ஸ்ரீலங்கா அரசின் மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் அனுசரனையுடன் வட மாகாணத்திலிருந்து அகதிகளான ஆயிரக்கணக்கான யுவதிகளுக்கு தையல் பயிற்சியும் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புத்தளம் மாவட்ட முந்தல் பிரதேச செயலாளர் பிரிவின்கீழுள்ள ரஹ்மத்புரம் அகதிகள் இடைக்கால தங்கல் கிராமத்திலுள்ள ஒரு தொகுதியுவதிகள் தமது தையல் பயிற்சிகளை அண்மையில் முடித்துக்கொண்டனர். இவர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வுகுறித்த கிராமத்தில் கடந்த 2009.09.11 ம் திகதி எம்.எஸ்.பரீத்[ஜே.பி] தலைமையில் நடை பெற்றது.
தையல் பயிற்சி நிலையங்களுக்கு பொறுப்பாளரான அமைச்சின் அதிகாரி ஜனாப் முஹம்மது சாலி அவர்கள் உரையாற்றும் போது :படம் பரீத்.எம்.பௌஸி
வடமாகான ஆளுனரின் வடபிராந்திய இணைப்பாளர் ஜனாப் லியாவுதீன் அவர்கள்உரையாற்றும் போது பிடிக்கப்பட்டது. படம் :பரீத்.எம்.பௌஸி 0714915701
மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் முல்லைதீவு மாவாட்ட இணைப்பாளர். ஜனாப் ஜவாஹிர் ஜனோபர் உரையாற்றுகின்றார்.
வமாகாணத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கான செயலகத்தின் உதவிஆணையாளருக்கான [ஜனாப் எஸ்.எச்.ஏ.மதீன்அவர்களுக்கு ] நினைவுப்போருளை ஒர்மாணவி வழ்ங்குகின்றார்.
மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அல்-ஹாஜ் ரிசாட் பதுருதீன் அவர்களுக்கான நினைவுப்பொருளினைவடமாகாணத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கான செயலகத்தின் உதவிஆணையாளரிடம் ஓர் மாணவி கையளிக்கின்றார்.
அமைச்சின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளருக்கானநினைவுப்பொருளினை ஓர் மாணவி வழங்குகின்றார்.
கீழ்வரும் படங்கள் மாணவிகளுக்கு விருந்தினர்கள் தையல் இயந்திரங்களை கையளிக்கின்றனர். படங்கள் பரீத்.எம்.பௌஸி +940714915703
கீழ்வரும் படங்கள் மாணவிகளுக்கு விருந்தினர்கள் தையல் இயந்திரங்களை கையளிக்கின்றனர். படங்கள் பரீத்.எம்.பௌஸி +940714915703
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.