்றிகள் உங்களுக்கு புகளனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு மட்டும்
முஸ்லிம் அகதி





Thursday, November 11, 2010

புத்தளத்தில் வினியோகிக்ககப்படும் மாறுபட்டமீள்குடியேற்றவிபரப்படிவங்கள்

CONFIDENTIAL ?
புத்தளத்தில் வசிக்கும் வடமாகாண அகதிகளுக்கு மீளக்குடியமர்தப்படுபவர்களது விபரங்களைப்பெற்றுக்கொள்வதற்காக வேறுபட்டபடிவங்கள்வழங்கப்பlட்டுள் ளன. கீழ்காணப்படும் படிவம் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு வழங்கப் பட்டது. அதில் மீள்குடியேற்ற அமைச்சு என்ற தலைப்பி லுள்ளது.இதில் பு்த்தளத் தில் உலகவங்கின் வீடமைப்புத்திட்டத்தில் உள்வாங் கப்பட்டிருப்பின் அதன் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது.மேலே காணப்படும் படிவம் மன்னார் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.அது மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சு என்ற தலைப்பி லுள்ளது.அவர்களிடம் உலக வங்கியின் வீடமைப்புத்திடடத்தில் உள்வாங்கப்பட்டவிபரம் கோரப்படவில்லை. இந்தக் காட்டிக்கொடுப்பு அல்லது பாதுகாப்பு ஏன்? என முல்லைத்தீவு மாவட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.மேலும் இச்செயற்பாடுபற்றி மக்கள்மத்தியில் வேறு பட்ட சந்தேகங்கள் காணப் படுகின்றன.















Tuesday, November 9, 2010

முல்லைத்ததீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற அவலங்கள்-2

மேறகூறிய தலைப்பின் கீழ் முன்னர் ஒரு இடுகையை பார்ததிருப்பீர்கள். முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் 1987 ம் ஆண்டு இந்திய சமாதானப்படை முல்லைத்தீவுக்கு வருகைதந்தபோது ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அதே ஆண்டு கார்த்திகை மாதம் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக 45 மைல்கள் கடந்து வவுனியாவை வந்தடைந்தனர்.வரும்வழி நெடுங்கேணியில் சில சகோதரர்களை இந்திய இராணுவத்தின் ஹெலியிலிருந்து ஏவப்பட்ட செல் மூலம் இழக்க நேரிட்டது. 1989ம் ஆண்டு மீள்குடியேற்றமென்றபெயரில் குடியமர்ந்தனர். பின்னர் ஒருவருடத்தினுள்(1990 ஜூலை) அகதிகளாக புத்தளத்தை வந்தடைந்தனர்.1987ம் ஆண்டு ஐக்கியதேசிய கட்சி ஆட்சியிலேயே அகதிகளானோம்.அப்போது எதிர்க் கட்சியாவிருந்த சிறீலங்கா சுதந்திரக்கட்சியினரான நமது முஸ்லிம் சகோதரர்கள் எம்மை வவுனியா தொடக்கம் மத்திய மலை நாடுவரை அழைத்துச்சென்று அப்போதை அரசிற்கு எதிராக எம்மைப்(அகதிகளை)பயன்படுத்தி இலாபமடைந்ததை அன்றைய முல்லைத்தீவு அகதிகள் மறந்திருக்கமாட்டார்கள்.
எம்மைவியாபாரப் பொருளாக பயன்படுத்துவதை உணர்ந்த நாம் புத்தளத்தை நோக்கி வந்ததின் காரணமாக அமைதியாக வாழக்கூடிய நிலைமை ஏற்பட்டது.1990 ம் ஆண்டு நாம் எங்கும் செல்லவில்லை. நேரடியாக பழக்கப்பட்ட மாவட்டமாகவும்,அறிமுகமுடைய பல நண்பர்களைக் கொண்டதுமான புத்தளத் திற்கு மீண்டும் வந்து சேர்ந்தோம். முதற்கண் எல்லாம்வல்ல அல்லாஹ் விற்கும் அடுத்து புத்தளம்வாழ் மக்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள் ளோம். அன்றுபோல் இம்முறையும் அரசியல்வாதிகளாலும்,அரசசார்பற்ற நிறுவனங் களாலும் விற்கப்படுவது அகதிகள் அறியாததொன்றல்ல.ஆயினு்ம் எல்லாவற் றையும் அல்லாஹ்விடம் பொறுப்புச்சாட்டியவர்களாக அகதிகள் இருக்கின்றனர்.
இப்போது நாட்டில் யுத்தநிலைமை மாறியதன் காரணமாக வடமாகாண முஸ்லிம்கள் தமது சொந்த ஊர்களில் அவர்களின் வசதிகளுக்கேற்ப மீள்குடியமர செலகின்றனர்.இப்போது அவசரமாக நமது புத்தளத்தினுடனான தொடர்புகளை துண்டிக்கும்படி யார்?யாரோ அகதிகளை பலவிதமான கதைகளைக்கூறி துரத்துகின்றார்கள்.அவர்கள் அன்சாரிகளல்ல முஹாஜிரீன்களதான். (அகதிகள் ) வடமாகாணத்தின் முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா,மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து 1990ம் ஆண்டு முஸ்லிம்கள் புத்தளத்திற்கு அகதிகளாக வருகைதந்தனர். அதில் வவுனியாவைச்சார்ந்தவர்களில ஒரு பகுதியினர் யுத்தகாலத் திலேயே மீளவும் குடியமர்த்தவிட்டனர்.மன்னார் தீவினுள்ளும் ஒருபகுதினர் மீள்குடியமர்ந்துவிட்டனர்.தீவிற்கு வெளியிலும் நு-ற்றுக்கணக்கானவர்கள் சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்திலும் சிலர் தமது வியாபாரநடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.கிளிநொச்சியும்,முல்லைத்தீவும் அப்படியல்ல.பிரதான யுத்தப் பிரதேசங்களாக விளங்கியது.
குறிப்பாக முல்லைத்தீவு முஸ்லிம்கள் அதிகமானவர்கள் விவசாயம் செய்யக் கூடியவர்களாகவும்,இன்னும் சிலர் சிறுகடல்,குளங்களில் மீன் ,இறால் பிடித்து தமது ஜீவனோபாயத்தை நடத்தக்கூடியவர்களாகவும்,மற்றும் சிலர் கூலியாட்களாகவும்,ஒருசிலர் பலதரப்பட்டட வியாபாரத்தினை செய்யக்கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர்.இன்றைய மீள்குடியேற்றம் முல்லைத்தீவு மாவட்ட அரசியலாளர்களினாலும். சமூகத் தலைவர்களாலும் கூடி ஆராயப்படாமல் நடப்பதாவே புலப்படுகின்றது. முல்லைத்தீவில் முஸ்லிம்கள் முத்தையன்கட்டு குளத்திற்குட்பட்ட மீள்குடியமர்வு பொருத்தமாக இருக்கின் றதெனலாம். காரணம் அவர்களுக்கு உடனடியாக விவசாயம் செய்ய வசதிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் அதிகமான முஸ்லிகளுக்கு தண்ணீர்முறிப்பு,குளத்தின் கீழ்தான் விவசாயக்காணிகள் இருக்கின்றது. அங்குள்ள வெடிபொருட்கள் இன்னும் அகற்றப்படவில்லை.மேட்டுநிலப்பயிர் செய்யக்கூடிய இடங்களான முறிப்பு, கொத்தியாகும்பம், பு-தன்வயல் போன்ற இடங்களில் இப்போதுதான் வெடிபொருட்கள் அகற்றும்பணி தொடங்கப் பட்டுள்ளது.ஆகவே மீள்குடியமர்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு உலருணவு வழங்கப்படுவது வழக்கமாகும். அதில் ஒருமாத உலருணவு ஒரு கிழமைக்குப் போதாததாகும். அதன் காரணமாகத்தான் ஆண்களுக்கு தொழிலில்லாத காரணத்தினால் புத்தளத்தில் அதிகளவிலானஅகதிப் பெண்கள் கூலித்தொழிலுக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்கள். ஆனால் முல்லைத்தீவிவு யுத்த பிரதேசமானபடியால் கூலிவேலகூட இப்போதைக் கில்லை. மழையை எதிர்பார்த்துச்செய்யக்கூடிய மேடடுநிலப்பயிர்ச் செய்கை பண்ணுவதற்காக நிலங்களைச்சுத்தப்படுத்தி பண்படுத்துவதற்கும் காலஅவகாசம் போதாது. தண்ணீர்முறிப்பு காலப்போகம் செய்ய முஸ்லிம்களின் காணிகளுள்ள பிரதேசங்களுக்கு அனுமதியும் வழங்கப்படவில்லை. (காரணம் வெடிபொருள் அபாயம்)முஸ்லிம்கள் மீன்பிடித்து வந்த இடங்களில் தற்போது பெரும்பாண்மை சமூகத்தினரும் மீன் பிடிப்பதால் அவற்றிலும் மீன்களில்லை. சில பிரதேசங்களுக்கு மீன்பிடிக்கப்போக முடியாத தடையும் காணப்படுகின்றது.
தமிழ் சகோரதர்களாவது அங்கிருந்திருந்தால் அவர்களிடமாவது கூலி வேலை செய்ய முடியும். அவர்களும் இப்போதைக்கு எம்மைவிட மோசமாக பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலைமை முல்லைத்தீவு முஸ்லிம் களுக்கு ஏன் புரியவிலலை.
கடந்த ஜூன் மாத முற்பகுதியில் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் செய்வதற்கு முன்னர் செய்யவேண்டிய ஏற்பாடுகள் பற்றி உரியவர்களுக்கு எம.எஸ்.பரீத் அவர்களினால் ஆலோசனை வழங்கிய கடிதத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
இன்றைய நிலையில் முல்லைத்தீவு முஸ்லிம்களை மீள்குடியேற்றத் திற்காக வற்புறுத்துவது பொருத்தமில்லை.முல்லைத்தீவு முஸ்லிம்கள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் குடியமர்வதுதான் பொருத்தமான காலமாக முஸலிம் அகதி கருதுகின்றது் காரணம் 2011 ம் ஆண்டு மேட்டுநில மற்றும் நீர்ப்பாய்சல் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய அவகாசமுள்ளதுடன்,தற்போது அரசினால் குளங்களில் விடப்பட்ட மீன்குஞ்சுகளும் பிடிக்கக்கூடிய வளர்ச்சியை அடைந்துவிடும்.இக்காலத்தில் குடியமரக்கூடியவர்கள் பொருளாதாரப்பிரச்சினைகளுக்கோ மனஅழுத் தங்களுக்கோ உள்ளாக மாட்டார்களென முஸ்லிம் அகதி நம்புகின்றது.

முலலைத்தீவில் மீள்குடியமரும்போதிலான பதிவுகளுடன் குடும்பமாக புகைப்படமும் எடுப்பதற்கும் தயாராகப்போகவேண்டும். பிரதேசத்தின் பாதுகாப்பை இராணுவம் இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றது.ஏனைய மாவட்டமக்களை புகைப்படம் பிடிப்பதில்லையாம்.

இதெல்லாம் தற்போது முல்லைத்தீவு முஸ்லிம்களை குழப்பத்திற்குள்ளாக்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.


Friday, November 5, 2010

புத்தளம்,பெருக்குவட்டான் ஜூம்ஆப்பள்ளிவாசலில்கடத்தப்பட்ட ராசிக் அவர்களை மீட்பது சார்பான கூட்டம்

கடத்தப்பட்ட சமீரகம ராசிக் கிராமசேவையாளரை மீட்பது சார்பான கூட்டம் 2010.11.05ம் திகதி இஸா தொழுகையின் பின்னர் புத்தளம், பெருக்குவட்டான் ஜூம்ஆப்பள்ளிவாசலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள் தலைமை தாங்கினார். புத்தளம் பெரியபள்ளி வாசல் பரிபாலனசபைத் தலைவர் அல்ஹாஜ் முஸம்மில் அவர்களுட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்திற்கான அறிவித்ததல் குறித்த பிரதேச ஜூம்ஆப்பள்ளி வாசல்களில் ”வடமாகாண முஸ்லிம்களுக்கான அறிவித்தல்”என்ற தலைபில் அழைப்பிதழ் தரப்பட்டிருந்தது.பிரதேசத்தில் வாழக்கூடிய வடமாண இடம்பெயர்ந்த முஸ்லிம்களில்(அகதிகள்) அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ராசிக் கிராமசேவையாளரை கடத்தியவர் இனங்காணப்பட்டும் இதுவரை அவர் கைதுசெயயப்படாமை பற்றியும்,அவர் சுதந்திரமாக நடமாடுவதாகவும் பலராலும் கூறப்பட்டது.எனவே சந்தேகநபரை கைது செய்வதற்கான அழுத்தங்களை உரிய அதிகாரிகளுக்கு கொடுக்கவேண்டு மெனவும்,அதுசார்பான ஆர்பாட்டங்களின் போது இடம்பெயர்ந்தவர்களின் பங்கு அவசியமெனவும் கூறப்பட்டது. இடம்பெயர்ந்தவர்கள் தாம் ராசிக் G.S அவர்களை மீட்பது சார்பான நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கு வதாகவும்அதற்கென இடம் பெயர்நதோர்கள் வாழும்கிராமங்களிலிருந்து பலர் தமது பெயர்களை முன்வைத்தனர். மேலும் இக்கடத்தல் சார்பான பின்னனியில் பெருக்குவட்டானில் வாழும் அகதிகள் சிலரின் காணிவேலிகள் தீ வைக்கப் பட்டதாகவும்,இக்கடத்தல் குறிப்பிட்ட குழுக்கள் அல்லது நபர் சம்பந்தப் பட்டிருப்பது தெரியவந்தும் பொதுவாக இடம்பெயர்தவர்களை இழிவாக விமர்சிப்பதும், அன்ஸாரிகள் மற்றும் முஹாஜிரீன்கள், மத்தியல் பிளவுகளை ஏற்படுத்த சில விஷமிகள் முயற்சிப்பதாகவும் இதனைத்தடுக்கபுத்தளம் பெரிய பள்ளிவாசல் பொதுமக்களை தெளிவுபடுத்த நடவடிக்ககை எடுக்கவேண்டுமெனக் இடம்பெயர்ந்தோர் கேட்டுக்கொண்டனர். தீ வைப்புச்சம்பவத்தை கூட்ட ஏற்பாட்டு பொறுப்புதாரிகள் மிகவும் கவலையுடன் காதுதாழ்த்திகேட்டனர் இப்படியான சம்பவங்கள் நடக்காமலிருக்க தாம் கவனமாக தொடர்நதும் இருபதாகவும்,கூறினார்கள்.
தொடர்ந்து ராசிக் G.S ஐ மீட்பது சார்பான நடவடிக்கையில் உள்ளுர் மற்றும் இடம்பெயர்ந்தோர்(முல்லைத்தீவு.மன்னார்,யாழ்ப்பாணம்) அனைவரும் ஒன்றினைந்து போராடுவது என்ற நல்ல முடிவுடன் கூட்டம் இனிது நிறைவுற்றது. முஸ்லிம்அகதி

Thursday, November 4, 2010

CTF ராசிக் கடத்தல் விவகாரம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடாத்துவதற்கென மிகவும் ஆவலாக புத்தளம் மக்களினால் எதிர்பார்க்கப்பட்டு வந்த கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் இன்று காலை சுமார் 9.00 மணியளவில் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அவரது வருகையை எதிர்பார்த்து காலையில் இருந்து புத்தளம் பெரிய பள்ளிவாசலின் நிர்வாக சபை அங்கத்தவர்கள் மற்றும் புத்தளத்தின் சமூக விவகாரங்களில் பங்கேற்கும் பலரும் காத்திருந்தனர்.
புதிய மண்டபத்தின் மேல் மாடியில் கூட்டம் ஆரம்பமானது. தலைமை உரையை பள்ளி நிர்வாக சபைத் தலைவர் நிகழ்த்த அதனைத் தொடர்ந்து ஜனாப் ராசிக் அவர்கள் கடத்தப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தினர் கடந்த எட்டு மாதங்களாக அவரை மீட்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள், இந்த விவகாரம் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முறைப்பாடாக எவ்வாறு முன்வைக்கப்பட்டது போன்ற விடயங்கள் தெளிவு படுத்தப்பட்டன. இந்த விவகாரத்தை ஏன் புத்தளம் பெரிய பள்ளி கையாள்வதற்குத் தீர்மானித்தது – அதன் நியாயங்கள் என்ன என்ற விடயத்தை ஜனாப் முஸம்மில் தனது உரையில் முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜம்இய்யதுல் உலமா மற்றும் புத்தளம் சமூகத்தின் நலன்விரும்பிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட செயற்குழுவின் இன்று வரையிலான தொடர்ச்சியான செயற்பாடுகள் அமைச்சருக்கும் அவருடன் கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டன.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் இந்த விடயத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி பரப்பப்பட்டுவரும் அவதூறுகளுக்கு பெரிய பள்ளி நிர்வாகமும் உலமா சபைத் தலைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று அதிரடியாகக் கூறினார். பொலிசாரால் தேடப்பட்டுவரும் கடத்தல் சந்தேக நபர் நவ்ஷாதை தான் பாதுகாப்பதாகவும், ராசிக் அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் பொலிஸ் தரப்புக்கு அரசியல் அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் பரப்பப்படும் வதந்திகளை தான் முற்றாக மறுப்பதாக கூறிய அமைச்சர் அவ்வாறான அபிப்பிராயங்களை ஏற்படுத்துவதில் ராசிக் அவர்களை மீட்பதற்காக உழைக்கும் செயற்குழு முனைப்புடன் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார். அவ்வேளை காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து உரையாற்றிய அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் கடத்தப்பட்ட ராசிக் அவர்களை மீட்கும் பணியில் பள்ளியின் செயற்குழு எதிர்கொள்ளும் சவால்களை விலாவாரியாக விபரித்தார். தானோ அல்லது பள்ளி நிர்வாகிகளோ அமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் கருத்துக்களை வெளியிடவில்லை. மாறாக அமைச்சரை சந்தித்து இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான நல்ல முடிவுகளை பெற்றுக் கொள்வதில் ஆர்வமுடன் இருந்ததாகவும் கூறினார். பள்ளி நிர்வாகம் அமைத்த செயலணியின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை திரிபு படுத்தி அமைச்சரிடம் கூறிய விஷமிகளை அவர் கடுமையாகக் கண்டித்தது குறிப்பிடத்தக்கது. “‘எமது இந்த முயற்சிகள் இடம்பெயர்ந்த சகோதரர்களுக்கு எதிரானதோ அல்லது அமைச்சருக்கு எதிரானதோ அல்ல. இரண்டு தரப்புகளிலும் இருக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில விஷமிகளின் சதி முயற்சியே இந்த முரண்பாட்டுக்கு காரணம்” என அவர் ஆதாரங்களுடன் விளக்கினார்.
கடந்த இரு வாரங்களாக வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான அநாமதேய துண்டுப் பிரசுரங்கள் ஜூம்ஆ நடைபெறும் வேளையில் பெரிய பள்ளிவாசலின் முற்றத்தில் விஷமிகளால் வைக்கப்பட்டிருந்தன. புத்தளம் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்தில் அவற்றின் உள்ளடக்கம் அமைந்திருந்தது என அவர் குறிப்பிட்டார். (இந்த இணையத் தளத்தில் 27.10.2010 அன்று வெளியான உண்மைகள் ஏன் மறைக்கப் படுகின்றன.. யாரைக் காப்பாற்றுவதற்காக? என்ற ஆக்கம் கடந்த 29.10.2010 வெள்ளிக்கிழமையன்று மஞ்கள் நோட்டீஸ் வடிவில் ஆயிரக் கணக்காக அச்சிடப்பட்டு ஜூம்ஆ முடியும் தறுவாயில் கடத்தலில் சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது அவர்களின் அல்லக்கைகள் சிலரால் பள்ளிவாசல் முற்றத்தில் நின்றிருந்த சின்னஞ்சிறார்களிடம் கொடுக்கப்பட்டிருந்தன. உரிய நேரத்தில் அவை கண்டுபிடிக்கப்பட்டு அந்த நோட்டீஸ் வினியோகம் தவிர்க்கப்பட்டது.)
சுமார் இரு தசாப்தங்களாக பிட்டும் தேங்காய்ப்பூவும் போல சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழும் சமூகங்களை பிரித்து அதில் இலாபம் காணும் எத்தர்களை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். நாம் ஒன்றுபட்டு இவ்வாறான விவகாரங்களை கையாளும்போது அவ்வாறான பிரித்தாளும் சூழ்ச்சிகள் பயனற்றுப் போகும் என்பது அவரது வாதமாக இருந்தது. அப்துல்லா ஹஸரத் அவர்களின் அழுத்தம் திருத்தமான உரையினை அமைதியாக அமைச்சர் ரிஷாத் செவிமடுத்துக் கொண்டிருந்தார். ராசிக் குற்றம் செய்தவராக இருக்கும் பட்சத்தில் அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமே ஒழிய அதற்கு கடத்தலும் கப்பம் கேட்பதும் தீர்வல்ல. எனவே இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் இந்த கடத்தலுக்கு பின்னணியில் உள்ள காரணிகளை கண்டறிந்து இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் இந்த சமூகத்தில் நடைபெறாமல் பாதுகாப்பதே எம் அனைவரினதும் குறிக்கோளாகும் என்று அவர் தனது உரையை முடித்துக் கொண்டார்.

ராசிக் கடத்தப்பட்ட பின்னர் அவரை மீட்கும் விடயத்விடயத்தில் சீ.டீ.எப். நிறுவனம் மெத்தனப் போக்குடன் செயற்பட்டு வருவதும் அந்த நிறுவனத்தின் நம்பிக்கையாளர்களுடன் பெரிய பள்ளி நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அவர்களிடமிருந்து ராசிக் தொடர்பாக உருப்படியான எந்த தகவல்களும் பெறப்படவில்லை என்ற விடயம் அமைச்சருக்கு சுட்டிக் காட்டப்பட்டது. குறிப்பாக தற்போது உலக உணவுத் திட்டம் (WFP)ல் பணியாற்றும் நிஃமத் என்ற CTFஇன் முன்னாள் நம்பிக்கையாளர் பள்ளியில் நடந்த பேச்சுவார்த்தையில் “ராசிக் கடத்தப்படவில்லை அவர் காணாமல் தான் போய் இருக்கிறார்” என தான் இன்னும் நம்புவதாக தெரிவித்த கருத்தை அறிந்து கொண்ட அமைச்சர் தனது புருவங்களை உயர்த்தி ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் ராசிக் கடத்தல் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பாக விசாரித்த பல்வேறு உள்ளூர் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் மேற்படி நிஃமத் “ராசிக் கடத்தப்படவில்லை. அவர் பெருந் தொகைப் பணத்தோடும் – ஒரு பெண்ணோடும் தலைமறைவாகி விட்டார். எனவே இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வது பயனற்றது” என்று கூறிய பல சம்பவங்கள் அவரது குடும்பத்தினரால் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டன. அதன் உச்ச கட்டமாக ராசிக்கின் மனைவியிடமே நிஃமத் சென்று ராசிக் ஒரு பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டதாக கூறியது தெரிவிக்கப்பட்டதும் சபையில் சலசலப்பையும் சபையோர் மத்தியில் பலத்த விசனத்தையும் தோற்றுவித்தது.

அவ்வேளை கருத்து தெரிவித்த அமைச்சர், மக்கள் சேவைக்கென பெற்றுக் கொண்ட கோடிக் கணக்கான ரூபாய்களைக் கொண்டு CTF நிறுவன நம்பிக்கையாளர்கள் தத்தமது பெயர்களில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அந்த நிறுவனம் தொடர்பாக மேல்மட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், ராசிக் மீட்பு விடயமாக தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வதற்கு தயாராய் இருப்பதாகவும், பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த இருப்பதாகவும் அதன் அடுத்த கட்டமாக புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகம் பாதுகாப்பு செயலாளரை சந்திப்பதற்கு கூட ஏற்பாடுகள் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

கடந்த 30.10.2010 அன்று ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம்களின் இடப்பெயர்வு இருபது ஆண்டு பூர்த்தி நிகழ்வில் ராசிக் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாகி இருக்கும் பொலிசாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் நவ்ஷாத் கலந்து கொள்கிறார் என புத்தளத்தில் பரபரப்பாக செய்தி ஒன்று உலாவியது. அது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் தான் இந்தியாவில் இருந்து வரும் வழியில் விமான நிலையத்திலிருந்து நேராக வைபவத்துக்கு வந்ததாகவும் அங்கு நவ்ஷாதைக் கண்ட போது கோபத்துடன் “நீர் தேடப்படும் ஒரு சந்தேக நபர். உடனடியாக பொலிசில் சரணடையும்” என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் சூடான வாதப் பிரதிவாதங்களுடன் ஆரம்பித்த கூட்டம் அவ்வாறே தொடர்ந்து, இறுதியில் பரஸ்பர உடன்பாடுகளுடன் முடிவுக்கு வந்தது. எந்த ஒரு விவகாரமாயினும் வதந்திகளை நம்பாது உரியவர்களுடன் நேரடியாகக் கலந்து பேசி உளச் சுத்தியுடனும் உயரிய சமூக நோக்குடனும் செயல்படும்போது அந்த செயல்பாட்டின் மேல் இறைவனின் அருட்கரங்கள் இருக்கும் என்ற அப்துல்லா மவ்லவியின் அருள்வாக்கு அனைத்து தரப்பினரதும் கவனத்துக்கு உரியது! அமைச்சரின் வாக்குறுதிகளுக்கு அமைய மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகளைப் பார்க்க புத்தளம் சமூகம் காத்திருக்கிறது. இன்ஷா அல்லாஹ் ராசிக் திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்போடு அவரது குடும்பம் காத்திருக்கிறது!

நன்றி -puttalam.net16.net.com

புத்தளம் ராசிக் G.S கடத்தப்பட்டு 8 மாதங்களாகிவிட்டன.



Monday, November 1, 2010

இது கண்டன கடிததமில்லையென முஸ்லிம்அகதி கூறவிரும்புகிறது.

இத்துண்டுப்பிரசுரம் கடந்த 2010.10.29ம திகதி புத்தளம் மாவட்டத்திலுள்ள சகல ஜூம்ஆப்பள்ளிவாசல்களிலும் வினியோகம் செய்யப்பட்டது.இப்பிரசுரம் www.puttalam.net16.net குறிப்பிட்டதுபோன்று கண்டனப்பிரசுரமில்லை என்பதனை முஸ்லிம்அகதி முதலில் சுட்டிக்காட்டவிரும்புகிறது.
”இதில்குறிப்பிட்ட சிலவிடயங்களையும் பிரித்துக்காட்ட விரும்புகிறது”
1. 1990ம் ஆண்டுக்குப்பின் இப்பிரதேசம் இங்குவந்த முஸ்லிம்களால் வளம்பெற்று,வலுப்பெற்று நமக்குள் நல்லெண்ணமும்,நல்லுறவும், அன்னியொன்னியமும் வளர்நதுள்ளதை நாம் அனைவரும் மனங்கொள்ள வேண்டும்.
இத்தகவலானது 1990ம் ஆண்டு வடக்கிலிருந்து விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின்(அகதிகளின்) புத்தளத்திற்கான வருகையால் (ஹிஜ்றத்) புத்தளம் மாவட்டம் வளம்பெற்றதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.இது கடந்த சில நாட்களுக்கு முன்னர் அகதிகளின் மனங்களைப் புண்படுத்திய பிரசுரங்களை வெளியிட்ட புத்துசீவிகளுக்கு பலத்த செருப்படியாக விழுந்துள்ளதென முஸ்லிம்அகதி கருதுகின்றது.அத்துண்டுப்பிரசுரத்தை வடிவமைத்தவர்கள் கடத்தப்பட்டவரின் கிராமத்திற்கு அருகாமையிலள்ள புத்தி சீவிகள் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது.அவர்களுக்கும் நன்றிகள்.

2. மேற்காட்டிய காட்டிய ஹதீஸில் இரண்டு விடயங்களையம் பிரித்துப்பார்க்க விரும்புகின்றது.
அ. அநியாயக்காரனுக்கு உதவுதல்.
1987ம்ஆண்டிற்கு முன்னர் புத்தளத்தில் ”றெட்பானா” என்னும் பெயருடைய அரசசார்பற்ற நிறுவனம் மட்டுமே சேவைகளை வழங்கிவ்ந்துள்ளது. வடமாகாண முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் 1987ம் ஆண்டு அகதிகளாக புத்தளத்திற்கு வந்தபோது போறுட்நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளரினால்புத்தளம் கடையாமோட்டையில் வசிக்கும் பிரபலவியாபாரியும்,ஹஜ் பிரயாண முகவருமான அல்ஹாஜ் எம்.பி.எஸ். ஆப்தீன் அவர்களினின் ஊடாக பல உதவிப் பொருட்களை வழங்கினார்.
1990 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வடமாகாண முஸ்லிம்கள் வந்த பின்னர்தான் அரசசார்பற்ற நிறுவனங்களும் முளைத்தன்.அதில் தற்போது 'R.D.F"எனனும நிறுவனம் மடடும மனனார் மாவட்ட பெரியமடுவிலிருநது வந்ததாகக் கூறபப்டுகிறதது,
1990ம் ஆண்டு கடையாமோட்டை என்னும் கிராமத்தில் முல்லைத்தீவு, மன்னார்,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச்சார்தவர்களினால் "O.D.M.N.P" என்ற பெயரில் ஒரு அரசசார்பற்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.இவர்களுக்கு போறுட்நிறுவனம் நேரடியாக பணம்,பொருட்கள் வழங்கியது. இந்த நிறுவனத்தினர் அகதிகளை வியாபாரப்பொருளாக பயன்படுத்தி தாம் பணம் சம்பாதிப்பதில் கண்ணாக செயற்பட்டனர்.இவர்களுக்கு இப்பிரதேசத்தில் அகதிகளுக்கான கொடுப்பனவுகளுடன் தொடர்புடைய அரச மற்றும் கூட்டுறவு அதிகாரிகளின் ஆதரவும் காணப்பட்டது.இந்நிறவனம் தவறான புள்ளிவிபரங் களை பயன்படுத்த வற்புறுத்தப்பட்டனர்.காரணம் மோசடியான ஆயிரக் கணக்கான திருட்டு நிவாரணக்காட்டுககள் இபபிரதேசத்ததில் மோசடியாக அகதிகளாலும்,அரசஅதிகாரிகளினாலும் பெறப்பட்டுவந்தது. ஆகவே இந்த :O.D.M.N.P" என்ற நிறுவனத்தினால் காட்டப்படும் அகதிகளின் குடும்ப விபரமு்ம்,அரச நிவாரணம் பெறும் குடும்ப விபரமும் சமமாக இருக்க வேண்டிய கட்டாயம் காணப்பட்டடது. இந்த நிறுவன்தின மோசடிகள் சார்பாக போறுட் நிறுவனத்தின் பணிப்பாளருக்கு ”முஸ்லிம்அகதி”எழுத்து மூலம் முறையீடு செய்தது.இதற்கான விசாரணை கடையாமோட்டை மஹாவித்தியாலயத்தில் நடைபெற்றது.போரூட் நிறுவனத்தின பணிப்பாளர் பளீல்மரைக்கார், திட்டபபணிப்பாளர் முருகையா மறறும் புத்தளம் பலநோக்குக்கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் பொதுமுகாமையாளர் மர்ஹூம் மர்ஸூக் ஆகியோர் கலந்து கொண்டன். ஆனாலும் நீதி தோற்கடிக்கப்பட்டது. அகதிகள் விலைபோவதை பொறுக்கமுடியாத முஸ்லிம் அகதி முல்லைத்தீவு அகதிகளின் உறுதுணையுடன் இடம்பெயர்ந்நத முஸ்லிம் அபிவிருத்தி அலகு” [D.M.D.U] என்ற பெயரில் கடையாமோட்டை என்னும் கிராமத்தில் ஆரம்பித்தது.இதில் முல்லைத்தீவு அகதிகள் அங்கத்துவம் பெறாமல் அரசஅதிகாதிள் றேஸனைக்காரணம்காட்டி தடைசெய்தனர்.அலுவலகம் திறக்க வந்த அமைச்சரை அலுவலகம் திறக்கவேண்டாமெனத் தடுத்தனர்.முடியவில்லை.
இவ்வமைப்பு அகதிகளின் நிவாரணங்களில் நிறையில் மோசடிகள் செய்வதனை அகதிகளின் மூலம் தெரிந்து கூட்டுறவுச்சங்கத்திற்கு முறையீடு செய்தது.இதனை ஒரு குற்றச்செயலாக பார்த்த சில அரச அதிகாரிகள்,சிலகூட்டுறவு ஊழியர், றேஸன் வியாபாரிகளென அகதிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட அகதி மோசடிக்கும்பல்களின் ஏற்பாட்டில் இவ்வலுவலகம் உடைக்கப்பட்டது.இந்நிலையில் இந்நிறுனம் அமைதியாக இருந்தது.பதிவுசெய்யக்கூட அரச அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.2000ம் ஆண்டின் பின்னர்மன்னார் மாவட்ட முசலி பிரதேசத்தை சார்ந்தவரும்,புத்தளம் பிரதேச செயலாளருமான மதிப்பிற்குரிய முகையினுதீன் அவர்களின் அனுமதியுடன் [D.M.D.U] நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.அவரின் அனுசணையுடன் புத்தளம் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின கூட்டிணையத்தில் அங்கத்துவமும் பெற்றுக்கொண்டது.
புத்தளம் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டிணையத்தின் உப-தலைவரான முஸ்லிம் அகதி அரசாங்க அதிபரை தமது அலுவலகத்தில் கைலாகு செய்து வரவேற்கும்காட்சி அருகில் குறித்த நிறுவனத்தின் தலைவர் திரு பிரிஸ் மற்றும் நிருவாக அதிகாரி திருமதி சீனியா அவர்களும்.காணப்படுகின்றனர்.
அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டங்களிலும், C.H.A யினால் வழிநடாத்தப்பட்ட C.P.N கூட்டங்களிலும் அதிகமான அரசசார்பற்ற நிறுவனங்களின் பொய்யான அறிக்கைகளை காணமுடியும்.அவ்வப்போது முஸ்லிம் அகதி தனது எதிர்ப்புக் களை காட்டத்தவறுவதில்லை.இவர்களுக்கு மார்கமும் விளங்காது.இவர்களின் தொல்லை காரணமாகவே முஸ்லிம் அகதி தானாக ஒதுங்கிக்கொண்டது.இப்ப நடப்பது அன்று சொன்னதுதான் கொள்ளைக்காரருக்கு மத்தியில் பங்குப்பிரச் சினை பங்கு போடுவதில்,அனுபவிப்பதில் போட்டி சபாஸ் சரியான போட்டியா? இல்லையாவென பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆ.அநீதி இழைக்கப்பட்டவர் பாவியாக இருந்தாலும் அவருடைய பிரார்த்தனை எந்தவித தங்குதடையின்றி அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படும். வடக்கிலவிருந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம் அகதிகள் மீண்டும் புத்தளத்தில் செயற்படுகின்ற அரசசார்பற்ற நிறவனங்களினாலும் மீண்டும்அநீதி இழைக்கப்பட்டது. அவர்களும் நேரடியாக அல்லாஹ்விடம் முறையிட்டனர் எனவே...............................................C.T.F உட்பட அதிகமான அரசசார்பற்ற நிறுவனங்கள ஆர்.டி.எப் நிறுவனம் ஈன்ற குட்டிகள்தான் என்றால் அது மிகையாகாது.