பட்டானி ராசிக் காணாமல் போய் ஒன்றரை ஆண்டுகள்........ | ||||||||||||
இலங்கையில் கடந்த வருட முற்பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போன புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான பட்டானி ராசிக் என்பவரது சடலம் என நம்பப்படும் சடலமொன்று மட்டக்களப்பு ஓட்டமாவடி காவத்தைமுனையில் பொலிசாரால் இன்று வியாழக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. 55 வயதான இவர், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 11 ம் திகதி தொழில் நிமித்தம் புத்தளத்திலிருந்து பொலன்னறுவைக்கு சென்றிருந்ததாகவும், அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை என்றும் உறவினர்களினால் பொலிசில் புகார் செய்யப்பட்டிருந்தது. மர்மமான முறையில் இவர் காணாமல் போன சம்பவம் புத்தளம் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இவரை கண்டு பிடித்து தருமாறு கோரி அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வந்தன. சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரனையின் போது புத்தளம் வாசியொருவரும் காவத்தமுனை வாசியொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரிலேயே கட்டி முடிக்கப்பாடாதிருந்த வீடொன்றிற்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட்ட வாழைச்சேனை நீதிபதி ஏ.எம்.எம். ரியால், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு தெரிவித்துள்ளார். நன்றி B,B.C |
Thursday, July 28, 2011
ஓட்டமாவடியில் மீட்கப்பட்ட சடலம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.