Thursday, September 25, 2014

இடம் பெயந்து வடமாகாணத்தை விட்டு வெளி மாவட்டத்தில் வாழும் கண்ணியமிக்க வாக்காளப் பெருமக்களே!



2015 ஆண்டு நடைபெறவுள்ள, நாட்டின் தலைவிதியை தீர் மாணிக்கின்ற தேர்தல்களை எதிர் கொள்ள நீங்கள் தயாரா? அதற்கான தகுதி உங்களுக்கு உள்ளதா?

அப்படியாயின் ........................................

2014ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உங்களின் வாக்குரிமை உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் செய்யவேண்டியது.


1. உங்கள் கிராம சேவையாளரின் காரியலயத்திற்குச் சென்று 2014ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வதோடு பெயர்கள் சரியாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். எழுத்துப் பிழைகள் இருப்பின் உடனடியாக திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள்.

2. வௌி நாடுகளில் வசிப்பவர்கள் மற்றும் இனைய வசதியுள்ளவர்கள் தேர்தல் தினைக்களத்தின் http://www.slelections.gov.lk/id/index.aspx எனும் பக்கத்திற்குச் சென்று மாவட்டம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்து சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்நாட்டின் ஜனநாயம் உங்களின் உரிமை,,!


தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் அவர்களே!
இது உங்களின் கவனத்திற்கு தாங்கள் முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் உறுதியாகப் பேசியே தீருவோம். என்ற முடிவை எமது சமூகம் வரவேற்கிறது. அதற்கு முன்னர் வடமாணததைச் சார்ந்த முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டு இன்று நாட்டின் பல பாகங்களிலும் வாழுகின்றனர் யுத்த முடிவின் பின்னர் இவர்களின் ஆயிரக்கணக்காணவர்கள் தாம் வடமாகாணத்தில் மீள்குடியமர்வுக்காகப் பதிவு செய்திருந்த போதிலும் அங்கு சென்று நிரந்தரமாக இன்னும் குடியமரவில்லை. காரணங்கள் சிலவற்றைக் குறிப்பிடலாம்
1.புள்ளியடிப்பமடயில் இந்திய வீட்டுத் திட்டம் வழங்குவதால் காணி இருந்தும் வீடு கிடைக்காமை.
2.பிள்ளைகளின் மார்க்கக் கல்வியைத் தொடர்பவர்களின் வசதி  எற்பாடுகள்.
3.இடம் பெயர்ந்து வாழும் பிரதேசத்தில் தொடங்கிய தொழிலை முடக்க முடியாத சூழ் நிலையும்,மீளக்குடியமரும் இடங்களில் தொழிலை புதிதாக தொடங்க முடியாத நிலைமையும்..
4. மீள் குடியமர்ந்த பிரதேசங்களில் தொழில் வாயப்புக்கள் அனைத்தும் இயந்திர மயப்படுத்தப் பட்டுள்ளதால் சாதாரண கூலித் தொழிலாளிகளக்குக் கூட தொழிலின்மை.
காணியற்றவர்களுக்கு காணி வழங்குவதற்கு தங்களமைப்பினரின் கடும் போக்கு வாதம் காரணமாக ஏற்பட்டுள்ள காணிப்பகிவில தடங்கல்கள்.
5.புலிகளின் பாசறையில் வளர்க்கப்பட்ட சில அரச அதிகாரிகளின் இனப்பாகு பாடுடைய முன்னுரிமை செயற்பாடுகள்.
6.புத்தளத்தில் இடம் பெயர்தவர்களின் வாக்குகளைக் கொண்டாவது அரசியல் நன்மை பெற முனையும் புத்திஜீவிகளின்,அரச அதிகாரிளின்,அரசியல் வாதிகளின் சமாதான பிரச்சார அல்லது அச்சுறுத்தும் செயற்பாடுகள்.
முல்லைத்தீவுக்கு வந்த புத்தளம் மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளரின் செயற்பாடுகளின் பின் விளைவுகள்.
      இப்படி பலருக்கும் பலவகையான காரணங்கள் காணப்பட்டாலும்  அவர்கள் தமது வாக்குகளை தமது பிரதேசத்தில் பதிவு செய்யச் சென்ற போதும் அவர்களை பிரதேச கிராம அலுவலர்கள் நிரந்தரமாகக் குடியமராத காரணத்தால் பதிவு செய்ய மறுத்துள்ளார்கள். இப்படி பலருக்கு வாக்களிக்கும் உரிமை எங்கும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.. எனவே தாங்கள் முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் பேசும் சமகாலத்தில் வாக்கு பதிவு இல்லாத முஸ்லிம்களின் விடயத்திலும் கவனம் செலுத்தும்படி வேண்டுகின்றேன்
வாக்குகள்தான் உங்களின் பலம் என்பதை மறந்து விடமாட்டீர்கள் என நம்புகின்றேன்.   இது தொடர்பாக பேச விரும்புபவர்களின் தேவைக்கு மட்டும் 0714915703.0776792428
LikeLike · · Share

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.