Wednesday, April 18, 2012

வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா? பகுதி -5

அஸ்ஸலாமு அலைக்கும்
காலை பத்தரைமணிக்குப்பின்னர்  பச்சைத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. மாலை ஐந்து மணியளவில்லை.எம்மை இரவைக்கு லைட் போஸ்ரில் போடுவது சார்பாகவும்  கதைப்பது எனது காதில் கேட்டது.செய்யாத குற்றத்திற்காக நான் ஏன்?எட்டப்பன் என்ற பெயருடன் இறக்கவேண்டும்.இப்போது உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக எண்ணினேன்.இதுவரை முல்லைத்தீவு முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள் என்ற குற்றத்திற்காக எந்த இயக்கத்தினாலும் ஒரு முஸ்லிம் கூடசுட்டுக் கொல்லப்பட வில்லை
. உண்மையை சொல்லத்தவறினால் மரணம் தான் என எண்ணியவனாக அண்ணே...அண்ணே....என குரல் கொடுத்தேன்.உடனே புலிகளின் முள்ளியவளை பிரதேச இராணுவப் பொறுப்பாளரான சந்திரன் வந்து என்ன எனக் கேட்டான் நான் சிறுநீர்கழிக்க வேண்டுமெனக் கூறினேன்.அவன் எனது கட்டுக்களையெல்லாம் அவிழ்த்து கயிற்றின்ஒரு தலைப்பைகாலிலும்,மறு தலைப்பை கையிலும் கட்டி வெளியில் கொண்டு சென்றான்.செல்லும் வழியில் கதிரைகள் போடப்பட்டிருந்தன.அதில் ஒரு கதிரையில் நானமர்ந்து விட்டேன்.அவன் கயிற்றை இழுத்தான்.வெளியில் போறதென்றால் போ அல்லது உள்ளுக்கு போ என்றான்.நான் போக மாட்டேன் நான் உண்மை சொல்லவேண்டும் என்றேன் .என்ன? சொல்லப் போறாய் என்றான்.அடுத்த கதிரையை கண்ணால் காட்டி அதில் அமரும்படி கூறினேன்.அவனும் அமர்ந்து கொண்டான். சொல்லு என்ன உண்மை என்றான். முஸ்லிம்களின் வரலாற்றில் காட்டிக் கொடுத்தான் என்ற வரலாறு எங்கும் இல்லை. யேசுவைக்(ஈஸா நபி)காட்டிக் கொடுத்தவன் யூதாஸ்,இந்திய மண்ணன் வீரபாண்டிய கட்டப் பொம்மனைக் காட்டிக் கொடுத்தவன் எட்டப்பன்,வன்னியில் மாவீரன் பண்டார வன்னியனைக் காட்டிக் கொடுத்தவன் காக்கை வன்னியன்.(குறிப்பு –காக்கை வன்னியன் ஒரு தழிழன் என்பதனை முல்லை மணியின் புத்தகத்திலிருந்து ஆதாரத்துடன் இத்தளத்தில் பழைய இடுகையில் தரப்பட்டுள்ளது.)சந்திரன் பொறுமை இழந்தவனாக நீ சொல்ல வந்த உண்மையை இப்ப சொல்லு என்றான்.நான் தொடர்ந்தேன்.........
அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் துப்பாக்கி வேண்டுச் சத்தங்கள் தொடர்ச்சியாக கேட்டது.எங்கு கேட்கிறது என என்னால் ஊகிக்க முடியவில்லை.ஆனால் இலங்கை இராணுவம் அண்மையில் இருக்கலாம் என்ற முடிவுடன் வீட்டை நோக்கி தவழ்ந்து சென்றேன்.எமது நான்கு ஏக்கர் காணியிலுள்ள பயிர்களை பாதுகாக்க நான்கு மூலையிலும் சிறு குடில்களை போட்டுள்ளோம்.அவற்றில் ஒன்றில் நான்,மற்றவற்றில் மாமா,உம்மா,வாப்பா ஆகியோர் காவலிருப்போம்.ஏனையவர்கள் காணியின் நடுவிலுள்ள வீட்டில் து-ங்குவார்கள்.அன்றும் அப்படித்தான் இருந்தோம்.நான் வீட்டிற்கு சென்றதும் அங்கு எனது பெற்றோரும் வந்து விட்டனர். ஆனால் மாமா மட்டும் வரவில்லை.எங்கள் மனதில் பயம் தொற்றிக் கொண்டது. அவருக்குத்தான் ஏதும் நடந்து விட்டதோ?அவர் படுத்திருந்த இடத்திலும் அவரைக் காண முடியவில்லை.சிறிது நேரத்தில் பயந்து நடுங்கியபடி மாமா எமது தோட் டத்தின் பின் புறத்திலிருந்து வந்தார்.எனது தந்தைதான் கேட்டார் என்ன? பின்னால் வாறியள் வெடியும் கேட்டது என்ன?நடந்தது.மாமா பயத்துடன் கூறினார் ஆமி என்னை பிடித்துக்கொண்டு போய்ராங்கள். விபரமாக கூறுங்கள் என்று கேட்டோம். ஆமி மாமூலை காறுக்கார இராசுவுடைய மகனை சங்கிலி போட்டு கட்டிக் கொண்டு வந்திருக்கிராங்கள்.கூட நிறைய நாய்களும் வந்திருக்கு வந்த்து ஈசனை பிடிக்கிற தற்காக ஆனா வழி மாறி போய்யிருக்கிறாங்கள். பன்றி வருகுதாக்குமென்று மஜீத் லைட் பிடிச்சிருக்கு உடனே அவனை இராணுவம் பிடித்து ஈசன்ற தோட்டத்தை காட்டச்சொல்லி கூட்டிவந்திருக்கிறாங்கள்.எங்கட தெருவில் மரவள்ளித்தடி முறியும் சத்தம் கேட்டு பன்றியென எண்ணி நான் லைட்டை பிடிக்க உடனே ஒரு ஆமி வந்து என்னையும் பிடித்துக் கொண்டு போனான்.எங்களை அழைத்துப்போய் ஈசனுடைய காணிக்கு பக்கத்தில போனவுடன் எல்லோரையும் நிலத்தில் படுக்கச் சொன்னார்கள். அதன் பின்னர் பின்னாலுள்ள ஒரு இராணுவ அதிகாரி முன்னே வந்து அந்த இருட்டு நேரத்திலும் கண்ணாடி ஒன்றை எடுத்து ஈசனுடைய காணிப்பக்கம் பார்த்து விட்டு எங்களை வந்தவழியால் திரும்பபோகச் சொன்னான்.நாங்கள் இருவரும் இடை வழியில் வரும் போதுதான் துப்பாக்கி வெடிச்சத்தங்கள் கேட்டன என்றார்.
இப்போது எங்களுக்குள் ஒரு கேள்வி? ஈசனுடைய காணிப்பிரதேசத்தில் அல்லது எமது முறிப்பு பிரதேசத்தில் இயக்க முகாம் எதுவும் இல்லை. மேலும் ஈசன் கடுமையான உழைப்பாளி,யாருக்கும் இடைஞ்சல் கொடுக்காதவர்,ஆனால் அவர் உட்பட அவரது சகோதரர்களும்,தந்தையும் (வைத்தி லிங்கம்) தொய்வு நோயினால் அடிக்கடி பாதிப்புக்குட்படுவது வழக்கம்.எமது குடும்பத்துடன் ஈசனது குடும்பத்தினரும் நெருங்கிய நட்புடன் பழகுபவர்கள். நாம் மிகுந்த கவலையுடன் உண்மைத் தகவல்களை அறியும் நோக்கில் அங்கு மிங்கும் ஓடித்திரிந்தோம்.சுமார் ஒன்பது மணி யளவில் இராணுவம் ஈசனை சுட்டுகொன்று அவரது உடலை அவரது லேண்ட் மாஸ்ரர் மெஸினில் கொண்டு போகின்றார்களாம்.காரணம் ஈசன் இயக்க வாகனங் களை வைத்த உழைத்து அதன் வருமானத்தை இயக்கத்திற்கு கொடுத்தவராம். ஆனால் அதை என்னால் நம்ப முடியவில்லை.ஆனால் எல்லோருக்கும் மிகுந்த கவலை. இதைக்கேட்ட சந்திரன் சில கேள்விகளை கேட்டான்.நான் சரியான பதிலையும் கொடுத்தேன்.அப்ப ஏன்? இதை நீ முதலிலேயே சொல்லி யிருந்தால் இவ்வளவு அடியை வாங்கியிருக்கத்தேவையில்லையே! நான் சொன்னேன் என்னுடைய சுயநலத்திற்காக யாரைக்காட்டிக் கொடுத்தாலும் நான் எட்டப்பன்தான் எனவேதான் நான் எனது மாமாவையும்,மற்ற முஸ்லிம் சகோதர்ரையும் காட்டிக் கொடுக்கவில்லை.ஆனால் இப்ப நீங்கள் என்மீது சாட்டிய குற்றம் நான் இராணு வத்தை கொண்டு வந்து எனது காணியில் வைத்திருந்து ஈசனுடைய இடத்தைக் காட்டிக் கொடுத்தது.ஆனால் மாமாவும். மற்ற முஸ்லிம் சகோதரர்ரும் எதிர் பாராமல் இராணுவத்திடம் சிக்கிக் கொண்டவர்கள்.இது அவர்கள் மீது குற்றமில்லை.நான் இதுவரை எதிர் பார்த்திருந்தேன்.என்னைப்பற்றி வெளியில் விசாரித்து விட்டு என்னை விட்டு விடுவீர்கள் என்று நம்பினேன். ஆனால் நீங்கள்எம்மை இரவைக்கு போஸ்ரில் போடப்போறீர்கள் அப்படி எட்டப்பன் என்ற பெயருடன் மௌத்தாக விரும்ப வில்லை.எனவேதான் இப்ப இதை சொல்ல முன் வந்தேன்.ஆனால் மற்ற இரு சகோதரர்களையும் எம்மைப்போல் கொடுமைப் படுத்திவிட வேண்டாம். என்று வினயமாகக் கேட்டுக்கொண்டேன். இதைக்கெட்ட சந்திரனின் உள்ளம் நெகிழ்ந்து நடந்த தவறிற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். நாம் இப்ப உங்களை விட்டிடுவம்.இன்றையிலிருந்து நீங்கள் எல்.ரி.ரி.ஈ என்றான்.அதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டேன். நான் குடும்பக்காரன் நான் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும்.நான் உங்களைக் காட்டிக் கொடுக்க மாட்டேன். ஆனால் என்னைத்துன் பப்படுத்தியதற்கு உரிய தண்டணையை கடவுள் உங்களுக்குத்தருவார் என்றேன். மீண்டும் எனது கை,கால்களை கட்டி அந்த அறையில் போட்டுவிட்டான்.நான் உள்ளே போனதும் என்னுடன் கடத்தி வரப்பட்ட அந்த முஸ்லிம் சகோதரன் முதலாவதாக என்னிடம் பேசினார். எ.....ன்....ன....வா..ம்....மி....டா.....?நான் சொன்னேன். எங்களை விடப் போறாங்க என்றேன்.எங்கடா விடுகிறது இரவைக்கு இரண்டு பேரையும் போடப் போறாங்கள். என்றார்.நான் மீண்டும் சொன்னேன். நான் உண்மையைச் சொல்லிப் போட்டன்.அவரும் இறுக கட்டிப்போடப்பட்டிருந்தார்.கட்டையும் மீறி வாரிச்சுறுட்டி யெழுந்தவர். என்னடா?உண்மையைச் சொன்ன நீ என்றார்.நான் நடந்தவற்றைக் கூறினேன். ஏன்ரா மடையா இதை காலையிலேயே சொல்லி யிருக்கலாமே என்று திட்டித் தீர்த்தார்.நான் அவருக்குச் சொன்னேன் இவர்கள்தான் புலிகளாச்சே அவர்களே உண்மையைக் கண்டபிடிக்கட்டும் என்றுதான் விட்டு வைத்திருந்தேன்.ஆனால் நீங்கள் கூறியது போன்று எம்மை இரவைக்கு கொல்லப் போகிறார்கள் என்ற விடயம் தெரிந்துதான் நான் உண்மையைக் கூறினேன் என்றேன்.
தொடரும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.