கடந்த 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளு மன்றத்தில் ஆளும் கட்சியினால் முன்மொழியப்பட்ட உத்தேச அரசியல் யா(ஆ)ப்பு அன்றைய எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சினரால் பாராளு மன்றத்தில் தீ இட்டுக் கொழுத்தப்பட்து.இந்த யா(ஆ)ப்பை வரைந்தவர்கள் (மறைந்தவர்கள்) முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஸ்ரப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நீலன் திருச் செல்வம் ஆகியோரென அன்று விமர்சிக்கப்பட்டது.
அன்று இந்த யாப்பு பாராளுமன்றத்தினால் எற்றுக் கொள்ளப் பட்டிருந்தால் வட மாகாண முஸ்லிம்கள் இன்று அங்கு கால் பதிக்க முடியாது போயிருக்கும்.சுயநலம் கொண்ட அரசியல் யாப்பு இதுவாகும். வடமாகாண முஸ்லிம்களுக்கு ஆப்பாகவும்,கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு வாய்ப்பாகவும் வடிவமைக்கப் பட்டது. குறிப்பிடத்தக்கதாகும்.
அதில் 250.இடைக்கால சபையும்,அமைச்சர் சபையும்
(அ) 1983 சனவரி 1ஆந் தேதிக்குப் பின்னர் வடக்கு,கிழக்குப் பிராந்தியங்களில் இடம் பெயர்கப் பட்ட ஆட்களுக்கு புனர் வாழ்வு அளிப்தற்கும்,அவர்களை மீளக் குடியமர்த்துவதற்கும்.
(ஆ) அத்தைகைய ஆட்கள் இழந்த ஆதனத்தின் உடைமையை மீளப் பெறுவதற்கு.அத்தகைய ஆட்களை இயலச் செய்வதற்கும் - அத்துடன்
(இ) அத்தைகைய மீளப் பெறுகை இயலாதவிடத்து அத்தைகைய ஆதன இழப்புக்கான அத்தகைய ஆட்கள் போதுமான நட்டஈடு பெறுவதை உறுதிப் படுத்துவதற்கும்.
அதில் இ) அத்தைகைய மீளப் பெறுகை இயலாத விடத்து அத்தைகைய ஆதன இழப்புக்கான அத்தகைய ஆட்கள் போதுமான நட்டஈடு பெறுவதை உறுதிப் படுத்துவதற்கும். இவ் (இ) பகுதி இருவரின் சுயநலமுடையதாகக் காணப்படுகிறது. இது நிறைவேற்றப் பட்டிருந்தால் வடக்கிலுள்ள அனைத்து முஸ்லிம்களது காணிகளும் தமிழர்களுக்கு தாரை வார்க்கப் பட்டிருக்கும்.அதே போல் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகள் மற்ற இனத்தவர்களினால் சசுவீகரிக்கப்பட்ட (கபளீகரம்) காணிகள் தமிழருக்கு இல்லாமல் போயிருக்கும்.
அதாவது முல்லைத்தீவில் முஸ்லிம்களின் காணிகளை பயன் படுத்திய விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கும்,அவர்களின் ஆதரவாளர் களுக்கும் அவர்கள் வசித்த காணிகள் சொந்தமாகி இருக்கும்.அதற்கு சொற்ப நட்டஈடு முஸ்லிம்களுக்கு வழங்கப் பட்டிருக்கும்.இதுபோல் ஏனைய நான்கு மாவட்ட முஸ்லிம்களுக்கும் நட்டஈடு கிடைத்திருக்கும். வடமாகாண முஸ்லிம்களின் நிலை அம்போதான்.
அதற்கு பிறகு இவர்களில் கொண்ட அனுதாபம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சகல வசதிகளுடனும் இவர்கள் குடியமர்தப் படுவார்கள். எளிதாக தமிழீழமும்,முஸ்லிம் மாவட்ட அலகும் பெற்றுத்தந்த பெருமையும் முஸ்லிம் காங்கிறஸை சார்ந்து விடும். இன்றும் அதே கட்சி,அதே கொள்கையுடைய தலைவர்,மூத்த போராளிகள் (ஏ.கே-47 இல்லாத) அன்று பிறக்காததுகளும் இன்று கூத்தாடுகுதுகள். போராளி களாம்.
வடமாகாண முஸ்லிம்களே,அரசியல் அனுதாபிகளே, பார்வையா ளர்களே இனியாவது சிந்தியுங்கள்.அவர்கள் வாழ்வுக்காக எங்களின் வாழ்வை பலி கொடுக்காதீர்கள். எமக்கு இனவாத கட்சி தேவைதானா மீண்டுமொரு முறை சிந்தியுங்கள்.
”நாய்வால் நிமிராதென்பர்” வடமாகாண இளைஞர்களே மீண்டும்,மீண்டும் நம்பி சோரம்போகாதீர்கள். இது செவிடன் காதில் ஊதிய சங்காகக் கூடாது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.