அமைச்சர் ரவூப் ஹக்கீம் |
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் சமூகத்தவரின் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது இன்று ஞாயிற்றுகிழமை வவுனியாவில் நடைபெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
வவுனியா நகரில் நடைபெற்ற இந்த பேராளர் மாநாட்டில் நாடெங்கிலும் இருந்து 2000த்துக்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் அந்தக் கட்சியின் யாப்பு விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதுடன், இன்றைய நாட்டின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் குறிப்பாகத் தற்போது அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் நடைபெற்று வருகின்ற பேச்சுவார்த்தைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டிருப்பதாக அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமாகிய ரவூப் ஹக்கீம் அவர்கள் பிபிசிக்குத் தெரிவித்தார்.
இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தமிழர் தரப்பினருடன் மட்டும் பேச்சுக்கள் நடத்துவதன் மூலம் முழுமையான தீர்வு ஒன்றை எட்ட முடியாது என்பது இந்தப் பேராளர் மாநாட்டில் பலரும் சுட்டிக்காட்டியிருப்பதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்துடனும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருடனும் பேச்சுக்கள் நடத்துவதற்குத் தாங்கள் தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமாகிய ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்பில் அந்தக் கட்சியின் யாப்பு விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதுடன், இன்றைய நாட்டின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் குறிப்பாகத் தற்போது அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் நடைபெற்று வருகின்ற பேச்சுவார்த்தைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டிருப்பதாக அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமாகிய ரவூப் ஹக்கீம் அவர்கள் பிபிசிக்குத் தெரிவித்தார்.
நன்றி-BBC
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.