புலிகளின் ஆட்சிக் காலத்தில் முள்ளியவளையில் ஒரு கூட்டத்தைப் புலிகள்
ஏற்பாடு செய்திருந்தார்களாம்,அதில் புலிகள் முல்லைத்தீவு முஸ்லிம்களின்
காணிகளை எவ்விலை கொடுத்தவாவது வாங்குமாறு ஆலோசனை வழங்கினார்களாம். உடனே
அங்கிருந்த ஒரு அரச அதிகாரியும்,ஒரு அரசியல் வாதியும் (இப்போதைய வடமாகாண
சபை உறுப்பினர்) அதனை எதிர்த்தனராம். அதன் காரணமாக கூட்டம் பிசுபிசுத்துப்
போனதாம்.
இன்று முல்லைத்தீவில் முஸ்லிம் பிரதேசத்தில் காணிகள் வாஙகி இருப்பவர்கள் பிற மாவட்ட,பிரதேச தமிழர்கள் என்பது கவனிக்கத்தக்கது.அதில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மீள் குடியமர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது.ஆனால் முஸ்லிம்களை புறக்கனிக்கும் பல துவேசிகளையும் இங்கும் காண முடிகிறது.சில தமிழர் இரட்டை முகம் காட்டுகின்றனர். அந்தக் காலத்தில் முஸ்லிம்கள் தமது பூர்விகக் காணிகளை விற்க வேண்டாமென நானும் இடம் பெயர்ந்திருந்த முஸ்லிம் சகோதரர்களை வினயமாக கேட்டிருந்தேன். ஆனால் முஸ்லிம்கள் முகாம்களிலிந்த காலத்தில் பொருளாதாரப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் காணித்தரகர்களில் (முஸ்லிம்கள், தமிழர்) வலையில் சிக்கி ஏமாந்தனர்.(இன்று கவலைப் படுகின்றனர், அதனை மீளவும் பெற பல வழக்குகள் நடைபெறுகிறது, சிலர் மனிதாபிமான ரீதியில் மீண்டும் காணிகளை பரிமாறிக் கொண்டவர்களும் உள்ளனர்) முஸ்லிம்களின் வரலாற்றிறில் எமது கண்மணியான முஹம்மது நபி அவர்கள் மக்காவில் ஓர்இறை பிரச்சாரம் செய்ததில் அங்கு அவர்களினாலும்,ஏனைய ஓரிறை கொள்கையாளர்களினாலும் (முஸ்லிம்கள்) வாழ முடியாமல் போனது.இதனால் ஆரம்பத்தில் அபிசீனியாவிற்கும் பின்னர் மதீனாவிற்கும் இடம் பெயர்ந்தனர். பிற்காலத்தில் முஸ்லிம்கள் மக்காவைக் கைப்பற்றி அனறு தொடக்கம் இன்று வரை பிரபலமான முஸ்லிம்களின் நகராக விளங்ககிறது.இது போல் வடமாகாண முஸ்லிம்களும் மீளவும் தமது பிரதேசத்தில் வாழ இறைவன் வழி சமைப்பானென்ற அசையாத கொள்கை(நம்பிக்கை) யை நானும் கொண்டிருந்தேன். இதனால் அன்றை முல்லைத்தீவு பிரதேச புலிகளின் பொறுப்பாளராக ”முகுந்தன்” என்ற பெயருடையவருக்கு நானொரு கடிதம் அனுப்பினேன். அதில் முஸ்லிம்கள் தமது பூர்வீகக் காணிகளை விற்றுக் கொண்டிருப்தாகவும் அதனை தடுக்க முடியாமலிருப்பதால் தமிழர்கள் முஸ்லிம்களின் காணிகளை வாங்காமலிருக்க தடை உத்தரவு இடுமாறும் நாம் மீண்டும் வருவோமென்றும் குறிப்பிட்டிருந்தேன்.அதற்கு பதிலளித்தளித்திருந்த முகுந்தன் அது சார்பாகப் பேச புதுக்குடிடியிருப்புக்கு வரும்படி எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார் உடனே குறித்த இடைக்கால சமாதானம் நடைறெ்ற கால்தில் பல கஷ்டத்திற்கு மத்தியில் முல்லைத்தீவிற்கு சென்றேன்.அங்கிருந்து வட்டுவாகல் ஊடாக புதுக்குடியிருப்புக்குப் போவதற்கு சென்ற போது வட்டுவாய்க்கால் பாலத்தில் காவலிலிருந்த பொலிஸ் (புலி) என்னை அப்பிதேசத்திற்கு போக விட முடியாது என மறுத்து விட்டான். நான் முகுந்தனின் கடிதத்தை காட்டியும் அனுமதி மறுக்கப்பட்டது.உடனே ஆத்திரம் கொண்ட நான் அவனைப் பேசினேன்ச நீங்களும் உங்கட நிர்வாகமும் அப்படி போக முடியாவிட்டான் முகுந்தன் ஏன் எனக்கு அங்குவர அழைக்க வேண்டும் என்ற தோறனையில் கடுமைய வார்தைகளால் பேசிவிட்டு அதே மோட்டார் சைக்கிளில் வற்றாப்பளை,கேப்பா பிலவு ஊடாக செல்லும் போது அங்கும் புலிப் பொலிஸ் என்னை மறித்து விசாரணையை மேற் கொண்டு விட்டு செல்வதற்கு அனுமதித்தார். பதுக்குடியிப்பில் அமைந்த அவரின் அலுவலகத்தில் எம்மை வரவேற்று அமரச்செய்து விடயத்தைக் கேட்னர்.அப்போது முகுந்தன் கிளிநொச்சிக்கு போயிருப்பதாகவும்,வரும் நேரம் திடமாக கூற முடியாடிதனவும் கூறினர்.இதனால் அவரை சந்திக்காமல் தண்ணிரூற்றை நோக்கி திரும்பினோம். இன்றைய அரசு முஸ்லிம்களுக்கும்,ஏனைய சமூகத்தினருக்கும் நடந்த அநீதியை உணர்ந்து அண்மையில் சட்டம் ஒன்றை இயற்றி நிறைவேற்றியள்ளது. 1983 மே மாதம் தொடக்கம் 2009 மே மாதம் வரையிலும் விற்கப்பட்ட அரச காணிகளை யும்,உறுதிக் காணிகயும் மீண்டும் பெற விரும்புபவர்கள் (தமிழர்,முஸ்லிம்கள்,சிங்களவர்) நீதி மன்றத்தினுாக வழக்கு தொடர்து அதன் மூலமாகப் அதனைப்பெற வழி சமைத்துள்ளது.அதற்கு குறித்த கால எல்லையும் வழங்கப் பட்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்க விடயமாகும். (குறிப்பு முல்லை்தீவு முஸ்லிம் பிரதேசத்தில் காணிவாங்கிய தமிழர் இரு பொதுக் கிணறுகளையும் மூடியுள்ளனர்,மேலும் பலர் இணக்கப்பாட்டு வாழ்வுக்கு குந்தகமாகவும் செயற் படுகின்றனர். மேலும் காணியற்ற முஸ்லிம்களுக்கு அரச காணிகளை வழங்க தமிழ் அரசியலவாதிகள் சிலர் தடையாக இருப்பதும் கவனிக்கத்தக்கது. இக்காரணங்களிளால் முஸ்லிம்கள் சிறு முதலுக்கு விற்ற காணிகளை மீண்டும் பெறுவதற்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.