Monday, August 20, 2018

இருபத்தெட்டு வருட போராட்டம்.


1990ம் ஆண்டு ஜூன் மாதம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் புலிகளினால் தாக்கப்பட்டது. இதன் அச்ச நிலைமை காரணமாக முல்லைத்தீவில் உள்ள அரச அவலகங்கள் அணைத்தும் மூடுவிழா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் முல்லைத்தீவ மாவட்ட வைத்தியசாலையும், நான் பணியாற்றிய மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் அடங்கும்.அதன் பின்னர் முள்ளிவளை மத்திய மருந்தகத்தில் சில நாட்கள் பணியாற்றினேன்.பின்னர் முல்லைத்தீவு முஸ்லிம்கள் அங்கிருந்து பெரும் பகுதியினர் இடம் பெயர்ந்தனர். அதில் எனது குடும்பமும் அடங்கும்.1990ம் ஒக்டோபர் மாதம் வடமாகாண  முஸ்லிம்க்ள் அங்கிருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்ட பின்னர் எனக்கு வரவேண்டிய கொடுப்பனவுகளை எனது பணி சார்பாக அப்போது எனக்க சம்பள்  வழங்கிய வவுனியா சுகாதார சேவைப் பணிப்பாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்த எனது கொடுப்பனவு  மற்றும் பணியாற்றுவது சார்பாகவும் பேசினேன். எனக்குரிய கொடுப்பனவோ, பணியோ செய்ய அனமதி வழங்கவில்லை. கூறப்பட்ட காரணம்  எனது சுயவிபரக் கோவை இல்லை, இல்லை என்றே பதில் தரப்பட்டது.
இறுதியாக 1990ம் ஆண்டு மே மாதச் சம்பளம் பெற்றேன் மேலும் பல் கொடுப்பனவுகளும் எனக்கு வருமதியாகவிருந்தது.
அன்று தொடக்கம் எனது கடிதப் போராட்டம் தொடங்கியது. பல அரசியல்வாதிகளையும்,அதிகாரிகளையும்.அமைச்சர்களையும் கண்டு பேசியும், விண்ணப்பங்கள்  கொடுத்தும் எப்பலனும்  கிடைக்கவில்லை. அல்லாஹ்வின் அருளால் தகவல் அறியும் சட்ட மூலத்தின் ஈ புத்தகம் ஒன்றை முகநூல் நண்பர் ஒருவர் எனது வேண்டுதலுக்கமைவாக மின்னஞ்சலுக்கு அனுப்பினார்.
பின்னர் அதன் மூலமான போராட்டம தொடங்கினேன்.இதன் அடிப்படையில் எனது சம்பளப்பட்டியல் பெறும் வாய்பு கிடைத்தது. அதனை பார்க்கும் போது எனது கொடுப்பனவுகள் தொடர்ச்சியாக கையாடல் செய்திருக்கலாம் என ஊகிக்க முடிந்தது.அதன் பின்னர் வடமாகாண ஆளுனரைச் சந்தித்து விடயத்தை விபரித்தேன். தகவலறியும் சட்டத்திற்கமைவாக சுமார் முப்பது கடிதங்கள் பரிமாறப்பட்டது.இதில் வடமாண ஆளுனர்அலுவலகம் ,வடமாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு, வடமாகாண சுகாதார அமைச்சு, வடமாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர்,வவுனியா பிராந்திய  சுகாதார சேவைப் பணிப்பாளர், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் போன்ற நிறுவனங்கள் சம்பந்தப் படுத்தப் பட்டது.இறுதியாக வடமாகாண ஆளுனர் அலுவலகத்திலிருந்து இக்கடிதம் கிடைக்கப் பெற்றது.
குறிப்பு :- நான் சாதாரண தொழிலாளியாகும்  சுகாதாரத் தொழிலாளி இல்லை என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.