Saturday, March 5, 2011

ஒற்றுமையென்னும் கயிற்றைப்பற்றிப் பிடித்துக கொள்ளுங்கள்.

       ண்மையில்.நான்  இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவொன்றின் இறுவெட்டைப் பார்க்கும்  வாய்பபுக் கிடைத்தது. அதில் “ஒற்றுமை என்னும் கயிற்றைப்பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்“என்று மனித சமூகத்தைப்பார்த்து கூறிய அழைப்பாளர் டாக்டர் சாஹிர்நாயக் அவர்கள் அந்த ஒற்றுமையென்னும் கயிறு அல்-குர்ஆன்னென அதனை உயர்த்தி காண்பித்தது என்னை மட்டுமல்ல சுவர்க்கத்தை விரும்பும்    
அனைத்து சகோதரர்களின் மனங்களிலும் இடம்பிடித்திருக்கும் என்பதி
ல் எந்தவித சந்தேகமுமில்லை., இதன் காரணமாக பலர் தமது வாழ்கையில் அவற்றை செயற்படுத்த முன் வநதிருப்பதையும் ,இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. 
   ஆனால் இன்று  புத்தளத்தில்  நிலைமை தலைகீழாகவுள்ளது. அதாவது சமூகங்களுக்கு மத்தியில்  ஒற்றுமையின் சிறப்பை  எடுத்தியம்பவேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ள  நமது பிரதேச  உலமாக்களெனவும,பீரங்கிப் பேச்சாளரகளெனவும்,தீன்தாரிகளெனவும்,புத்திஜீவிக ளெனவும், அழைப்பாளர்களெனவும்தம்மைப்பீற்றிக் கொள்வோரும்,தாம்தான் சுவர்கத்திற்கு செல்லும் கூட்டமென தம்பட்டம் அடிப்போரும்  நமது சமூகங்களுக்குள் (அன்சாரிகள், முஹாஜிரீன்கள்) மத்தியில் பிளவுகளை (குழப்பங்களை)ஏற்படுத்தும் கருத்துக்களை கூறியும்,எழுதியும் வருவதாக நல்லுள்ளம் கொண்ட அன்சாரிகளான உலமாக்களும்,புத்தி ஜீவிகளும், முஹாஜிரீன்களும் துன்பப்பட்டு கூறுவதை அவதானிக்க முடிகிறது.
     இதற்கான காரணம் என்ன? 1990ம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து வெறும் கைகளுடன் வந்தவர்கள் இன்று (20 வருடங்களின்)ஓரளவு வசதி வாய்ப்புக்களுடன் வாழுவதால் இடம் பெயர்ந்தவர்கள் சிலரிடம் கர்வமும், உள்ளுர் மக்கள் சிலரிடம் பொறாமையும் காணப்படுகின்றது.
இதைஉணர்ந்த முஸ்லிம் அகதி கீழ்வரும் குர்ஆனின் வசனங்களை அதன் மொழி பெயர்ப்புக்களுடன்  முஹாஜிரீன்கள்,அன்சாரிகளுக்கு மத்தியில் சமாதானததை ஏற்படுத்தவென புத்தளத்ததை மையமாக கொண்டு வெளிவந்த அந்த தமிழ் பத்திரிகைக்கு கட்டுரையொன்றை 3,4 வருடங்களுக்கு முன்னர் வழங்கினார்.போலிக்காரணங்களைககூறிஅதனை பிரசுரிப்பதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர்.. அதுபோல் அந்த பத்திரிகை வெளிவருவதை அல்லாஹ்வும் விரும்பவில்லைப்போலும்.பின்னர் அல-குர்ஆனிலிருந்து உங்கள் சிந்தனைக்கு என்ற தலைப்பில் அதே இரு குர்ஆன் வசனங்களடங்கிய பிரதிகளை புத்தளத்தின் பிரபல பாடசாலைகள் உட்பட 19 பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டது.காரணம் பாடசாலை மாணவர்களிலிருந்துதான் சமாதானம் உருவாக வேண்டுமென்பதே முஸ்லிம் அகதியின் நோக்கமாகவிருந்தது.
         அகதிகள் புத்தளம் வந்த காலம்தொட்டு இவர்களை விற்றுப்பிழைத்து கோடீஸ்வரர்களாக வாழும் உள்ளுர் வாசிகள் சிலரும்அகதிகள் சிலரும் கூட்டாக நடாத்தும் என.ஜீ.ஓ.(அரசசார்பற்ற நிறுவனங்ள்) க்கள் பற்றி 2009ம் ஆண்டில்  இத்தளத்தில் பார்கலாம் .அடித்த கொள்ளைச் சொத்துக்களை பிரிப்பதில் இவர்களுக்கு மத்தியில் மோதல்கள் ஏற்பட்டு ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.என கூறப்படுகிறது.இது ஏனென்று யாரும் மார்க்க அடிப்படையில் சிந்திக்கவில்லைப்போலும்,அதாவது அநீதி இழைக்கப்பட்டவர்களுடைய பிரார்த்தனைகள்  அல்லாஹ்வினால் நேரடியாக எந்தவித தங்கு தடையின்றி ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அந்தவகையில் அகதிகளுக்கு பலவழிகளிலும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை நீங்களும் அறிவீர்கள் இவர்களுக்கு இந்தமாதிரியான என.ஜீ.ஓ க்கள் செய்த துரோகங்களுக்காக அகதிகள் அல்லாஹ்விடம் ஏலவே முறையிட்டுள்ளனர்.அதன் பலாபலன்களை இப்போது மட்டுமல்ல தொடர்ந்தும் எதிர்பார்க்கலாம்.
இக்கடத்தலை காரணமாக வைத்துத்தான் இன்று முரண்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றது..இதை இன்னொரு கூட்டம்  வேறுவிதமாகப்பயன் படுத்தப்பார்க்கிறது.இப்போது நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.மீள்குடியேற்றம் நடைபெறுகிறது.இந்த அகதிகளெல்லாம்  வடமாகாணத்திற்கு திருப்பி அனுப்பிவிட்டால் அவர்களால் பயன்படுத்தப்படும் நில,புலங்களை தாம் இலேசாக  அல்லது இலவசமாக அனுபவிக்கலாம் என எதிர்பார்கின்றனர்..உள்ளுர்  முஸ்லிம்கள் வாழமுடியாத .இடங்களிலுள்ள காணிகளும்,மேட்டுக்காணிகளும்,மழை வெள்ளத்தினால் மூடப்படக்கூடிய காணிகளுமே  அகதிகள் குடியிருக்கும் காணிகளாகக் காணப்படுகிறது.இவை உள்ளுர் வாசிகளால் விற்கப்பட்ட காணிகளாகும்.இன்று இவ்விடங்கள் பிரபல்யமான பிரதேசங்களாகவும்  இவ்விடங்களில் அமைந்த வீதிகளில் எந்த நேரத்திலும்  யாரும் பிரயாணம் செய்யக்கூடிய வீதிகளாகவும் காணப்படுகின்றதையும் மறந்து விடமுடியாது. பத்தளத்தில் கடந்த இருபது வருடத்தில் ஏற்படுத்தப்பட்ட அபிருத்தியையும் நாம் மறந்து விமுடியாது.இதற்காண காரணங்களையெல்லாம்  என்னால் உன்னால் என்பதை விட மனட்சாட்சிடன் திருப்பிப்பார்க்க வேண்டும்.உன்னால் அதை ஜீரணிக்க முடியாவட்டாலும் பரவாயில்லை .அடத்தவரையாவது நீ தடுக்காமலிருக்கலாமல்லவா? நீ ஏன் பொறாமைப்படவேண்டும்.அல்லாஹ்வின் நாட்டமின்றி எதுவும் நடக்காது என்று அடுத்தவருக்குச் சொன்னால் மட்டும் போதாது.அதை முதலில் நீயும் நம்ப வேண்டும். முஸ்லிமென மார்தட்டிக்கொள்ளும் நீ ஹழா,கதிரை (விதி) நம்பமாட்டடாயா?
 








3-195  ஆதலால் அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான்.  உங்களில் ஆணோ,பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்)அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன்.(ஏனெனில் ஆணாகவோ,பெண்ணாகவோ இருப்பினும்)   நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர்தாம். எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ மேலும் என்பாதையில் துன்பப்பட்டார்களோ,மேலும் போரிட்டார்களோ,மேலும் (போரில்) கொள்ளப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றிவிடுவென்.இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றவோ அந்தச்சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன். (என்று கூறுவான்) இது அல்லாஹ்விடமிருந்து  (அவர்களுக்குக்)  கிட்டும் சண்மானமாகும்.இன்னும் அல்லாஹ்வாகிய 
 அவனிடத்தில்  அழகிய சண்மானங்கள் உண்டு.







16-41   கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர் எவர்கள் அல்லாஹ்விற்காக நாடு துறந்து   ( ஹிஜ்ரத்) சென்னார்களோ,அவர்களுக்கு நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம்.இன்னும் அவர்கள் அறிந்து கொண்டாகளேயானால் மறுமையிலுள்ள  (நற்)கூலி (இதைவிட)மிகவும் பெரியது.          

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.