குறைந்த இரத்த அழுத்தம் என்பது இரத்தத்தில் உள்ள அழுத்தத்தின் அளவு இருக்க வேண்டிய அளவைவிட குறைவாகவே காணப்படும். இரத்தக்குழாய்களின் வழியாக செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து காணப்படுவதால் இரத்த அழுத்தம் குறைந்து அதற்கான அறிகுறிகள் ஏற்படுகின்றன. இரத்தத்தின் அழுத்தம் குறையும்போது மூளை, இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உடல் உறுப்புகளுக்கு செல்லும் பிராணவாயு மற்றும் உணவுப்பொருட்களின் அளவு குறைவதினால் மேற்கூறிய உடல் உறுப்புகளில் நிரந்தர பாதிப்பு / சிதைவு ஏற்படுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தை போல் இரத்த அழுத்தம் எண்ணைக் கொண்டு, குறைந்த இரத்த அழுத்தம் வரையறுக்கப்படுவதில்லை. மாறாக, உடல் உறுப்புகளுக்கு செல்லும் இரத்தம் அளவு குறைவதினால் ஏற்படும் அறிகுறிகளைக் கொண்டு குறைந்த இரத்த அழுத்தம் வரையறுக்கப்பட்டுள்ளது. சிலருக்கு, எந்த வித குறைந்த இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் இன்றி, இரத்த அழுத்தத்தின் அளவு 90/50 (மமீ பாதரசம்) என்ற அளவிலேயே இருக்கும். உயர் இரத்த அழுத்தம் கொண்ட நபர்களில், இரத்த அழுத்தத்தின் அளவு 100/60 (மிமீ பாதரசம்) என்ற அளவிற்கு குறையும் போது, குறைந்த இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் ஏற்படுகிறது.
குறைந்த இரத்த அழுத்தம் உள்ள நபர்கள், எழுந்து நிற்கும் போது லேசான தலைவலி, தலைச்சுற்றல் அல்லது மயங்கி விழுதல் போன்றவை ஏற்படுகின்றன. இதனை ஆர்த்தோஸ்டாடிக் ஹைபோடென்ஷன் (எழுந்து நிற்பதினால் ஏற்படும் குறைந்த இரத்த அழுத்த நிலை) என்பர். சாதாரணமாக ஆரோக்கியமான நிலையில் உள்ள நபர்களிலும் இதுபோல் எழுந்து நிற்கும் போது இரத்தத்தின் அழுத்தம் குறையும். ஆனால் அது விரைவாக சமன்செய்யப்படுகிறது. இதயத்திற்கு இரத்தத்தை ஏந்திச்செல்லும் இரத்தக் குழாய்களில் இரத்த அழுத்தத்தின் அளவு குறையும்போது, இரத்தத்தின் அளவு குறைந்து, இதயத்தில் வலி அல்லது இதயத்தின் திசுக்களில் பாதிப்புகளும் எற்படக்கூடும். சிறுநீரகங்களுக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறையும்போது சிறுநீரகத்தின் மூலம் நம் உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படாமல் போகிறது. உ-மாக, யூரியா மற்றும் கிரியாட்டினின் போன்ற கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படாமல், அவற்றின் அளவு இரத்தத்தில் அதிகரிக்கிறது. தொடர்ந்து இரத்த அழுத்தத்தின் அளவு குறைந்து காணப்படுவதால், சிறுநீரகங்கள், ஈரல், இதயம், நுரையீரல் மற்றும் மூளை போன்றவை மிக விரைவாக தங்கள் செயலை இழக்கின்றன. |
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.