முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள ஹிஜ்ராபுரம் சாகுல் சலீம் என்பவரது ஒரு ஏக்கர் காணி யுத்த காலத்தில் முறை கேடாக விற்கப்பட்டுள்ளது.
இதற்காக 2013-1 ம் இலக்க காணி ஆணையாளர் நாயகத்தின் சுற்று நிருபத்திற்கமைவாக முறையீட்டு இணைப்பு 01 சலீம் றிபாஸ் என்பவரினால் 2014.09.19ம் திகதி முல்லைத்தீவு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. பின்னர் 2014.09.25ம் திகதி காணி சார்பான முழுமையான விபரம் தபால் மூலம் அனுப்பட்டது.ஆயினும் சரியான தீர்வு கிடைக்காமையினாலும்,பக்க சார்பான நடவடிக்கைகள் அங்கு நடந்த காரணத்தினாலும் குறித்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட உதவி காணியாளருக்கு முறையீடு (2015.05.25ம் திகத எழுத்து மூலமாக செய்யப்பட்டது.அதன் பிரதிகள் 1. பிரதேச செயலாளர் ,முல்லைத்தீவு. 2. பொறுப்பதிகாரி,(புலனாய்வுப் பிரிவு) மாவட்ட பொலிஸ் அலவலகம்,முல்லைத்தீவு. 3. பணிப்பாளர் நாயகம் (புலனாய்வுப்பிரிவு) உள்ளுராட்சி மற்றும் ஜனநாயக ஆட்சி அமைச்சு.4. காணி ஆணையாளர் நாயகம். 5. காணி அமைச்சு. 6.கௌரவ ஜனாதிபதி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. முல்லைத்தீவு பொலிஸ் நடவடிக்கை மேற்கொண்டது. 2015.06.26ம் திகதி மற்றும் 2015.08.03ம் திகதிகளில் முல்லைத்தீவு உதவி காணி ஆணையாளர் அவர்கள் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டிய பணிப்புரைக் கடிதத்தினை காணி ஆணையாளர் நாயகம்அனுப்பி இருந்தார்.அக் கடிதத்தின் பிரதிகள் சலீம் றிபாஸ் என்பவரின் பிரதிநிதியான எனக்கு கிடைத்தது. ஆனால் முல்லைத்தீவு காணி ஆணையாளர் கடந்த ஆறு மாதங்களாக அமைதி காத்து வந்துள்ளார்.கடந்த 2015.12.17ம் திகதி நான் அவரை அவரது அலவலகத்தில் (முல்லைத்தீவு மாவட்டச் செயலகம்) சந்தித்து கலந்தாலோசித்து எனது அடுத்த நடவடிக்கை பற்றியும் கூறினேன். உடன் நடவடிக்கை மேற் கொள்வதாகவும் ஊறுதியளித்தார்.அதற்கமைவாக கடந்த 2015.12.28ம் திகதி விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.காணியை விலைக்கு வாங்கிய நபரும் (தமிழ் சகோதரர்), நானும் சமூகமளித்தோம். விசாரணை முடிவில் அரச உத்தரவுப் பத்திரமுடைய காணி வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது. மேலும் விற்பணை சார்பான ஒப்பந்தம் ஒன்றை சட்டத்தரணி எழுதவும் முடியாது.மேலும் குறித்த காணி விற்பனவு ஒப்பந்தம் 1007.03.17ம் திகதி எழுதியுள்ளதாகவும்,விற்றவர்களும்,வாங்கியவர்களும் 2007.11.17ம் திகதி ஒப்பமிட்டுள்ளதாகவும்,2015.03.17ம் திகதி அதனை சட்டத் தரணி உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.இதுபோன்ற பல முறைகேடுகள் காணப்படுவதால் இதனை பொலிஸ் உளவுப் பிரிவினராலேயே விசாரணை செய்ய முடியுமெனனவும்.ஆன காரணத்தினால் என்னை நீதிமன்ற உதவியை (வழக்கு) நாடும்படி அறிவுரை வழங்கினார்.மேலும் தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை வரும் 1ம் திகதிக்கு முன்னர் காணி ஆணையாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு அனுப்புவதாகவும் கூறினார்.
இத்துடன் காணி அமைச்சரின் கடிதமும்,அமைச்சின் செயலாளரின் கடிதமும் காணி ஆணையாளர் நாயகத்தின் இரு கடிதங்களும் பதிவேற்றப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.