Thursday, September 3, 2015

சுமார் 55 ஆண்டு காலத்தின் பின்னர் எமது கிராமத்தில் ஓர் பாராளுமன்ற உறுப்பினர். நீங்கள் ( புத்தளத்திலிருந்து முல்லைத்தீவு,தண்ணீரூற்று முஸ்தபா மன்சூர் )



முஸ்தபா மன்சகசூர்
"தாருஸ் ஸனூபா" 
பெருக்குவட்டான்,
கொத்தாந்தீவு.25.08.20115

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு, (வன்னி மாவட்டம்),தண்ணீரூற்று,முள்ளியவளை.
அம்மணி!
1960ம் ஆண்டு தண்ணீரூற்றைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரானார்.அப்போது
வ்வுனியா, முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களும் இணைந்தே வ்வுனியா தொகுதி என அழைக்கப்பட்டது. அன்றைய தேர்தலில்  சட்ட வல்லுனரும், முன்னாள் எலிசபெத் மஹா ராணியாருக்கு பாடம் படிப்பித்தவர் என்று எல்லோராலும் புகழப்பட்ட அடங்காத் தமிழ் கட்சியின் தலைவருமான சி.ந்தரலிங்கம்அவர்களை எதிர்த்து அண்ணன் சிவா அவர்கள் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டுவெற்றி பெற்று வன்னி மண்ணின் புகழை உயரச்செய்தார். அக்காலத்தில் தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒற்றுமையின் சின்னமாகத் திகழ்ந்தார்கள். அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் 1956ம் ஆண்டு சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் இலங்கையில் தமிழ் பகுதிகளிலெல்லாம் நடந்தவேளை, இப்பகுதியில் வாழ்ந்த தமிழ்,முஸ்லிம் மக்கள் இப்போராட்டம் எமது பகுதியில் நடத்த வேண்டுமென இரு சமூகமும் இணைந்து ஓர் தலைமை யைத் தேடினார்கள். அப்போது அடையாளம் காணப்பட்டவர்தான் அண்ணன் சிவா என எல்லோரினாலும் செல்லமாக அழைக்கப்பட்ட சிவசிதம்பரம் அவர்கள்.அவர் தலைமையில் தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒன்று கூடினர்.(தண்ணீரூற்று,நெடுங்கேணி) சந்தியில் றோட்டில் மரங்களைத் தடைகளாக  இரு சமூகத்தாராலும் போடப்பட்டு –முல்லைத்தீவு, நாயாறு, கொக்கிளாய்,அளம்பில் போன்ற பகுதிகளிலிருந்து சிங்களச் ஸ்ரீ போடப்பட்டு வந்த வாகனங்களையெல்லாம் மறிக்கப்பட்டு தமிழ் ஸ்ரீ பொறிக்கப் பட்டு  அவர்கள் போகுமிடத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப் பட்டார்கள். அப்போது எனக்கு எட்டு வயது.எனது தகப்பனார்,தாயாரின் தகப்பனார் இந்நிகழ்வின் பங்குதாரர்கள் .தண்ணீரூற்றுச் சந்தியில் எனது தகப்பனார் முஸ்தபா அவர்களுக்கு ஓர் தொழிற்பேட்டை. இருந்த்து பாடசாலை போகும நேரம்  போக மிகுதி நேரம் கடையில்தான் கழிப்பேன்.
1960ம் ஆண்டு அண்ணன் சிவா அவர்களுக்கு எந்தக் கட்சிகளிலும் தேர்தலில் போட்டியிட அனுமதி கொடுக்காத வேளையில்  இரு சமூகமும் (தமிழ,முஸ்லிம்)  சுயேட்சையாக உதயசூரியன் சின்னத்தில் நிறுத்தி வெற்றி பெறச்செய்தார்கள். அவர் காலத்தில் தமிழுக்கும்,தமிழ் உலகிற்கும் செய்த சேவைகள் அளப்பெரியன. எழுதிக் கொண்டே போகலாம். 1963ம் ஆண்டு சிங்களச் சகோதர்ர்கள் வாழும் வடபகுதியின் எல்லைப்புறமான வ்வுனியா செயலகத்திற்கு முன் தமிழ்,முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்கி சத்தியாக்கிரகம் செய்து சிங்களச் சகோதர்ர்களின் அன்பையும் பெற்றவர்.சுயேட்சை உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருந்த வேளையில் அற்ப,சொற்ப அல்லது அமைச்சுப் பதவிக்காக ஆட்சி யாளருடன் சேராது வன்னியின் மானம் காத்தவர். சிங்களத்தில் பாண்டித்தியம் பெற்ற அண்ணன் சிவா அவர்கள் பாராளுமன்றத்தில் தமிழ் பேசும்  சமூகம் மீது சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கிப் பேசும் போது வீறு கொண்ட வேங்கைபேல்துள்ளியெழுந்து சிங்களத்திலேயே பதிலடி கொடுப்பவராக இருந்தார்.இதனால்தானோ அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் எதிர்கட்சி ஆசனத்திலிருந்தார் அண்ணன் சிவா. அப்போதைய நிதி அமைச்சர் என்.எம்.பெரேரா அவர்கள் ஓர் கட்டத்தில் வ்வுனியா சிவா பாராளுமன்றத்தில் இருக்கும் வரை தமிழ் பேசும் சமூகத்தை யாரும் சிங்களத்தில் தாக்கிப்பேச முடியாது என்று கூறினார்.வன்னியின் கடைசி மன்ன்ன் பண்டார வன்னியனை வெளிக் கொண்டு வந்து உலகறிய வைத்த பெருமை அண்ணன் சிவாவையே சேரும்.வ்வுனியா செயலக வளாகத்தினுள் இருக்கும் பண்டாரவன்னியன் சிலையை நிறுவி வ்வுனியா நகரையே பெருமைப் படுத்திக் கொண்டிருக்கும் பெருமைக்குரியவரும் அண்ணன் சிவா அவர்களேயாகும்..
இவ்வழியில் நீங்களும் வன்னி மக்களின் நெஞ்சில் அழியா இடத்தைப் பெற வேண்டும்.தண்ணீரூற்றின் பெருமையை உலகின் நாலா பக்கமும் கொண்டு செல்ல வேண்டும். என்றென்றும் தமிழ் மக்களின் ஆசியும், துணையும் உங்களுக்குண்டு உங்களின் பாராளுமன்றக் காலம் புகழ் மிக்கதாக அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திற்கின்றேன். வன்னியின் அரசியல் வரலாற்றில் நீங்கள் ஒருவீராங்கனையாகத் திகழ வேண்டுமென்பதே என் விருப்பமாகும்.வ்வுனியா,முல்லைத்தீவு  ஆகிய இரு மாவட்டங்களும் உள்ளடக்கி வன்னி தேர்தல் தொகுதியாக அழைக்கப்பட்டு வந்த்து.விகிதாசார முறை வரும் வரை இறுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பெருமை அண்ணன் சிவாவுக்காகும். வன்னியின் கடைசி மன்ன்ன் பண்டார வன்னியனுக்கு சிலை நிறுவி வன்னியைப் பெருமைப் படுத்திய கடைசி பாராளுமன்ற உறுப்பினருக்கு சென்ற 2015.07.25ம் திகதி அவரது வ்வுனியா இல்ல வளாகத்தில் அவரின் ஆதரவாளர்களால் சிலை வைக்கப் பட்டதை ஒரு வரலாராகவே கருத வேண்டும்.பண்டாரவன்னியன் எவ்வாறு வன்னி மக்களின் உள்ளத்தில் நீங்கா இடத்தைப் பிடித்தானோ,அதே போல் கடைசிப் பாரபளுமன்ற உறுப்பினர் சிவாவும் வன்னி மக்களின் உள்ளத்தில் மட்டுமல்ல இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் உள்ளத்திலும் இடம் பிடித்து எல்லைக் காவலனாவார்.அவர் பாராளுமன்றத்தில்  இருந்த காலத்தில் மாற்றுக் கட்சியி னராலும் எல்லைக்காவலன்என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார்.
அவர் வன்னிக்கும், தமிழுக்கும் தேடிய பெருமையை நீங்கள் தொடர என் நல்வாழ்த் துக்கள். மேலும் அவர் பணி தொடரவே தேசியப்பட்டியல் மூலம்  (பாராளுமன்ற உறுப்பினர்) தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உங்களை தெரிவு செய்ததாகவே நான் கருதுகின்றேன். இறுதியாக எங்கள் கிராமத்தின் பெருமை உங்களாலேயே உயரும்நன்றி  இங்கு                   
உண்மையுடைய 
முஸ்தபா மன்சூர் (ஒப்பம்)


குறிப்பு – முஸ்தபா மன்சூர் அவர்கள் எனது தாய் மாமாவின் மகன்       ( மைத்துனர்)  இவர் கட்ந்த காலத்தில்  வ்வுனியா மன்னார் சந்தியில் இருக்கும்.எரிபொருள் நிரப்பு நிலையத்தில் (அப்போது சிவா இப்போது மஸ்தான்) பணி புரிந்தவர்,பின்னர் முல்லைத்தீவு நீதி மன்றிலும் இடம் பெயர்வின் பின்னர் புத்தளம் நீதி மன்றிலும் பணியாற்றியதுடன். அகதிகளுக்கு பல வகையிலும் உதவியவர். இவர் மேற் குறித்த கடித்த்தை குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு தபால் மூலம் அனுப்பியதாக்க் கூறினார்.அவருடைய விருப்பின் பேரில் இதனை இங்கு பிரசுரிக்கின்றேன். முல்லைத்தீவு சுல்தான் பரீத்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.