Friday, May 13, 2011

மனிதன் ஒரு போதும் கடவுளாக முடியாது.

[ மனிதன் ஒரு போதும் கடவுளாக மாட்டான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். திருக்குர்ஆன் கூறுகிறது, கடவுளுக்கு தேவைகள் கிடையாது, சோர்வுகள் ஏற்படாது, பெற்றோர்கள் கிடையாது, குழந்தைகள் கிடையாது, மனோ இச்சைகள் கிடையாது, அவன் மகாத்தூயவன், எந்த ஒரு மனிதனின் பார்வையும் அவனைக் காணமுடியாது அப்படிப்பட்டவேனே இறைவன், அவனை மனிதர்கள் தங்களுக்கு மொழிக்கு ஏற்றவாறு அழைக்கிறார்கள்..
தமிழில் - இறைவன்
ஆங்கிலத்தில் - GOD
ஹிந்தியில் - பகவான்
அரபியில் - அல்லாஹ்
என்று அழைக்கிறார்கள்.]
என்னப்பா இது? தலைப்பே தவறாக இருக்கிறதே! என்று எண்ணி முழுவதுமாக படிக்காமல் விட்டு விடாதீர்கள் முழுவதையும் படியுங்கள்.
ஆந்திர மாநில புட்டர்பத்தி சாய்பாபாவை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் இந்துக்களில் பல பேர் நம்புகின்றனர். படிக்காத பாமர மக்கள் முதல் படித்த பட்டதாரி வரை, ஏழை முதல் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பணக்காரன் வரை பல பேர் இவருடைய பக்தர்களாக இருக்கிறார்கள்.

தன்னுடைய பேச்சாற்றல் மூலமாகவும், தந்திர வித்தைகள் மூலமாகவும் பல மக்களை கவர்ந்து தன்னை ஒரு மிகப்பெரிய அவதாரமாக ஆக்கிக்கொண்டவர்தான் இந்த புட்டர்பத்தி சாய்பாபா! சமீபத்தில் தொலைகாட்சியிலும், நாளிதழ்களிலும் ஒரு பரவலான் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதுதான் சாய்பாபாவின் உடல் நிலைப் பற்றி.
சாய்பாபாவிற்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டுவிட்டதாகவும், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி (ஃபேஸ் மேக்கர்) பொருத்தப்படிருப்பதாகவும், நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலை மோசமாகி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கட்டுரையை படிக்கக் கூடியவர்கள் யாராவது இவரை கடவுள் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ நம்புபவர்களாக இருந்தால் பொறுமையாக இந்த கட்டுரையை படிக்கவும். அதன் நன்றாக அமர்ந்து குறைந்தது 5 நிமிடமாவது சிந்தியுங்கள், நிச்சயமாக சத்தியம் உங்களை வந்தடையும்.
ஒரு சாதாரான் ஹிந்துக்களிடம் எத்தனை கடவுள் இருக்கிறது என்று கேட்டால்? ஒருவர் சொல்வார் மூன்று என்று, மற்றவர் சொல்வார் முப்பது என்று, மற்றொருவர் சொல்வார் மூவாயிரம் என்று இப்படியே போய் முப்பத்தி முக்கோடி தேவர்கள் என்றும் சில பேர் சொல்வார்கள். ஆனால் இந்து மத வேதங்களை படித்த மேதையிடம் கேட்டால் கடவுள் ஒன்று தான் என்று கூறுவார். இன்று எல்லா ஹிந்துக்களும் நம்பக்கூடிய ஒரு விஷயம் தான் கடவுளின் அவதாரம் என்பது. ஹிந்து மத புராணங்களிலும், இதிகாசங்களிலும் இத்தகைய அவதார புருஷர்கள் நிறையவே உண்டு. உதாரணம் இராமன், கிருஷ்ணன். இவர்களை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும், இவர்கள் பூமியில் அசத்தியத்தை அழிப்பதற்காக மனிதர்களாக அவதாரம் எடுத்தார்கள் என்றும் நம்புகின்றனர்.
உலகத்தில் பெண்ணின் வயிற்றில் கருவாக உருவாகி பிறந்த மனிதர்கள் யாவும் மரணத்தை அடைந்தே தீர வேண்டும் என்பது தான் நியதி. அவ்வாறுதான் இன்று வரை பிறந்த மனிதர்கள் அனைவரும் இறந்தும் இருக்கின்றனர். மேற்கூறிய அவதார புருஷர்களின் இறுதி வாழ்க்கை என்ன ஆனது என்று எங்கையுமே குறிப்பிடப் படவில்லை. அவர்களுக்கு என்ன ஆனது என்பதும் நமக்கு தெரியவில்லை, காரணம் அத்தகைய அவதார புருஷர்கள் வாழ்ந்த காலங்கள் யாருக்குமே சரியாக தெரிவதில்லை, சில பல லட்சம் வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்தார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும், அது என்னவென்றால் ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும், மரணத்தில் இருந்து யாரும் தப்பவே முடியாது என்பதுதான்.
இந்தியாவில் தற்போதைய காலகட்டத்தில் சில நபர்களை அவதாற புருஷர்களாக கருதுகிறார்கள், அதில் இரண்டு நபர்களைமட்டும் இங்கே காண்போம்.
ஓஷோ கம்யூனிட்டியின் நிருவனர் பகவான் ரஜ்நிஷ், இவர் அமெரிக்காவில் ஒரு ஆசிரமம் நடத்தி வந்தார். அங்கே இருந்த அமெரிக்கர்கள் பலரை தனது கவர்ச்சிகரமான பேச்சாற்றல் மூலமாக தனது பக்தர்களாக மாற்றினார். இதனால் அமெரிக்க அரசாங்கம் இவரை சிறையில் அடைத்தது, சிறையில் இவருக்கு விஷம் வழங்கப்பட்டதாக இவரே கூறியிருக்கிறார். பின்னர் இவரை விடுதலை செய்த அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. இங்கே இவர் ஓஷோ கம்யூனிட்டியை தொடர்ந்து நடத்தி வந்தார். பின்னர் மரணம் அடைந்தார்.
இவரை கடவுளாக நம்பும் மக்கள் இவர் பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை ஆனால் உலகத்திற்கு சில காலங்களுக்கு விஜயம் செய்திருந்தார் என்றும் நம்புகின்றனர். சற்று யோசித்து பாருங்கள் கடவுளை அமெரிக்க அரசாங்கம் சிறையில் அடைத்ததும், அவரும் உணவில் விஷம் வழங்கப்பட்டதையும்! இப்படிப்பட்டவர்கள் கடவுளாக இருக்க முடியுமா?
தற்போது புட்டர்பத்தி சாய்பாபா, ஆந்திர மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய ஆசிரமத்தை நடத்தி வரும் சாய்பாபாவை பல மக்கள் கடவுளாக நம்புகின்றனர். தற்போது அவர்கள் நம்பும் கடவுளுக்கு சுவாசக்கோளாறு பிரச்சனை. ஆதலால் செயற்கை கருவி பொறுத்தியுள்ளனர். சாய்பாபா தற்போது உயிருக்காக போராடிவருகிறார். செயற்கை கருவி ஒரு போதும் இயற்க்கையை போன்று இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே, அதே போன்று செயற்க்கை கருவி பொருத்தப்பட்டவர்களும் நீண்ட நாட்களுக்கு வாழ்ந்ததாகவும் தெரியவில்லை.
அப்படியென்றால் சாய்பாபா தனது இறுதி நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கிறார். அவர்களுடைய பக்தர்கள் ஆத்திரம் அடையக்கூடாது, இது தான் நிதர்சனம். மனிதனாக பிறந்தால் மரணித்தே தீர வேண்டும். அப்படி மரணிப்பவர்கள் யாரும் கடவுளாக இருக்க முடியாது என்பதே சத்தியம்!
கடவுள் என்பவன் யார்? மிக அழகாக கூறுகிறது திருக்குர்ஆன். ஒருவரை கடவுள் என்று நம்புவதற்கு அவரிடம் 4 நிபந்தனைகள் இருக்க வேண்டும்.
1. அவர் ஒருவராக இருக்க வேண்டும்.
இன்று எல்லா மதத்தின் வேதங்களும் கடவுள் ஒன்று தான் என்று கூற அந்த வேதங்களைப்பற்றிய ஞானம் இல்லாதவர்கள் பல கடவுள் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆக கடவுள் என்பவர் ஒன்று தால் பலர் அல்ல என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். 2. கடவுள் தேவையற்றவராக இருக்க வேண்டும்.
 உலகத்தை படைத்த கடவுளை நம்பித்தான் மற்றவர்கள் இருக்க வேண்டுமே ஒழிய, கடவுள் பிறரை நம்பி இருக்கக்கூடாது. மேலே குறிப்பிட்ட இரண்டு நபர்களும் அவ்வாறு இருந்தார்களா? ரஜ்நிஷிற்கு அமெரிக்கா அரசாங்கம் விசாவை தள்ளுபடி செய்தது! கடவுள் உலகத்திற்கு விஜயம் செய்ய வருவாரானால் மற்ற நாடுகளுக்குச் செல்ல அவர் படைத்த மனிதர்களே விசா வழங்க வில்லை போலும் அப்படியா? மேலும் அவருக்கு உணவில் விஷம் கொடுக்கப்பட்டதாம்! சற்று யோசித்துப்பாருங்கள் கடவுளுக்கு மனிதர்கள் விஷம் கொடுத்தால் அது கடவுளை பாதிக்குமா? அப்படி பாதித்தால் அவர் கடவுளாக இருக்க முடியுமா?

அதே போன்று இன்று உடல் நிலை மோசமாகிக்கொண்டிருக்கும் சாய்பாபா? கடவுளுக்கு உடல் நிலை சரியில்லையா? அவருக்கு செயற்க்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறதே! அதுவும் மருத்துவர்களின் உதவியோடு! அப்படி இருக்க சாய்பாபா கடவுளாகவோ கடவுளின் அவதாரமாகவோ எப்படி இருக்க முடியும்?
3. அவர் யாரையும் பெற்றிருக்கக்கூடாது! யாராலும் பெறப்பட்டவராக இருக்கக்கூடாது.
ரஜ்நிஷ் மற்றும் சாய்பாபாவிற்கும் பெற்றோர்கள் உண்டு, மற்ற மனிதர்கள் போல் அவர்களும் தங்களுக்கு பல தேவைகளை பிறரின் உதவியுடன் பெற்றிருக்கிறார்கள். இப்படி இருக்க இவர்கள் கடவுளாக இருக்க முடியுமா?
4. அவரைப்போன்று எவறுமே இல்லை!
இந்த கட்டுரையின் மூலமே 2 நபர்களை தெரிவித்துவிட்டோம், தன்னை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் கூறும் பட்டியல் நமது இந்தியாவில் நீண்டுகொண்டே போகிறது.
ஆக, மனிதன் ஒரு போதும் கடவுளாக மாட்டான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். திருக்குர்ஆன் கூறுகிறது, கடவுளுக்கு தேவைகள் கிடையாது, சோர்வுகள் ஏற்படாது, பெற்றோர்கள் கிடையாது, குழந்தைகள் கிடையாது, மனோ இச்சைகள் கிடையாது, அவன் மகாத்தூயவன், எந்த ஒரு மனிதனின் பார்வையும் அவனைக் காணமுடியாது அப்படிப்பட்டவேனே இறைவன், அவனை மனிதர்கள் தங்களுக்கு மொழிக்கு ஏற்றவாறு அழைக்கிறார்கள்..
தமிழில் - இறைவன்
ஆங்கிலத்தில் - GOD

ஹிந்தியில் - பகவான்
அரபியில் - அல்லாஹ்
என்று அழைக்கிறார்கள். எனவே நாம் இவ்வுலகிலும் நாளை மறு உலகிலும் வெற்றி பெற வேண்டுமென்றால் அந்த ஒரே இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். அப்படி வணங்குபவர்கள் தான் நம்பிக்கையாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.
ஆக நன்கு சிந்தியுங்கள் உண்மையை உணருங்கள், நேர்வழி அடைய வாழ்த்துகிறேன்!
உங்கள் அனைவருக்கும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமு உண்டாக பிரார்த்திக்கிறேன்!
source: http://tntjkuma

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.