டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார் தாசன்)
கேள்வி எங்கள் தேசம் – கடந்த மூன்று சகாப்தங்களாக இலங்கையில் நடைபெற்ற யுத்தம் மற்றும் அதில் மூன்றாம் தரப்பான முஸ்லிம் சமுதாயத்தின் பாதிப்புக்கள் குறித்து எந்த அளவு தெரிந்து வைத்திருக் கின்றீர்கள்?
பதில் டாக்டர் அப்துல்லாஹ் -ஆரம்பத்தில் ஈழப்போராட்டத்தை பெரிதும் ஆதரித்தவன் நான்.தமிழ் மக்களுக்காக தனித்துவ தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவன்.இதற்காக நாடுநாடாகச் சென்று ஆதரவுப்பிரச்சாரம் செய்தவன்.
1990 ஆம் ஆண்டு புலிகளால் வடக்கு முஸ்லிம்கள் இரு மணி நேர அவகாசத்தில் விரட்டியடிக்கப்பட்ட போது நான் பிரான்சில் இருந்தேன்.இதனைக் கேள்வியுற்றதும் பிரான்சிலுள்ள இலங்கைத் தமிழ் தலைவர்களை சந்தித்து இது பற்றி வன்மையாக எச்சரித்தேன்.அங்கிருந்து விவாதிப்பது பயனற்றது எனக்கருதி பிரான்சிலிருந்து இலங்கைக்க வந்து இங்குள்ள முக்கிய இயக்கத் தலைவர்களை சந்தித்து இந்தக் கொடுங்கோல் முறையை வன்மையாக எதிர்த்தேன்.
கடைந்தெடுத்த இந்த அயோக்கியத்தனத்துக்கு விலை கொடுக்கப் போகிறீர்கள் என்று வன்மையான தொனியில் எச்சரித்தேன்.ஆனால் முஸ்லிம்களில் காட்டிக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.அதனால்தான் அவர்களை விரட்டியடித்தோம்.எனக் காரணம் சொல்லப்பட்டது.
ஆனால் அப்படிக் காட்டிக் கொடுப்பவர்கள் இருந்தால் அவர்களைத் தனியாக இனங்கண்டுஅவர்களுக்கான தண்டனையை வழங்குங்கள். குழந்தைகளையும்,பெண்களையும்,வயோதிபர்களையும்,நோயாளிகளையும் விரட்டியடிக்கும் ஈனச்செயலை ஏன் செய்கிறீர்கள். என எதிர்த்தேன்.
இந்த அநீதிக்கு விலை கொடுக்கப் போகிறீர்களே! என்பதை உணர்ந்தேன்.இது உலகில் பல இடங்களில் நடந்த யதார்த்த அனுபவம்.யார் நிராயுத பாணிகளான அப்பாவி மக்களை ஆயுத பலத்தால் அழித்து வெளியேற்றும் கொடுஞ்செயல்களை செய்கிறார்களோ அவர்கள் அதற்குரிய விலையைக் கொடுத்தே வந்திருக்கின்றனர்.
வடக்கு முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சூறையாடிக் கொண்டுஅவர்களை விரட்டு,விரட்டு என விரட்டியமை,காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுது கொணடிருந்தவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றதும் இந்தச் சம்பவங்களை நியாயப்படுத்தி சைவப்புலவர்கள் பத்திரிகைகளில் கட்டுரை எழுதியதும் என்னை மிகவும் உறுத்திய இடங்கள்.
விடுதலை என்பது சுதந்திர உணர்ச்சிக்கானது.பிறருடைய சுதந்திரத்தைப் பறித்து எப்படி நீங்கள் சுதந்திரத்தைப் பெறப் போகிறீர்கள்.என்று இறுதிவரை போராடினேன்.ஆனால் அதனை நியாயமென அவர்கள் வாதிட்டுக் கொண்டேயிருந்தார்கள்.
சமகாலத்தில்தமிழ் நாட்டுத்தமிழ்த் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு இச்சமபவங்களைக் கண்டிக்குமாறு வேண்டிக்கொண்டேன்.ஆனால் ஒருசிலர் மாத்திரம் மிகவும் நழுவல் போக்குடன் இதுபற்றி எழுதினார்கள்.
அதைவிட இலங்கையிலும்,தமிழ் நாட்டிலும் இந்த ஈனச்செயல்களை நியாயப் படுத்தியே தமிழ்ப் பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருந்தமை மிகவும் கவலை தரும் விடயமாகும்.இந்தக் கொடுஞ் செயல்களுக்குப் பின்னாள் நான் அவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொண்டேன்.
நன்றி “கம்பளிப்பூச்சியின் ரோமம் உதிர்வது போல் எனது அறியாமை உதிர்ந்த்து” எனும் புத்தகத்திலிருந்து
காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்களின் ஜனாஸாக் களையே மேலே காணுகின்றீர்கள்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.