Tuesday, April 26, 2011

கட்டாய தலைமைத்துவ பயிற்சி நெறியை தொடர்வதில் முஸ்லிம் மாணவர்களுக்கு பிரச்சினை _


 
வீரகேசரி இணையம் 4/26/2011 2:49:17 PM
  புதிதாக பல்கலைக்கழகங்களுக்கு தேர்ந்தெடுக்கப்ட்ட மாணவர்களுக்கு உயர் கல்வி அமைச்சு வடிவமைத்துள்ள கட்டாய தலைமைத்துவ பயிற்சிநெறியிலிருந்து முஸ்லிம் மாணவிகளுக்கு விதிவிலக்கு அளிக்குமாறு மாற்றுக் கொள்கைக்கான பல்கலைக்கழக மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

2010 மற்றும் 2011 ஆம் ஆண்டிக்காக புதிதாக பல்கலைக்கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்காக உயர்கல்வி அமைச்சு மூன்றுவார கட்டாய தலைமைத்துவ பயிற்சி நெறியொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சிநெறி முப்படைகளின் நெறிப்படுத்தலின் கீழ் படைமுகாம்களில் வதிவிட பயிற்சிநெறியாக நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சிநெறியானது பல்கலைக்கழக மாணவர்களிடையே தேசப்பற்றையும் சகவாழ்வையும் தலைமைத்துவ ஆளுமைகளையும் வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதோடு, பல்கலைக்கழகம் புகுமுன்னறே இவ்வாறான பயிற்சிநெறிகள் அளிக்கப்படுவது பல்கலைக்கழக வாழ்வில் ஒழுக்க நெறியுடனும் கட்டுக்கோப்புடனும் தனது கல்வி வாழ்கையைத் தொடர மாணவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கின்றது.

எனினும் இப்பயிற்சிநெறியானது வதிவிடபயிற்சிநெறியாக இராணுவ முகாம்களில் இடம்பெறவிருப்பதானது முஸ்லிம் மாணவிகள் இப்பயிற்சி நெறியில் கலந்துகொள்ள முடியாத நிலையை காணப்படுவதாகவும், எனவே முஸ்லிம் மாணவிகள் இப்பயிற்சி நெறியில் கலந்துகொள்வதில் பல்வேறு கலாச்சார ரீதியான பிரச்சiனைகளை எதிர்நோக்குவதாகவும் மாற்றுக்கொள்கைக்கான பல்கலைகழக மாணவர் சங்கத் தலைவர் சஹ்பி எச். இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

எடுத்துகாட்டாக இப்பயயிற்சி நெறியில் உடற்பயிற்சி, அணிநடை பிறபயிற்சிகள் போன்ற அம்சங்கள் உள்ளடக்கப்படும் என்பதால் இவற்றில் முஸ்லிம் மாணவிகள் கலந்துகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த பயிற்சிகளுக்கேற்ற ஆடை அணிவதில் மாணவிகள் பல்வேறு கலாச்சார சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். மேலும் பெற்றோர்கள் மத்தியிலும்  இதுதொடர்பாக பல்வேறு அச்சங்கள் காணப்படுவதால் தமது பெண் பிள்ளைகளை இவ்வாறான பயிற்சி நெறியைத் தொடர்வதற்கு எந்தளவு தூரம் அனுமதிப்பார்கள் என்பதும் இங்கு அவதானத்திற்குறிய அம்சமாகும்.

இந்நிலையில் இத்தலைமைத்துவப் பயிற்சிநெறி அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம் மாணவிகள் தமது பல்கலைக்கழக கல்வியை கைவிட வேண்டிய நிலைமையையும் இது தோற்றுவிக்கலாம்.

எனவே இந்த பயிற்சிநெறியில் முஸ்லிம் மாணவிகள் கலந்துகொள்வதில் அவர்களுக்கு பல்வேறு கலாச்சார ரீதியான பிரச்சினைகள் காணப்படுகின்றது என்பதில் எவ்வகையான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. எனவே இப்பயிற்சிநெறி முஸ்லிம் மாணவிகள் கலந்துகொள்ள உகந்ததொன்றல்ல எனவே முஸ்லிம் மாணவிகளுக்கு இந்த பயிற்சிநெறியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என சஹ்பி எச். இஸ்மாயில், மேலும் குறிப்பிட்டுள்ளார். ___ E-mail to a friend  
நன்றி வீரகேசரி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.