Tuesday, December 22, 2015

முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு முன்பாகவுள்ள சாகுல் கமீது,சலீம் என்பவரது அரச காணி சார்பான விசாரணை விரைவில் தொடரலாம்.

முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப் பற்று  பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள ஹிஜ்ராபுரம் என்னும் கிராம த்திலுள்ள அரசகாணி தொடர்பாக, (முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு முன்னாலுள்ள அரசகாணி யின் உரிமையாளர் 2001ம் ஆண்டு மரணமாகியுள்ளார்.அவரது மகன் இப் போதைய உரிமையாளராவார்.) குறித்த ஒரு ஏக்கர் காணி முறை கேடாக 1007.03.17ம் திகதி மாற்று மத சகோதரர் ஒருவருக்கு விற்பனை செய்யப் பட்டதாக அறிய வருகிறது. எனவே  தற்போதைய காணி உரிமையாளர் 2014.09.10ம் திகதி கரைதுறைப் பற்று பிரதேச செயலாளரின் நடவடிக்கைக்காக முறையீடு செய்துள்ளார்.. மீண்டும் 2015.05.25ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட உதவி காணி ஆயைாளர் உட்பட காணி சார்பான அதிகாரிகள்.அமைச்சர்  மற்றும் மாண்புமிகு ஜனாதிபதி ஆகியோர்களின் கவனத்திற்கு கொண்டவரப்பட்டது.


 அதன் பயனாக காணி அமைச்சர்,காணி அமைச்சின் செயலாளர் மற்றும் காணி ஆணையாளர் ஜெனரல்  மற்றும்  அதிகாரிகளின் நடவடிக்கையின் பெயரில்
 கடந்த 2015.06.26மற்றும் 2015.07.03ம் ஆகிய திகதிகளில் காணி ஆணையாளர் நாயக அலுவலக அதிகாரிகளினால் முல்லைத்தீவு மாவட்ட உதவி காணி ஆணையாளர்  அவர்களுக்கு  விசாரணை சார்பான பணிப்புரை வழங்கப் பட்டது.
ஆயினும் அதற்கேற்ப நடவடிக்கை ஏதும் மேற் கொள்ளப்படவில்லை. எனவே கடந்த 2015.12.17ம் திகதி  முல்லைத்தீவு மாவட்ட காணி உதவி ஆணையாளர் அவர்களை  அவரது அலுவலகத்தில் சந்தித்து விளக்கமளிக்கப்பட்டது.

விடயத்தை கவனத்தில் கொண்ட முல்லைத்தீவு மாவட்ட  உதவி காணி ஆணையாளர்  அவர்கள் கூடிய விரைவில் விசாரணைகளை மேற் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.