கடத்தப்பட்டுள்ள சமூகநல ஆர்வலரும், சி. ரீ.எப் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரும் ,கிராம சேவையாளருமான பி. றாசிக் அவர்களைமீட்டெடுப்பது சார்பான கூட்டம் புத்தளம் பெரியபள்ளி வாசலில் பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களின் தலைமையில் கடந்த 2010.10.29ம் திகதி நடைபெற்றது.இககூட்டத்தில் புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையினரும்,புத்தளம் பள்ளிவாசல் நம்பிக்கையாளரும்,சமூகசேவை அமைப்புக்களின் பிரதி நிதிகளும்,கடத்தப்பட்டவரின குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கடத்தப்பட்ட P.றாஸிக் அவர்களின் மகன் றிப்கான் என்பவர் குறித்த சம்பவம் சார்பாக விபரங் களை கூறினார். பள்ளிவாசலின் நிருவாகச்செயலாளர் அவர்கள் றாஸிக் G.S அவர்களை மீட்பது சார்பாக இதுவரை தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பதனை விபரமாகக் கூறினார்.இதன் பின்னர் இக்கடத்தல் சார்பாக கடந்த காலங்களில் வெளியிடப்பட்டட துண்டுப் பிரசுரங்களில் இடம் பெயர்ந்தவர்களின் மனம் புண்படும்படியான சொற்பிரயோகங்கள் பாவித் திருப்பது பற்றி இடம்பெயர்ந்தவர்கள் தமது அதிர்ப்தியைத் தெரிவித்தனர்.கூட்டநேரத்தில் அதிக நேரம் இது சார்பாகவே பிரதிவாதங்கள் இடம் பெற்றது. வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கான புத்தளம் மாவட்ட உபஅலுவலகத்தின் உதவி ஆணையாளர் மதீன் அவர்கள் கருத்துரைக்கையில் வடமாகாண அகதிகள் மீழ்குடியேற்றத்திற்காக வடமாகாணத்திற்கு போகாமல் புத்தளத்திலிருந்து புத்தளத்து மக்களுடன் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெறவேண்டுமென தீர்மானித் திருந்தனர்.இத்துண்டுப்பிரசுரம் அவர்களின் மனங்களில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இப்போது அதிகமானவர்கள் தமது பிரதேசத்தில் குடியமரவென தமது ரேஸனை வெட்டித் தரும்படி அலுவலகம் வருவதாகக்கூறியது,கவனத்தில் கொள்ளவேண்டியது. இறுதியில்இனிவரும்காலங்களில் இப்படியான செயற்பாடுகள் நடக்காமல் இருசாராரும் கவனமாக செயலாற்ற வேண்டுமென முடிவுசெய்யப்பட்டது. குறிப்பாக இக்கடத்தலுடன்இடம் பெயர்தவர்களில் ஒருசிலர் அல்லது ஒரு குழு மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதால் எல்லா இடம்பெயர்ந்தவர்களையும் மனம்நோகச் செய்வது தவறெனவும் அகதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. தொடர்ந்தும் அன்ஸாரிகள்,முஹாஜிரீன்கள் மத்தியில் நல்லுறவு பேணப்படுதல் வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
அதனைத்தொர்ந்து கடத்தலுடன் தொடர்புடையவரென கடத்தப்பட்டவரின குடும்பத்தினரால் பெயர் குறித்துரைக்கப்படும் எருக்கலம்பிட்டி நவ்ஸாத் சார்பாக கலந்துரையாடப்பட்டது. இவர்சார்பாக நாகவில்லு(எருக்கலம்பிட்டி)பள்ளிவாசல் நிருவாகத்தினருடன் தொடர்பு கொளவதெனவும் தீர்மானிக்கப்பட்டதுடன். தொடர்ந்து் இப்படியான கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டுமெனவும், கடத்தப்பட்ட வரை மீட்க அனைவரும் ஒற்றுழைப்பு வழங்குவதாகவும் கூறினார்கள்.இறுதியில் தவைர் சகல கேள்விகளுககம் விடைகளும் விளக்கங்குளும் வழங்கிய பின்னர் கூட்டம நிறைவடைந்தது.
Saturday, October 30, 2010
கடத்தப்பட்ட சி.ரீ.எப் நிறுவனத்தின் ஆரம்ப கர்த்தாக்களின் ஒருவரான பி.ராசிக் அவர்களை மீட்பது சார்பான கூட்டம். ( திருத்தம்)
லேபிள்கள்:
javascript:void(0)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.