“எங்கே அநீதி இருக்குமோ அங்கே அமைதியிருக்க முடியாது” என்று இஸ்லாம் கூறுகின்றது.அது வீடாக இருக்கலாம்,கிராமமாகவிருக்கலாம், நாடாகவிருக்கலாம்,ஏன் உலகமாகவும் இருக்கலாம்.நமது நாடும் இதற்கு விதிவிலக்கில்லை.ஆனால் வல்லவமையடைய ஒருவனோ, ஒரு கூட்டமோ, ஒரு சமூகமோ,ஒரு இனமோ அடுத்தவரைப் பயன்டுத்தி, பலிக்கடாவாக்கி, அடுத்தவர் மீது கால் வைத்து ஏறி மேலே போவதை இப்போலியுலகில் காணமுடிகிறது. இச் செயற்பாடுகளை இன்று எங்கும், எதிலும் காண முடிகிறது.அதற்காக வல்லவர்கள் அடுத்தவர்களை ஏமாளிகளாக எண்ணிவிடமுடியாது.அநீதிக்குள்ளாகுபவர் இஸ்லாமிய வாழ்க்கையுடைவராகவிருந்தால் விதியின் மீது நம்பிக்கை கொண்டவராக இம்மையிலும், மறுமையிலும் வெற்றியாளராகலாம்.அல்லது வன்முறை யாளராகவும் மாறலாம். ஆக அமைதி நிலை பெற ஒரே வழி நம்மைப் படைத்த இறைவனை மட்டும் வணங்கி வழிபடுவதும். அவனால் அனுப்பப்பட்ட து-தர்களின் து-துத்துவத்தை ஏற்று செயற்படுவதுமாகும். அதாவது ஏகத்துவத்தை பூரணமாக ஏற்றுச் செயற்படுவதாகும்.அதற்காக ஈராக்,லிபியா போன்ற நாடுகளை உதாரணம் காட்ட நீங்கள் முயலக் கூடாது.நான் கூறுவது அல்-குர்ஆன்,அல்-ஹதீஸ்களுக்கமைவாக வாழ்ப வர்களை (முஸ்லிம்களை) மட்டுமே கூறுகின்றேன்