Friday, July 29, 2011

முஹாஜிரீன்களே நிலைதடுமாறாதீர்கள்.!

 நாங்கள் முஸ்லிம்களென வாய்பிளக்க பீத்திக்கொள்ளும் நாம் எமது தலைவர் றஸூலேகரீம் முஹம்மது நபி(ஸல்)  அவர்களும்,அந்த ஸஹாபாத் தோழர்களும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்றத் சென்றார்கள் மக்கத்து முஹாஜிரீன்களை மதீனத்து அன்ஸாரிகள் அரைவணைத்தனர்.வெறும் கையுடன் வந்தவர்களுக்கு தம்மிடமுள்ளவற்றில் அரைவாசிக்கும் அதிகஅளவில் கொடுத்துதவினார்கள்.
சில அன்ஸாரிகள் தமது மனைவியரில் ஒருவரை தலாக்(விவாகரத்து)செய்து முஹாஜிரீன்களுக்கு மனைவியாக்கிக் கொடுத்ததையும், தமது வீட்டில்   அரைப்பகுதியையும்,விளைச்சல் நிலங்களில் ஒரு பகுதியை அவர்களின் தேவைக்காக கொடுத்ததையும் வரலாற்றில் படித்துள்ளோம்.மக்காவிலிருந்து மதீனாவிற்குச் சென்ற முஹாஜிரீன்கள் (அகதிகள்)மதீனத்து மக்களின் மனங்களை வென்றெடுத்தது மட்டுமல்லாது மக்கத்து மக்களின் மனங்களையும் பிற்காலத்தில் வென்றெடுத்தததையும் நினைவு படுத்துப்பார்க்க வேண்டும்.மனிதன் சிந்தித்துப்பார்க்கவேண்டிய வனாதலால்  அவனுக்கு ஓறறிவு அதிகமாக கொடுத்துப்படைக்கப் பட்டுள்ளான்.நமது நபியையும்,அவரது தோழர்களையும் படைத்த அல்லாஹ் வினால் அவர்களை மக்காவில் வைத்து பாதுகாக்க முடியாதவனா? இல்லை. அப்படியாயின் மதீனாவிற்கு ஏன்? அனுப்பினான். மனிதப்பிணைப்புகளை ஏற்படுத்தி,ஏகத்துவத்தை நிலைநாட்டவும் ,எதிர் காலத்தில் ஹிஜ்றத் என்றால் அதை நமது சமூகம் ஏளனமாகப்பார்காதவாறும்.ஹிஜ்றத்செய்பவர்களை கண்ணியவான்களாக இஸ்லாமியன்  மதிக்க வேண்டியதையும் கற்றுக் கொடுத்தான்.அதை புத்தளத்து முஸ்லிம்கள்(அன்ஸாரிகள்)நிரூபித்துள்ளனர்.
        ஏகத்துவவாதிகள் என்ற ஒரே காரணத்தினால்(முஸ்லிம்)1990ம் ஆண்டுவட மாகாணத்திலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட நாம் புத்தளத்தில் வாழும் எமது இனத்தவரை(முஸ்லிம்களை) நாடி வந்தபோது  அன்றை சஹாப்பாக்கள் போன்று வெறும் கையுடன்(இன்றைய பாசையில் சொப்பின் பேக்குடன்)வந்த போது  எம்மை மனதார வரவேற்று  அவர்களது குழந்தைகளின் கல்வியைக்கூட பாராது பாடசாலைகளையும் மூடி எம்மை அங்கு தஙடகவைத்து உணவு,மருத்துவம்,உடைகள போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றியதை நினைவு படுத்திப்பாருங்கள். முஸ்லிம் களாகிய நாம் என்ன மலக்குகளா? எல்லோரும் மனிதர்களே!தவறு செய்யக் கூடியவர்களே.அதிபாதகமான பாவங்களையும் தெரிந்தும்,தெரியாமலும் செய்து விட்டு நாம் அல்லாஹ் அவற்றை மன்னிப்பானென எதிர் பார்க்கின்றோம். ஆனால் சகோதர முஸ்லிம் ஒருவரை மன்னிக்க தயாரில்லை.ஏன் இந்த நிலை.வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் எம்மை வரவேற்ற சமூகத்தினரை இறப்புவரையல்ல,எமது எதிர்காலச் சமூகமும் மறக்காத வகையில் குழந்தைகளுக்கு நற்போதனை செய்திருக்க வேண்டும்,எனியும் செய்ய வேண்டும்.இதைகீழ்வரும் நபிமொழி வலுப்படுத்துகிறது.
 ஸஹீஹூல் புஹாரி-17. 'ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
1990ம் ஆண்டும் அதனைப்பிந்திய சில காலங்களிளும் நவீன  அன்ஸாரிக ளுக்கும் .முஹாஜிரீன்களுக்கும் இடையில் நிலைவிய அன்பும், பிணைப்பும் பிற்காலத்தில் இல்லாமல் போனமைக்கு  முக்கிய காரணமாக அமைந்தவர்கள் யார்?அல்லது எது? என்பதை நீங்கள் அறியாதவர்களில்லை. இவர்களின் பசப்பு வார்த்தைகளினாலும்,அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் ஏமாந்தும், செல்வங்களுக்காக மதிமயங்கியும் இன்று  பல கூட்டங்களாகப் பிரிந்த போனதை எண்ணி இனிக்கவலைப்படுவதில் நன்மையேதும் 
 கிடைக்கப்போவதில்லை.
ஸஹீஹூல் புஹாரி 3795. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நித்தியமான) வாழ்க்கை இல்லை; அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிரந்தர மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக" என்று (பாடியபடி) சொன்னார்கள்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 'அன்சாரிகளுக்கு(ம் முஹாஜிர்களுக்கும்) நீ மன்னிப்பு அளிப்பாயாக" என்று பாடியபடி கூறினார்கள் என உள்ளது.
Volume :4 Book :63
ஆக மேற் கூறிய நபிமொழியை கவனத்தில் கொண்டுசெயற்பட வேண்டுமென முஸ்லிம் அகதி விரும்புகின்றான். 

குறிப்பு்- முதன்மை(1987.ஜூலையில் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் அகதிகள் புத்தளம் வருகை இடம் பெற்றது.) அன்ஸாரி பட்டாணி றாஸிக்(கிராமசேவையாளர்)குடும்பத்தாரின் துக்கத்தில் முஸ்லிம் அகதியும் பங்காளியாகிறது.மன்னிக்ககவும்,  தண்டிக்கவும் அல்லாஹ் போதுமானவன்.மேலும் யாவற்றையும் அறிந்தவனும் நீதி செலுத்துபவனும் அவனேயாகும்.. அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.