1990 ம் ஆண்டு வடமாகாணத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த ஒட்டு மொத்த
முஸ்லிம்ளைத் தமிழீழ விடுதலைப்புலிகள் பலவந்தமாக வெளியேற்றினர். பல முஸ்லிம்களைக் தவறான
காரணங்களைக் காட்டி படுகொலை செய்தனர்..பல முஸ்லிம் கிராமங்களிலில் முஸ்லிம்கள்
அமைதியை இளக்கக் காரணமாகச் செயற்பட்டனர். கிழக்கு மாகாண காத்தான்குடியில் பள்ளி வாசலில்
தொழச் சென்றவர்கள் மீதும்,தொழுது
கொண்டிருந்தவர்கள் மீதும் சரமாரியாச் சுட்டு நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை பலி
எடுத்தனர். இதற்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள் மடடுமல்லாமல் சர்வதேச ரீதியாகவும் கண்டனம்
தெரிவிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடைய சர்வதேச பிரச்சாரகர்களில்
பெரியார் தாசன் அவர்களும் அடங்கியிருந்தார். இவர் இந்தியா தழிழ் நாட்டைச்சார்ந்தவர்.
உலகம் போற்றிய மனநல வைத்தியர். இவர் அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கபூர்,மலேசியா போன்ற
நாடுகளின் பல்களைக் கழகங்களில் உளவியல் சார்பான விரிவுரையாளராகவும் பணிபுரிந்தவர்.
வடமாகாண முஸ்லிம்களை விடுதலைப்புலிகள்
வெளியேற்ற நடவடிக்கை எடுத்த போது இவர் பிரானஸ் நாட்டில் இருந்தார். முஸ்லிம்களின்
வெளியேற்ற விடயம் அறிந்ததும் பிரான் ஸிலுள்ள தழிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து
முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வடமாகாணத்திலிருந்து வெளியேற்றுவதைத்
தடுக்குமாறு வேண்டினார். அது முடியா மல்போனது. உன்னே அவர் இலங்கைக்கு வந்து
நேரடியாக புலிகளிடம் இதை வலியுறுத் தினார். அவர்களும் தமது முடிவில் மாற்றமில்லை
என உறுதியாகச் சொன்னார்கள். அப்போது இந் நடவடிக்கைக்கான காரணத்தைக்
கேட்டார்.முஸ்லிம்களில் காட்டிக் கொடுப்பவர்கள் இருப்பதாக்க கூறப்பட்டது.அப்படிக்
காட்டிக் கொடுப்பவர்களிருந்தால் அவர்களைக் கண்டு பிடித்து தண்டிக்கும் படி கூறிய
பெரியார் தாசன் “அதற்காக நோயாளிகள்,சிறுவர், முதியோர், பெண்கள்” போனறவர்களை
துன்ப்பபடுத்த வேண்டாமென வினயமாக வேண்டிக் கொண்டார். முஸ்லிம்களை வெளியேற்றும்
தீர்மானத்தில் மாற்றமில்லையென தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதியாகவும், முடிவாகவும்
கூறினார்கள்.
அப்போது பெரியார்தாசன் அவர்கள் “அப்படியாயின்
இதற்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டி வரும்”.இது கடந்த காலங்களில் நிராயுதபாணிகளை
ஆயுதபாணிகள் அழித்த கொடுமைகளின் வரலாற்றிலிருந்து காண முடியுமெனக் கூறினார்.
பெரியார்தாசன் அன்றுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடனிருந்த தொடர்புகளை நிறுத்திக்
கொண்டார். பெரியார் தாசன் 2010ம் ஆண்டின் நேரான மார்க்கத்தில் (இஸ்லாத்தில்)
இணைந்தார்.அதன் ஏகத்துவ கொள்கைப் பரப்பாளராகவும் இறுதிவரை செயலாற்றி,2013ம் ஆண்டு
இறையடி சேர்ந்தார். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி இறாஜியூன்.)
வடமாகாணத்த்திலிருந்து முஸ்லிம்கள்
வெளியேற்றப்பட்ட போது பட்டாசு கொழுத்தி மகிழ்ந்த வர்களும், நடந்து வ்வுனியாவைக் கடக்கும்
வழியில் முஸ்லிம்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க்க் கூடாது என்று கூறிய புலி ஆதரவார்களும்,
மாவீரர்கள் குடும்பமும், தமக்கு தமிழீழம் கிடைத்து விட்டதாக எண்ணி கூப்பாடு
போட்டவர்களும் வடக்கில் தாமும் தழிழர்கள் என்று தமிழர் பண்பாடு அற்றவர்களாக
இருந்தார்கள். அவர்கள் தமது தவறை உணர அதிக காலம் எடுக்கவில்லை. யாழ்பாண
பிரதேசத்தில ஏற்பட்ட மோதல்கள் காரணமாக யாழ்பா ணத்தை விட்டு அவர்கள் வன்னியை நோக்கி
ஓடியபோதும், இறுதி யுத்த்த்தில் முள்ளிவாய்க் காலில் துன்பப்பட்டு செட்டிகுளம்
துயர் முகாமை நோக்கி நகர்ந்த போதும் அந்தக் கொடிய வர்கள் முஸ்லிம்களின் வலியை
உணர்ந்து இருப்பார்கள். இதை முஸ்லிம்கள் அள்ளாஹ்வின் ஏற்பாடே எனக்கொண்டனர். ஆனால்
நல்ல பண்பாடுகளுடைய தமிழ்ச் சகோதர்ர்களும் துன்பத்தை அனுபவித்தனர். இதை முஸ்லிம்களும்
மகிழ்ச்சியாகக பார்க்கவில்லை.தமது சகோதர்ர்களுக்காக கவலைப் பட்டார்கள்.
புலி ஆதரவாளரின் கூப்பாடுகளை மதிக்காத
தமிழ் சகோதர்ர்கள் முஸ்லிம்கள் வரும் வழிகளிலெல்லாம் இரவு தங்குவதற்கு,உணவு
சமைப்பதற்கு ஏற்ற இடங்களை வழங்கியும், குடிநீர் எடுப்பதற்கு தமது கிணறுகளையும்
வழங்கினார்கள்.நான் சார்ந்த குழுவினர் முதல் நாள் இரவை நெய்னாமடத்தில் வீதி
ஓரத்திலும்,இரண்டாவது இரவை ஈச்சமோட்டையிலுள்ள வீதியி லுள்ள மரத்தடியில் தங்கவும்
ஆயத்தமானோம்.அப்போது முன் வீட்டிலுள்ளவர்கள் வந்து எமக்கு அறுதல் சொல்லி இந்த
வழியால புலிகளின் வாகனம் அதிகம் போறது வழக்க மாகும்.எனவே நீங்கள் எமது வளவு
காணியிலுள்ள மரத்தின் கீழ் தங்குமாறு ஆலோ சனை வழங்கினார்கள்.
2009ல இறுதி யுத்தமென வர்ணிக்கப்பட்ட
கொடூர யுத்த்த்தில் தமிழர் பாதிக்கப்பட்டபோது முஸ்லிம்கள் அவர்களின் துயரை எண்ணி
மனம் நொந்தவர்களாகவே காணப்பட்டனர். அவர் களில் மிஞ்சியவர்கள் வவுனியா துயர்முகாமை
வந்தடைந்த்தை அறிந்து துக்கம் விசாரிக்க புத்தளத்திலிருந்து முஸ்லிம்கள்
சென்றார்கள். முகாம்களில் வேதனைப்பட்ட தமிழ் சகோதரர்களை தமிழ் வியாபாரிகளுடன் நமது
சமூக வியாபாரிகளும் அகதிகளுக்குத் தேவையான அத்தியாவசிய தமது பொருட்களைக் கொடுத்து
முடிந்த அளவு அவரிடம் மிச்ச மாகவிருந்த பணத்தினையும்,தங்கத்தினையும் பறித்துக்
கொண்டார்கள்.இதில் அங்கு பொறுப்பி லிருந்த சில முஸ்லிம் அரச சேவையாளர்களும்
அவர்களிடமிருந்த தங்கங்களை குறைந்த பெறுமதி கொடுத்து பெற்றுக் கொண்டனர்.சிலர்
விற்பதற்கு கொடுத்த தங்கம் போன்ற பொருட் களுடன் தலைமறைவாகி விட்டனர்.முகாமிலிருந்து
வெளியில் வந்து சந்தைப் பெறுமதிகளை அறிந்த தமிழ் அகதிகள் தம்மை அனைவரும்
ஏமாற்றியதையும்,ஏமாந்த்தையும் உணர்ந்தனர்.
முஸ்லிம்கள் புத்தளம் அகதி முகாம்களில்
வாழ்ந்தாலும் தமது தமிழ் பேசும் சகோதர்ர் களுக்கென தம்மாலான உதவிகளைச் செய்யவென
குழுவொன்றை தெரிவுசெய்து உதவிப் பொருட்களை முகாம்களிலும், உள்ளுர் மக்களிடமும் திரட்டிய
முல்லைத்தீவு முஸ்லிம்கள் அப் பொருட்களை கொண்டு சென்று செட்டிகுளம் அகதிகள்
முகாமில் வைத்து முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் ஒப்படைத்தனர்.நானும் என்
பங்கிற்கு சில ஆறுதல் வார்த்தைகள் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களை செட்டி குளம்
ஆனந்தக் குமாரசுவாமி முகாமில் பகிர்ந்தளிதேன்.அதன் பிரதியை எனது இணையத்தளத்திலும்
பதிவேற்றினேன். இதைப் பார்த்த ஆசிரியர் ஒருவர் சொன்ன வார்த்தை “நாங்கள் எல்லாத்தையும்
பறித்துக் கொண்டு துரத்திவிட்ட முஸ்லிம்களில்
இப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள்”என்று வேதனைப் பட்டதாக அறிந்து கொண்டேன்.(இங்கு
வழங்கிய துண்டுப் பிரசுரத்தை பார்க்க விரும்புபவர்கள்). http://muslimrefugee.blogspot.com/2009/07/blog-post_8198.html என்ற வலைத் தளத்தைப்
பார்க்கவும். நாம் 2002ம் ஆண்டு சமாதான காலத்தில் எமது முல்லைத்தீவைப் பார்வையிடச்
சென்ற போது தமிழ் சகோதரர்கள் எம்மை வரவேற்று உணவழித்து, உபசரித்து, தமது வீடுகளில்
தங்கவைத்து வழியனுப்பியதை அங்கு வாழ்ந்த பிற மாவட்ட தமிழர்களும், விடுதலைப் புலிகளும்
வியந்து நோக்கியதையும் இப்படி தமிழ் முஸ்லிம் உறவு 1990க்கு முன் இருந்ததா? என
கேள்வி எழுப்பியவர்களையும் காணமுடிந்த்து.
அதன்பின்னரான காலத்தில்
விடுதலைப்புலிகள் முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிகளை என்ன விலையாவது கொடுத்துப்
பெற்றுக்கொள்ளவும்.இது புலிப்பிரமுகர்களால் கூட்டப்பட்ட கூட்டதில் பொதுமக்களுக்கு
அவர்கள் கூறிய அறிவுரைகளாகும்.அதற்கு அங்கிருந்த புத்தி ஜீவிகள் சிலர் கூறினார்களாம்,முஸ்லிம்களின்
காணிகளை யாரும் விலையாக வாங்கக் கூடாது. “அவர்கள் மீண்டும் இங்கு வந்து முன்பு
போன்று எம்முடன் அன்னியோன்யமாக வாழ வேண்டும்” இப்படிக்
கூறியவர்களை நம்மால் மறக்கத்தான் முடியுமா?அது இன்று நடந்தேறியும் விட்டதல்லவா!.
இந்த புத்தி ஜீவிகளின் கருத்தை ஏற்காதவர்களும் உள்ளனர். அவர்கள் முஸ்லிம்களின்
காணிகளை அசாதரண சூழலைப் பயன்படுத்தி
குறைந்த பணத்தைக் கொண்டும்,தவறான உரிமையாளர்களிடமும் பெற்றுக் கொண்டு
முழிப்பவர்களும் இல்லாம லில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் புலிப் போராலிகள்
குடும்பத்தை சார்ந்தவர்களும், அவர்களின் ஆதரவாளரும் என்பது மறுப்பதற்கில்லை.அதற்கு
நமது சமூகத்திலுள்ள புல்லுரிவிகள் சிலர் துணைபோய் இலட்சக் கணக்கான பணத்தை தமதாக்கி
காணி உரிமை யாளர்களை ஓட்டாண்டி ஆக்கியவர்களும் தன் மானங்கெட்டு வாழுகின்றனர்.
முல்லைத்தீவில் யுத்தம் முடிந்து,
போகக் கூடிய சூழல் ஏற்பட்டு அங்கு போன முஸ்லிம்களை தமிழ் சகோதரர்கள் வரவேற்று
அவர்கள் முதலில் கூறிய வார்த்தை “புலிகள் உங்களை துரத்தவில்லை.உங்களுடைய கடவுள்தான்
உங்களை காப்பாற்றியது” நாங்கள் உவங்களாள எல்லாத்தையும் இளந்திட்டம்.
முஸ்லிம்கள் உள்ளுர தம்மைப் பாதுகாத்த
படைப்பாளனாகிய அள்ளாவை எண்ணி
மகிழ்ந்தாலும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் சகோதரர்களின் பொருளார இழப்பு,
உயிரிழப்புகள், மன உழைச்சல் என்பனவற்றைப் பார்த்து தாங்க முடியாத வேதனை
அடைந்தார்கள். அவர்கள் கூறிய அடுத்த வார்த்தை முஸ்லிம்களை அவங்கள் துரத்தியதால் தான்
எஙகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. அவர்கள் கூறிய அடுத்த வார்த்தை அவங்கள் உங்களை
எல்லாத்தையும் பறித்துக் கொண்டு துரத்தினாலும்,நீங்கள் உங்கட குழந்தை, குட்டிக
ளோடு நல்லா இருக்கிறியள். அவர்கள் கூறியது உண்மைதான் வடக்கிலிருந்து நாம்
வெளியேற்றப்படும் போது நமது சமூகத்தாரிடம் ஓரிரு வாகனங்களே இருந்தது.அதையும்
புலிகள் அபகரித்துக் கொண்டார்கள்.கையில் கிடைத்த பொருட்களுடனேயே புறப்பட்டோம்.
முஸ்லிம்கள் வடக்கை விட்டுப்
புறப்படும் சமயத்தில் அவர்களிடம் இருந்த பெறுமதியான சொத்து படைப்பாளனாகிய
அள்ளாவின் மீது கொண்ட நம்பிக்கை மட்டும்தான். அதையும் விடுத்து தமது பெயரை
கிருஸ்தவனுடைய அல்லது ஹிந்துக்களுடைய பெயராக மாற்றி மனிதனின் படைப்புகளையோ அல்லது படைப்பாளனின்
படைப்புகளையோ வணங்கத் தயார் என்றால் அங்கேயே இருந்திருக்கலாம். எனவேதான் படைப்பாள்
தனது வேதப் புத்தகமாகிய அல்-குர்ஆனில் கூறியதற்கமைவாக அனைத்துச் செல்வங்கைளையும்
இருபது வருடங்க ளுக்னுள் இலங்கை வட மாகாண முஸ்லிம் அகதிகளுக்கு (ஹிஜ்ரத்
செய்தவர்களுக்கு) கொடுத்திருந்தான்.அதுபோல் வடக்கு மாகாணத்திற்கு வெளியேயுள்ள ஏனைய
பிற சமூகங் களுடன் எமது ஓரிறைக் கொள்கை சகோதர்ர்களும் (அன்சாரிகள்) தம்மால்
முடியாததைக் கூடச் செய்யத் தயாராகவும் இருந்தனர், செய்தனர். குறிப்பாக எல்லாம்
அறிந்த அள்ளாஹ் புத்தளத்தில் சகல ஏற்பாடுகளையும் முன் கூட்டியேசெய்திருந்தான் என்றுதான்
கூற முடியும். அல்ஹம்துலில்லாஹ்.(எல்லாப்புகளும் அள்ளாஹ்விற்கு)
வடக்கிலிருந்து துரத்தப்பட்ட
முஸ்லிம்கள் வடக்கிற்கு வெளியே வெறும் பொருளாதாரத்தை மட்டும் பெறவில்லை.
கல்வியிலும் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். அரச தொழில்களையும் பெற்றுள்ளதுடன். கைத்தொழில்,
மற்றும் வியாபாரம் போன்றவற்றிலும் மேம்பாட்டைந்துள் ளார்கள். குறிப்பாக ஆத்மீகக்
கல்வியிலும் மிகவும் முன்னேற்றம் கண்டுள்ளார்கள். இது ஒரு இஸ்லாமியனுக்கு
இன்றியமையத்தாகும்.எல்லாச் செல்வமும் முஸ்லிம்களிடம இருக்கிற தெனபதற்காக மீள்
குடியமர்வின் போது முஸ்லிம்களுக்கு எதுவும் வழங்கத் தேவையில்லை என எவரும்
எண்ணிவிடவும் கூடாது.எமது மூதாதையரகள் சுமார் அறுபது சகாப்தங்களாக வடக்கில்
வாழ்ந்துள்ளார்கள். என்று நம்பப்படுகிறது.இக்காலத்தில் தமது உழைப்பால் பெற்றுக்
கொண்ட அனைத்துச் செல்வங்களும் அழிக்கப்பட்டது. துரதிஷ்ட வசமாகும்.
தமது பூர்வீக இடங்களில் மீளக் குடியமர
முஸ்லிம்கள் ஆரம்பித்த போது அங்கு பல
முட்டுக்கட்டைகளை எதிர் நோக்கினர்.அதில் முதலாவது காணிப் பற்றாக்குறைப்
பிரச்சினையாகும். அதாவது இடப்பெயர்ப்பின் போது இருந்த்தை விட பல மடங்கு நம் .ஸ்லாமியக்குடும்பங்கள்
பெருக்கமடைந்துள்ளது.அதற்கேற்ப குடியிருப்பு வசதிகளை கூட்டு வதற்கு காணிகள்
இல்லை.இருந்த சொற்ப் அளவிளான காணிகளையும் அசாதாரண சூழ்நிலை யைப் பயன்படுத்தி
புலிகளின் ஆதரவாளர் என நம்ப்ப்படுபவர்கள் கொள்ளை இலாபத்தில் விலை வாங்குவது என்ற
பெயரில் பறித்துள்ளார்கள்.அரச காணி கேட்டால் அங்குள்ள (முல்லைத்தீவு) சில அரசியல்
வாதிகளும்,சில அரச அதிகாரிகளும் புத்தளத்திலுள்ள காணி,வீடுகளைக் கணக்குப்
பார்க்கின்றனர்.மீள் குடியேற்றம் முல்லைத்தீவிலா அல்லது புத்தளத்திலா?
அப்படியென்றால் யுத்த காலத்தில்
பாதுகாப்புத் தேடி முல்லைத்தீவுக்கு இடம் பெயர்ந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை,
ம்டக்களப்பு, ஆகிய மாவட்டங்களிலும், மத்திய மலை நாட்டிலிருந்தும் வந்தவர்களுக்கும்.வனிய
முகாங்களிலிருந்து முல்லைத்தீவிலேயே மீள் குடியேற்றம்
செய்யப்பட்டுள்ளார்கள்.முல்லைத்தீவிலிருந்து வ்வுனியா,கொழும்பு போன்ற இடங் களுக்கு
இடம் பெயர்ந்தவர்களும் முல்லைத்தீவிலேயே மீள்
குடியமர வசதி வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளது. துரத்தப்பட்ட முஸ்லிம்களிடம் மட்டும்
ஏன் புத்தள காணி,வீடு கணக்குப் பார்கப்படுகிறது.முல்லைத்தீவில் மீள் குடியமர்ந்த
தமிழ் சகோதரர் பலர் தமது சொந்தப் பிரதேசத்தில் தொழிலுக்காகச் செல்வதனையும் காண
முடிகிறது. இந்திய வீட்டுத்திட்டமும் அவகளில் பலருக்கு முஸ்லிம்களுக்கு வழங்கும் புள்ளிகளுக்கு
மாறாகவும் வழங்கப்பட் டுள்ளது.இதெல்லாம் பக்கச் சார்பான நடவடிக்கை என்பதை
முஸ்லிம்கள் உணராமலில்லை.
அடுத்து மீள் குடியமர முடியாத சூழலில்
அதற்காக வசதி வாய்பை சொந்தப் பிரதேசத்தில் எதிர்பார்த்து வடக்கிற்கு வெளியில் வாழும்
முஸ்லிம்கள் தமது வாக்காளர் பதிவை மேற் கொள்ள தமது பிரதேசத்திற்குச் சென்றால்
அங்கு குடியமராமல் பதிவு எற்றுக் கொள்ளப் படமாட்டாது என கிராம சேவை அதிகாரிகள்
மறுத்து வருகின்றனர்.இதன் காரணமாக அகதி களில் பலர் வாக்குரிமையற்றவர்களாகவும்
காணப்படுகின்றனர். இதை விட தற்போது வாழுமி டங்களில் ஏதாவதொரு தேவைக்காக கிராம
சேவையாளர் நற்சான்றிதல,பொலிஸ் அறிக்கை போன்ற அரச சேவைகளை பெற்றுக் கொளவதிலுள்ள
தடங்கள் காரணமாக பலர் தமது வாக்குகளை வாழும் பிரதேசத்தில் பதிவு செய்ய வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது வாக்காளர்
மட்டுமல்லாமல்,வடமாகாணத்தில் சிறு பாண்மையினரின் விகிதாசாரமும் குறைவடையவும்,
பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் கூட ஒரு சில வாக்குகளால்
குறைவடையவும் காரணமாகலாம்.இதற்கான பொறுப்பை வடமாகாண அரசியல் வாதிகளும்,அரச
அலுவலர்களும் ஏற்றாக வேண்டும்.
வடமாகாண அகதிகளில் சிலர் தாம் முன்னர்
வாழ்ந்த இடங்களை விட வசதியான இடங்களில் தற்போது வாழ்வதுடன் தமது தொழிலையும்
சிறப்காக அமைத்துள்ளனர்.அல்லது அமைந் துள்ளது.என்பதனால் தாமாக தமது வாக்களிக்கும்
உரிமையையும் இங்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் இவர்கள் உள்ளுர் நிவாரணங்களையும்,அரச சேவையாளர்களின் சேவைகளையும் இலகுவாகப்
பெற்றுக் கொள்வதுடன் அரசியல் வாதிகளின் செல்வாக்கிலும் வாழுகின்றனர். இவர்களின்
முக்கிய தேவை வடமாகாண அகதிகள் மீள் குடியமர்வில் அக்கரை கொள்ளாது தடுக்க வேண்டும்
என்பதே ஆகும். இங்கேயே வாழ்வதினால் எப்போதும் அகதிகளின் (தங்களின்) செல்வாக்கை
புத்தளத்தில் தக்க வைப்பதுடன். அவர்களது வாக்கு வங்கியைக் காட்டி அரசியல்
வாதிகளிடம் பேரம்பேசி சுய இலாபம் பெற்றுக் கொள்கின்றனர்.
இதற்காக இவர்கள் கடந்த கால கசப்புமிக்க
மறந்து போன சம்பவங்களை மீண்டும்,மீண்டும் அல்லது வருடா வருடம் நினைவு
கூர்வதுடன்,வடமாகாணத்தில் மீளக்குடிணமர விரும்புபவர் களையும் அச்ச உணர்வை ஏற்படுத்த
முயலுகின்றனர். தற்போது கட்டியெழுப்ப்ப்படும் தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலையும்
ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளையும் மேற் கொள்கின் றனர்.நீர்வாழ் உயிரினமான தலையை மீனுக்கும்,
வாலை பாம்புக்கும் காட்டி வாழும் விலாங்கு மீனினம் போன்று நான் உங்களுடன் தான என
சொல்ல விளைகின்றனர். வடமாகாண அரசியல் வாதிக ளுக்கும், தமிழருக்கும்
தலையையும்,புத்தளத்து முஸ்லிம்களுக்கும்,புத்தளத்து அரசியல் வாதிகளுக்கு வாலையும்
காட்டி பிழைப்பு நடத்துகின்றனர்.இவர்கள் பற்றி அனைவரும் கவனம் செலுத்துதல்
அவசியமாகும்.
இன்றுஅரசியல் தலைமைகள் இணக்கப்பாட்டை
கட்டியழுப்ப முயற்சிகளை மேற்கொள்ளும் வேளையில் இவர்களிலும் அவதானம் செலுத்துவது
அவசியமாகும்.குறிப்பாக முஸ்லிம் அகதிகள் விழிப்பாக இருத்தலும் அவசியமாகிறது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.