நாம் இன்று காணக்கூடிய தொலைத் தொடர்பு சாதனங்கள் அல்லாஹ்வினால் எமக்களிக்கப்பட்ட மிகப் பெரிய அருட்கொடைகளாக இருக்கின்றன என்பதை நாமறிவோம். அத்தகைய சாதனங்களை நாம் அல்லாஹ்வுக்கு வழிப்படும் அம்சங்களிலும், அவனுடைய மார்க்கத்திற்குப் பணி புரியக்கூடிய வழிகளிலும், பெற்றோர் உறவினர் மத்தியிலான தொடர்பினை வலுப்படுத்தக்கூடிய விடயங்களிலும் பயன்படுத்துகின்ற போது, நாமும் அவற்றை சரிவரப் பயன்படுத்தியோர் கூட்டத்தில் ஆகிவிட முடியும்
Monday, May 16, 2011
Sunday, May 15, 2011
முஸ்லிம்களும் பங்கேற்பு - எஸ்.எல்.எம்.சி கோரிக்கை
அமைச்சர் ரவூப் ஹக்கீம் |
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் சமூகத்தவரின் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது இன்று ஞாயிற்றுகிழமை வவுனியாவில் நடைபெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
வவுனியா நகரில் நடைபெற்ற இந்த பேராளர் மாநாட்டில் நாடெங்கிலும் இருந்து 2000த்துக்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.
Friday, May 13, 2011
மனிதன் ஒரு போதும் கடவுளாக முடியாது.
[ மனிதன் ஒரு போதும் கடவுளாக மாட்டான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். திருக்குர்ஆன் கூறுகிறது, கடவுளுக்கு தேவைகள் கிடையாது, சோர்வுகள் ஏற்படாது, பெற்றோர்கள் கிடையாது, குழந்தைகள் கிடையாது, மனோ இச்சைகள் கிடையாது, அவன் மகாத்தூயவன், எந்த ஒரு மனிதனின் பார்வையும் அவனைக் காணமுடியாது அப்படிப்பட்டவேனே இறைவன், அவனை மனிதர்கள் தங்களுக்கு மொழிக்கு ஏற்றவாறு அழைக்கிறார்கள்..
Wednesday, May 11, 2011
பிரபல இத்தாலி பாதிரியார் இஸ்லாத்தை ஏற்றார்!
13th April, 2007
நன்றி: மக்கள் உரிமை வார இதழ்
மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால் ஏற்பட்ட மனமாற்றம்.
சமீபத்தில் சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல்அஜீஸ் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. தற்போது அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
Friday, May 6, 2011
"ஒசாமா கொலை: முழு தகவல் தேவை" ஐநா
மின்அஞ்சலாக அனுப்புக | அச்சு வடிவம் |
ஒசாமா பின் லாடன் |
அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கையில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது தொடர்பான முழு விபரங்களையும் அமெரிக்க வெளியிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவி பிள்ளை கேட்டுள்ளார்.
ஒசாமா பின் லாடனுக்கு எதிரான நடவடிக்கை சட்டப்படியான ஒன்றா என சரிபார்க்க இந்தத் தகவல்கள் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
ஒசாமா கொலை: தகவல்களில் மேலும் மாற்றங்கள்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 மே, 2011 - பிரசுர நேரம் 14:22 ஜிஎம்டி |
மின்அஞ்சலாக அனுப்புக | அச்சு வடிவம் |
ஒசாமா கொலையைக் கண்டித்து பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம் |
பாகிஸ்தானின் அப்டாபாதில் இருக்கும் அந்த பெரும் வளாகத்தில் நடந்த விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்கா முதல் நாள் கூறிய தகவல்கள் கடந்த ஒரு வாரத்தில் படிப்படியாக கட்டவிழத் தொடங்கியிருக்கின்றன.
உக்கிர சண்டை நடக்கவில்லை
அங்கே உக்கிரமான துப்பாக்கி சண்டை நடந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அங்கே ஒரே ஒருவர் தான் அமெரிக்க படையினரை எதிர்த்து துப்பாக்கியால் சுட்டதாகவும், அதுவும் கூட இவர்கள் அங்கே போய் இறங்கிய உடன் அது நடந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகளே இப்போது ஒப்புக்கொள்கிறார்கள்.
Wednesday, May 4, 2011
ஒசாமா கொலை: தகவல்களில் மாற்றம்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 மே, 2011 - பிரசுர நேரம் 15:43 ஜிஎம்டி
பின் லாடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை தாங்கள் முதலில் வெளியிட்ட விபரங்களை மாற்றிக்கொண்டுள்ளது.
முதலில் சொல்லப்பட்டதுபோல தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய போது பின் லாடன் ஆயுதம் எதனையும் ஏந்தியிருக்கவில்லை என்று வெள்ளை மாளிகை இப்போது கூறுகிறது.
ஒசாமா தாக்குதல் பாகிஸ்தானுக்கு தெரியும்?
புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 மே, 2011 - பிரசுர நேரம் 15:37 ஜிஎம்டி |
மின்அஞ்சலாக அனுப்புக | அச்சு வடிவம் |
ஒசாமா பின் லாடன |
ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், பாகிஸ்தானுடன் புலனாய்வுத் தகவல்கள் ஏன் பகிரிந்து கொள்ளப்படவில்லை என்பது குறித்து சி ஐ ஏ வின் இயக்குநர் தெரிவித்துள்ள கருத்துகள் பாகிஸ்தானில் கடும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளன.
அந்த நடவடிக்கை பற்றி, பாகிஸ்தானுடன் புலனாய்வுத் தகவல்களை பகிரிந்து கொண்டால், அது அந்த நடவடிக்கையை சீர்குலைத்துவிடும் என்கிற அச்சம் காரணமாகவே தாம் அந்நாட்டுடன் எந்தத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று, அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி ஐ ஏ வின் இயக்குநர் லியான் பனேட்டா கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)