Thursday, April 23, 2015

அரச உத்தரவுப் பத்திரத்தையுடைய காணிகள் விற்கவோ,வாங்கவோ முடியாதாம்


முல்லைத்தீவு மாவட்ட  ( மாஞ்சோலை) வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ஹஜ்ராபுரம் கிராமத்தில்இரண்டு ஏக்கர் முஸ்லிம்களுக்குரிய காணியை முஸ்லிம் மக்கள் முல்லைத்தீவிற்கு போக முடியாத யுத்த கால கூழலில் முறை கேடான வழியில்   விற்கப்பட்டதும்,முஸ்லிமல்லாதவர் ஒருவரினால் வாங்கப்பட்டது சார்பாக சலீம் றிபாஸ் அவர்களினால் ,அரச காணிகள் பிணக்குகள் சார்பான படிவம்  இலக்கம் ஒன்று வழங்கப்பட்டு இணைப்பு இலக்கம் நான்கு பெறப்பட்ட நிலையில்   முல்லைத்தீவு பிரதேச செயலாளருக்கு எழுததப்பட்ட விரிவான முறையீட்டுக் கடிதத்தின் பிரதிகள் முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் வழங்கப்பட்டது. இது சார்பான விசாரணையை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்டு சலீம் றிபாஸ் அவர்களை முறையீடு ஒன்றை பதிவு செய்யுமாறு பணிக்கப்பட்டது. இதுசார்பான விசாரணை  பிரதேச செயலாளரினால் மேற் கொள்ளப் டவில்லை. . முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் செய்யப்;பட்ட முறையீட்டிற்கு அமைவாக முழுமையாக பிரதிவாதிகள் பொலிஸ நிலையம் வராததின் காரணமாக விசாரணை நடைபெற முடியாமல் போனது.,பின்னர் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக குறித்த  முறையீடு சலீம் றிபாஸ் அவர்களினால் மீளப் பெறப்பட்டது.
சலீம் றிபாஸ் என்பவரிடம் முஹம்மது சுல்தான் பரீத் வாங்கிய காணி சார்பாக ஹிஜ்ராபுரம் கிராம சேவையாளருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் பிரதிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச  செயலாளர், முள்ளியவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கரைதுறைப்பற்று  பிரதேசசபை செயலாளர் ஆகியோருக்கும்  பிரதிகளும் இடப்பட்டது இதற்கமையை 2015.03.25ம் திகதிகரைதுறைப்பற்று பிரதேச  செயலாளர் அலுவலகத்திற்கு முறையீட்டாளரையும், முறைகேடாக விற்றவர்கள் எனச் சந்தேகிக் கப்படும் மூவரையும்  சலீம் றிபாஸ் என்பரையும் வைத்து ஒரு,சில கேள்விகளை மட்டு;ம் கேட்ட பிரதேச செயலாளர. அவர்கள் மேற்குறித்த அதாவது அரச உத்தரவுப் பத்திரமுடைய காணிகளை விற்கவோ, வாங்கவோ யாருக்கும் முடியாதெனவும்,காணியை எவருக்கும் வழங்காமல் இரததுச் செய்யும் படியான இத்தீர்ப்பை வழங்கி காணிப் பிரிவு அதிகாரிகளை உடன் இதை அமுல் படுத்தும்படி உத்தரவிட்டார். தீர்பை பொறுத்தவரை இணைங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் விசாரணையில் திருப்திபட முடியவில்லை.காரணம் குறிப்பாக 1007ம் ஆண்டு  அல்லது 2007ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் காணி விற்பனை ஒப்பந்தம் சார்பான பிரதிவாதிகள்  அனைவரும் சமூகந்தரவில்லை.அதிலும் குறித்த காணியை வாங்கிய பின்னர் அதன் ஒரு சிறு பகுதியையும் விற்ற சந்தேக நபரான தமிழர் ஒருவரை விசாரணைக்கு     அழைக்காதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
           எனவே  மீண்டும் குறித்த பிரதேச செயலகம்; இதனை விசாரணை செய்து நீதி வழங்காத பட்சத்தில் வடமாகாண காணி ஆணையாளர்உள்ளுராட்சி அமைச்சு,காணி ஆணையாளர் நாயகம், மற்றும் ஜனாதிபதிக்கும் மேன் முறையீடு செய்வதற்கு ஆவண செய்யப்படுகிறது.
.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.