skip to main |
skip to sidebar
முல்லைத்தீவு முஸ்லிம்களின் உரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல் அமைதியானது.
முல்லைத்தீவு நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியரும், அரசியல் பிரமுகருமான அன்ரனி ஜெகநாதன் அவர்கள் எதிர்பாராத (மாரடைப்பால் ஏற்பட்ட )விபத்துக் காரணமாக இயற்கை எய்தார். இறக்கும் போது வடமாகாணசபை உறுப்பினராகவும், அச்சபையின் பிரதி தவிசாளராகவும் பணியாற்றினார்.தனது பதவிக் காலத்தில் வடமாகாண முஸ்லிம்களுக்காகவும், குறிப்பாக முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சார்பாகவும்.அவர்களின் உரிமைகளை சரியாக வழங்க வேண்டுமென துணிச்சலாக விவாதங்களை மேற் கொண்டவர். முல்லைத்தீவு முஸ்லிம் களுக்கு அரசு காணி வழங்குவதற்குப் பின் நின்ற சமயத்திலும், தனது குடும்பப் பாம்பரிய காணியை பலரின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நியாயமான விலையில் கொடுத்து,முஸ்லிம்கள் அதில் குடியமர வழி சமைத்தவர்.
யுத்த காலத்தில் முள்ளியவளையில் புலிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் முஸ்லிம்களின் காணிகளை என்ன விலையாவது கொடுத்து வாங்கும் படி புலிகள் ஆலோசனை கூறிய வேளையில் துணிந்த குரலில் முஸ்லிம்களின் காணிகளை யாரும் விலைக்கு வாங்கவோ,அடாத்தாக ஆட்சி செய்யவோ கூடாது மீண்டும் "முஸ்லிம்கள் இங்கு வர வேண்டும் . "என்று குரல் கொடுத்த பெருமகன்". அவரது இழப்பினால் துயருறும் அந்நாரின் குடும்பத்தினருக்கு "முஸ்லிம் அகதியின்" ஆழ்ந்த துக்கத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.