கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 மே, 2014 - 09:34 ஜிஎம்டி
இலங்கையில் பௌத்த கடும்போக்கு
சக்திகளிடமிருந்து தமது சமூகத்தைப் பாதுகாக்குமாறு முஸ்லிம் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதும்
கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் பௌத்த பிக்குகளால் நடத்தப்பட்ட மதவாதத்
தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை வந்துள்ளது.இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இருப்பவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை தவறியுள்ளதாக சமூக நல்லுறவை வலியுறுத்துகின்ற பௌத்த பிக்குகளும்
கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாட்டில் நடக்கும் மத வெறுப்புணர்வுக் குற்றங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக தனியான காவல்துறை பிரிவு ஒன்றை இலங்கை அரசாங்கம் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - BBC தமிழ் செய்திச் வை
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.