Saturday, February 18, 2012

றஹ்மத்புரத்தில் மீலாதுன்நபி விழா


மேற்படி விழா புத்தளம் மாவட்டத்திலுள்ள முந்தல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்வரும் றஹ்மத்புரம் (1990ம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் களுக்காக 1995ம் ஆண்டு மர்ஹூம் அமைச்சர் அஸ்ரப் அவர்களின் முயற்சி யினால் உருவாக்கப்பட்ட முதலாவது கிராமம்) என்னும் கிராமத் திலுள்ள மஸ்ஜிதுர் றஹ்மான்பள்ளிவாசல் நிர்வாகத்தில் கீழ் இயங்கும் மதரஸதுர் றஹ்மான் மாணவர்களால் மதரஸா அதிபர் மௌலவி ஜே.ஹபீல்தீன் அவர் களின் வழிகாட்டலின் கீழ் ஜமாஅத்தார்களின் அனுசரனை யுடன் இன்று (2011.02.18)நடை பெற்றது
நிழ்வுகள்பள்ளிவாசல் நிர்வாக சபையின் பொருளாளர்  ஆசிரியர் என்.எம். நஸ்ரின் அவர்களின் தலைமையின் நடைபெற்றது.சிறிய கிராமமாவிருந்த போதிலும் மதரஸா மாணவர்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் அனைவரின் பாராட்டைப் பெற்றது.சிறப்பு அதிதிகளாக கொத்தாந்தீவு ஜூம்ஆப்பள்ளி வாசல்பேஸ்இமாம் மற்றும் அப்பள்ளிவாசல் பரிபாலனசபைத் தலைவர் அல்ஹாஜ் அன்ஸார் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
விஷேச சொற்பொழிவாளராக  ஏறாவூரைச் சேர்ந்த மௌலவி அல்ஹாஜ் பாறு-க் அவர்கள் குழந்தை வளர்ப்புஎன்ற தலைப்பில் நீண்ட சிறப்புரை ஆற்றினார்.உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அல்லாஹ்வை ஏற்றவனாகவும்,அவனது கட்டளைக்கு பணிந்து கட்டுப்பட்டு நடப்பதாகவும் என்ற உறுதிப்பாட்டுடனேயே பிறக்கின்றான்.ஆனால் அவனது பெற்றோரே அவனை யகூதியாகவும்,நெருப்பு மற்றும் சிலை வணங்கிகளாகவும், இறைவனின் ஏனைய படைப்பினங்களை வணங்குபவர்களாகவும், திருடர் களாகவும்,போதைப்பிரியர்களாகவும்,கொலைகாரர்களாகவும்,மோசடிக் கார்ர்களாகவும் மாறுவதற்கு காரணமாகிவிடுகின்றனர்.சிலருக்கு இரண்டு இரண்டாகவும்,சிலருக்கு ஒவ்வொன்றாகவும், குழந்தைகளைக் கொடுக்கும் அல்லாஹ் சிலருக்கு அப்பாக்கியத்தை கொடுப்பதுமில்லை.அதற்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன்.
தாய்மாரே உங்களுக்கு அல்லாஹ் வழங்கிய குழந்தை செல்வங்களை உங்களுக்கு அதிகம் நேசத்திற்குரிய எமது றஸூலே கரீம் முஹமது நபி ஸல்லல்லாஹூ அலைவஸல்லம் அவர்களின் நேசத்திற்கு உரியவராக வளர்க்க வேண்டும்.அப்போதுதான் அக்குழந்தை சுவர்க்கம் செல்ல வாய்ப்பு ஏற்படுவதுடன் நீங்களும் நரகத்தை விட்டும் பாதுகாக்கப்படுவீர்கள். (இது அவரது உரையின் சிறு  தொகுப்பு மட்டும்)
விஷேஷ அதிதியாக வருகை தந்திருந்த  முந்தல் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் ஏ.சி.எம்.நபீல் அவர்கள் தனது கவனயீர்ப்பு உரையில் சமூகத்தி  லுள்ளவர்கள் எவரும் சும்மா தனது கடமைகளையும்,குடும்ப நலன்களையும் பார்த்துக் கொண்டிருந்து விட முடியாது.இஸ்லாம் அப்படிக் கூறவுமில்லை. ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் கொடுத்த கல்வி,வீரம்,ஆற்றல், நிர்வாகத்திறன்,செல்வம் போன்றவற்றை சமூகத்தின முன்னேற்றத்திற்காக பயன்படுத்த வேண்டும்.ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டால் அக்கிராமத்திற்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய அளவு வளங்களை அக்கிராமத்திலுள்ளவர்களிமே அல்லாஹ் வழங்கியிருப்பான்.ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையான வளங் களையோ. அல்லது செல்வங்களையோ கொடுத்திருக்கலாம். அது அவருக்கு மட்டும வழங்கப்படவில்லை.உதாரணமாக இன்று இயந்திரங்களுக்குத் தேவையான எரிபொருள் ஒரு சில நாடுகளுக்கு மட்டும் அல்லாஹ் கொடையாக கொடுத்துள்ளான்.ஆனால் கசல நாடுகளுக்கும் தேவையான எரிபொருட்களை அந்நாடுகள் வழங்குகின்றன.இதையே அல்லாஹ் விரும்புகின்றான்.இஸ்லாம் மார்க்கத்தின் முக்கிய கடமைகளுக்காக நேரம் காலத்தை தந்துள்ளான். ஆனால் ஸக்காத்.ஸதகா போன்ற கடமைகளுக்காக நேரம்,காலம் இல்லை. எப்போதும் வழங்கலாம்.ஆனாலும் ஸக்காத்தை யார்.யார் பெறத்தகுதியுடையவர்களென்று வரையறை செய்யப்பட்டுள்ளது. இன்று நாம் விரும்பிய படி அக்கடமையை சரிவரச் செய்யாமலிருப்பதை காணமுடிகிறது.
இதையுணர்ந்த புத்தி ஜீவிகள் கிராம ரீதியாகவும்,பிரதேச ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் “ஸக்காத் நிதியங்களை உருவாக்கி வருகின்றனர். உதாரணமாக அக்குரனையில்பெரிய அளவில் அந்நிதி சேருவதாக அங்கு சென்ற போது அந்நிர்வாகத்தினர் தம்மிடம் கூறியதாகவும் அதுபோன்று பன்னவ,ஆலங்குடா,கொஸ்வத்தை,விருதோடை,மற்றும் புத்தளத்தையும் உதாரணம் காட்டி விளக்கினார்.இதுபோன்று இங்கும் ஸக்காத் நிதியத்தை உருவாக்க முயலவேண்டமென வலியுறுத்தியதுடன்.தேவையேற்படின் அதற்காக ஆலோசனைகளையும்,வழிகாட்டுதல்களையும் எம்மால் செய்து தர முடியும் எனவும் குறிப்பிட்டார். பின்னர்  மாணவ,மாணவியர்களுக்கு பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுஇறுதியாக மௌலவி ஜே.ஹபீழ்தீன் அவர்களின் நன்றியுரைஞடன் விழா நிறைவானது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.