சமூக மட்டத்தில் பரந்ததொரு உரையாடலின் மூலம்
”சிங்ஹ லே” போலிப் புனைவை தகர்தெறிய வேண்டி யுள்ளது. ”சிங்ஹ லே” என்னும் இப்
போலி நம்பிக்கையை விருத்தியடைவதற்கு இடமளித்தால் இலங்கை நாட்டில் முடமான தொருசமூகம் உருவாவதை தடுக்க முடியாமல் போகும். ”சிங்ஹ லே” என்பது
உண்மையில் நாட்டிலுள்ள பிரதான இன வர்க்கத்தின் நிஜவரலாற்றிற்குரிய
குறியீ டொன்றல்ல. அச் சமூகத்திலுள்ள ஒரு சிலரின்உள்ளங்களில் ஊசலாடுகின்ற பிறப்பு
குறித்த போலியான நம்பிக்கை களாகும். ஒன்றில் அவர்கள் பிறப்புக் குறித்த
ஜதார்த்தத்தைப் புரிந்து கொண்டு போலி யான
நம்பிக்கையிலிருந்து விடுபட வேண்டும். இல்லாவிட்டால் நாம் அவர் களுடைய
மூடநம்பிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும்.அப்போதாவது மக்கள் அச்சிறு தரப்பினருடைய சிந்தனைகளை வெறுக்க ஆரம்பிப்பார்களா என்று பார்போம்.
முதலில் ”சிங்ஹ லே”
என்கின்ற போலி நம்பிக்கை எங்கிருந்து தோற்றம் பெற்றது என்பதை புரிந்து கொள்ள
வெண்டும். ”சிங்ஹ லே” என்ன என்பது பற்றி அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து
முரண்பாடுகள் உள்ளன. ஆனாலும் ”சிங்ஹ லே” என்ற கூறும் போது இயல்பாகவே சிங்க
இரத்தத்துடனான தொடர்பைக் காட்டுகின்றது.
சிங்கள இனத்திற்கும்
சிங்கத்தின் இரத்தத்திற்குமிடையிலான
தொடர்பு வம்சக் கதையாக அடையாளப்படுத்தப் படுகின்ற மஹா வம்சத்திலேயே
குறிப்பிடப் பட்டுள்ளது. மஹா வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி புராதன
இந்தியாவில் வங்க தேசத்து அரசன் என்னும்
பெயரில் ஒருவன் இருந்துள்ளான். அவனுடை மனைவி கலிங்க தேசத்து மாயாவதி ஆவாள்.
இவர்கள் இருவருக்கும்
கப்பா என்ற பெயரில் புதல்வியொருத்தி இருந்தாள். அவள் சிங்க மொன்றுடன் மண பந்தத்தில்
ஈடுபடுவாள் என அவள் பிறக்கும் போதே சோதிடர்கள் சொல்லி விட்டார்கள். பூப்பெய்திய
கப்பா ஒருநாள் போலி வேஷம் பூண்டு தந்தையின் அரச மாளிகையை விட்டு ஓடிச் சென்றாள்.
மகத தேசத்தை நோக்கி போர்க்களத்திலிருந்து காயப்பட்டவர்களை ஏற்றிச் செல்லும்
வண்டியொன்றில் ஏறிக் கொள்கிறாள்.
அவர்கள்
வணாந்திரத்தின் நடுப்பகுதியை கடந்து செல்லும் பொழுது திடீரென சிங்கமொன்று அவர்களைக்
குறுக்கிட எல்லோரம் தலை,கால் தெறிக்க ஓடினார்கள். மஹா வம்ச புனைகதையின் சிங்கம்
தன் முன்னால் வீற்றிருந்த கப்பா இளவரசியை ஆகாரமாகக் கொள்வதற்கு பதிலாக அவளை
சுமந்து சென்று தனது மனைவியாக்கிக் கொள்கிறது.
இப்புனை கதையை
அந்தக் காலத்து மனிதர்கள் நம்பியிருத்தாலும் பிரச்சினை யில்லை. ஆனால், தற்போது இதை
யாராவது நம்புகின்றார்களென்றால் அவர் களுடைய தலையில் கொம்பு முளைக்கிறதா என்று
பார்க்கவேண்டியுள்ளது.
மஹாவம்சம் கதையின்
பிரகாரம் சிங்கத்திற்கும், மனித பெண்ணொருத்திக்கும் ஏற்பட்ட உறவில் இரண்டு மனிதக் குழந்தைகள் பிறக்கின்றார்கள்.புதல்வன்
ஒருவனும்,புதல்வி ஒருத்தியும். புதல்வனின் பெயர் சிங்கபாகு,புதல்வியின் பெயர் சிங்க
சீவலி.
இளம் பிராயத்தை
அடைந்த சிங்கபாகு தன்னுடைய தாய் வழியினர் மனிதர்கள் என்பதை அறிந்து கொண்டு சிங்கத்
தந்தைக்கத் திருட்டத்தனமான முறையில் தனது தாயையும்,சகோதரியையும் அழைத்துக் கொண்டு
மனித வசமுள்ள இடமொன்றை நோக்கி ஓடிச் செல்கிறான்.தனது வாழிடத்தை நோக்கி வருகின்ற
சிங்கம் மனைவியும்,பிள்ளைகளும் இல்லாததைக் கண்டு ஆவேசப்பட்டு மனித
வசிப்பிடங்களுக்குச் சென்று அங்குள்ளமக்களை அழிக்க ஆரம்பிக்கிறது.
மிருக இரத்தமும்,மனித
இரத்தமும் ஒன்றாகக் கலந்தது பிரச்சினை இல்லை. என்று கூறினாலும் அதன் பின்னர்
மற்றொரு பிரச்சினை மேலெழுகிறது. அப்படியென்றால் சிங்கள இனம் தந்தையைக் கொலை
செய்தஒருவரின் வழித் தோற்றலில் வருகின்றதொரு மூடநம்பிக்கை
சிங்கம்
இவ்வாறு கிராமங்களை அழிக்கின்ற
போதுசிங்கத்தின் மகனான சிங்கபாகு சிங்கத்திடமிருந்து மக்களைப் பாதுகாக்க
முன்வருகிறார்.உண்மையில் சிங்கபாகு ஒர்
பௌத்தன் அல்ல என்ற காரணத்தினால் ”சிங்ஹ லே” குழுவினருக்கு அது தொடர்பிலும்
பிரச்சினை இல்லை.
ஆனால் பெளத்த
சமயத்தின் அது மிகவும் கொடுமையான பாவமானதால் நிச்சயமாக சிங்கபாகு நிச்சயமாக நரகத்
தீயில் விழக்4டிய ஒரு நிலையில் உள்ள ஒருவர். தனது இனம் ”சிங்ஹ லே” என்றால்
தந்தையைக் கொலை செய்த இனமொன்று என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டி ஏற்படும் அல்லவா?
இது ”சிங்ஹ லே” குழுவினருக்கு பிரச்சினை
இல்லை. பண்பட்ட மக்களுக் கென்றால் இது ஒரு பிரச்சினையாகும்.
தந்தையைக் கொலை
செய்த சிங்கபாகு பின்னர் தன்னுடைய சகோதரியை மனைவியாக்கிக் கொள்கின்றான். இது
அடுத்த பிரச்சினை அதாவது சகோதர இரத்தம் மிருக இரத்தத்துடன் கலப்புற்ற இனத்தில் சகோதர
இரத்தமும் கலப்பதனால் அது முடமான சமூகமொன்றாகவே நோக்கப்படும். என்பதனை அறிகிறார்களில்லை.
இதைமிக ஆடம்பரமான விடயமொன்றாக கருதும் சிங்களவர்கள் உணர்ச்சி ததும்பும் வகையில்
பாடசாலை வறலாற்றுப் புத்தகங் களிலும் பதிந்துள்ளார்கள். கேவலம் இவர்கள் இப்போலி
நம்பிக்கையிலிருந்து எப்போது விடுபடுவார்கள்.
சிங்கபாகு
சகோதரனுக்கு சிங்கசீவலி சகோதரிக்குமிடையிலான உறவில் பதினாறு தடவைகளில்
முப்பத்திரெண்டு குழந்தைகள் பிறக்கின்றார்கள். இந்தக் கதையையும் நாம் நம்பி
விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பிறகு மற்றுமொரு பிரச்சினை
உருவாகிறது.
இவ்விருரினதும்
மூத்த புதல்வன் விஜயன் எனப்படுகிறான். விஜயனின் நடவடிக்கை களையும் பிரச்சினையாக நோக்க
வேண்டியுள்ளது. விஜயன் மக்களுக்கு அநியாயங்களை இழைக்கின்றான். மோசமான
நடவடிக்கைகளில் ஈடு பட்டதன் காரணத்தினால் தந்தைக்கு அவனை நாடு கடத்த வேண்டி தேவை ஏற்படுகிறது. இதனாலேயே
”சிங்ஹ லே” (சிங்க இரத்தம்) உள்ள குழுவினர் இலங்கை வருகிறார்கள்.
ஆனால் இங்கு ஒரு
பிரச்சினை உள்ளது. விஜயன் என்பவன் சிங்கபாகு.சிங்க சீவலி ஜோடிக்கு கிடைத்த முப்பத்தி
இரண்டு குழந்தைகளுள் ஒருவன்தான் அப்படியென்றால் சிங்ஹ லேயின் உள்ள எஞ்சிய
முப்பத்தொரு பேர்களும் எங்கே? அதையும் நாம் கண்டு பிடிக்க வெண்டுமல்லவா? அவர்கள்
வங்க தேசத்தில் இருந்தார்களென்றால் வங்க
தேசமென்பது தற்போதைய பங்களா தேஷிலுள்ள ஒரு பிரதேசமாகும்.அவ்வாறென்றால் சிங்ஹ
லேயிலுள்ள எஞ்சிய முப்பத்தியொரு பேர்களிலிருந்து வழி வந்தவர்கள் பின்பு முஸ்லிம் களானார்களா?
அவர்கள் முஸ்லிம் என்றால் ”சிங்ஹ லே” (சிங்க இரத்தம்) உள்ள பௌத்தர்களைக்
காட்டிலும் ”சிங்ஹ லே” உள்ள முஸ்லிம்கள் முப்பத்தியொரு மடங்கு அதிகம் அல்லவா?
நாம் கடத்தப்பட்ட
விஜயன் உள்ளிட்ட எழுநூறூ பேரும் வங்க தேசத்திலிருந்து இலங்கை வந்ததனை
கடல்வழிப்பயணத்தில் எதிர்பாராததொரு நிகழ்வொன்றாக மஹாவம்சம் குறிப்பிடுகிறது. எழுநூறூ
பெயரும் ஒரு படகில்தானா வந்தனரா.? அவ்வாறென்றால் அது ஒரு பாரிய பயணிகள் கப்பலாக
இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு,வேறு படகுகளில் வந்தார்களென்று
வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் எல்லாப் படகுகளும் புயலொன் றினால் எதிர்பாராத
விதமாக இலங்கைக்குத்தானா வந்தடைந்தது?
இது போன்ற
வினாக்களைத் தொடுப்பதற்கு யாருமில்லை.என்பதால் பிரச்சினை இல்லை. இறுதியில் கொடிய
விஜயன் உள்ளிட்ட அடங்காப்பிடாரிகள் இலங்கைக்குள் நுழைகிறார்கள். குவேனி எனும்
யக்ஷ் (பிசாசு) கோத்திரத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை விஜயன் முதலில்
சந்திக்கின்றான்.அவளும் கூட ”சிங்ஹ லே” குழுமத்திற்கு பொருத்தமானதொரு பெண்தான்.
அவள் விஜயனை
காதலித்து, தன்னடைய இனத்தை அழிப்பதற்கு விஜயனுக்கு உதவி புரிகிறாள்.அவள் தனது
பரம்பரைக்கு துரோகம் இழைக்கிறாள்.விஜயன் அவளுடைய சந்ததியை அழிக்கிறான். பின்னர்
விஜயன் அவளுக்கு துரோகம் இழைக்கிறான்.விஜயன் குவேனியுடன் குடும்பம் நடாத்தி அவளை
விரட்டி விட்டு இந்தியாவின் பாண்டிய இளவரசி ஒருத்தியை இங்கு அழைத்து வருகிறான்.
குவைனி தனது இரு
குழந்தைகளையும் ( ஜீவஹந்த,திஸான ) தன்னுடைய யக்ஷ் கோத்திரத்தாரிடம் அழைத்துச் செல்கிறாள்.இதனால்
ஜீவஹந்தவும், திஸானவும் சிவனொளிபாத மலையுள்ள காட்டுப் பகுதிக்கு ஓடிச் செல்லு கிறார்கள்.
தற்கால வேடுவர்கள் அவர்கள் இருவரினதும் வழித்தோற்றல் களெனக் கூறப்படுகின்றது.
வேடுவர்கள்
அதிவாசிகள் என்பதாக சொல்லப்பகின்றார்கள்.ஆதிகாலம் தொட்டு வழிவந்த மக்களுக்கே
ஆதிவாசி என்கின்றோம்.ஆனால் ”சிங்ஹ லே” குழுவினர் விஜயனோடு வங்கதேசத்திலிருந்து
வந்தவர்களாவார்கள். அப்படியென்றால் யக்ஷ், நாக, ராக்ஷ்ஸ,தேவ கோத்திரங்களான பிரதி
நிதிப்படுத்திய மக்களுக்கு என்ன நடந்தது.
தமிழீழ
வரலாற்றாளர்களும் தாம் நாக கோத்திரத்திலிருந்து வந்தவர்கள் என்பதாக கடந்த
காலப்பகுதியில் ஒரு போலிக் கதையை பரப்புவதற்கு காரணமாக அமைந்ததும் இத்தகைய
மங்கோலிய வரலாற்று கதையே ஆகும்.
இவ்வாறு பல
கேள்விகள் நோக்கி நிற்கின்ற வரலாற்றுக்கு உரித்துடையவர்கள் என்று கூறுவது எவ்வளவு
மடைமையானது. இதுவரை காலமும் முன் னெடுக்கப்படாத ”சிங்ஹ லே” பிரச்சாரத்தை ஒரு
சிலரின் அற்ப தேவைக்காக செய்வது அதனை காட்சிப்படுத்தி தம் இனத்தின் மேலாதிக்கத்தை
பீற்றிக் கொள்வது என்பது எவ்வளவு இழிவான வெறுக்கத்தக்க செயல்.
எல்லா இனவாதிகளுக்கும்
பொது அடையாளமுள்ளது.அது தாழ்வுச்சிக்கலாகும். அத்தகைய ஒருவன் பிறிதொரு மனிதரை
விடவும் தான் மேலானவன் என்பதை காண்பிக்க வேண்டிய நோயால் பாதிக்கப்பட்டுளான். இந்நோய்
இந்நாட்டிலுள்ள குறிப்பிட்டதொரு இனத்திற்கு மாத்திரம் வரையறுக்கப் பட்ட தொன்றல்ல அது
உலகம் பூராகவும் காணக் கூடியதாகவுள்ள பொது அடையாளமாகும்.
ஹிட்லரின் நாஸி
வாதத்திற்கு காரணமாக அமைந்தது அதுவாகும். ஹொலன்கோஸ்ட் என்ற பெயரில் பாரிய இன
அழிப்பிற்கு தூபமிடப்பட்டதும் அத்தகைய மன நிலையாகும். ருவாண்டாவில் பாரிய மனிதக்
கொலைகள் இடம் பெற்றதும் அதனாலாகும். இனவாதம்,தேசியவாதம்.தேசப்பற்று என்பதாக
அடையாளம் கண்டு கொள்ள முடியுமான வகையிலுள்ள தாழ்வுச் சிக்கலானது மானிட சகிப்புத்
தன்மையற்ற மனித அழிவுகளை ஏற்படுத்த வல்ல மிகவும் கொடூரமான ஆவேசத்தின் ஆரம்ப கட்ட
நோய்க்கூறாகும்.- (நன்றி மீள்பார்வை 2016.01.22)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.