Wednesday, December 28, 2016

வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு முஸ்லிம்கள் ஒத்­து­ழைக்­க­வேண்டும் பகி­ரங்க அழைப்பு விடுக்­கி­றது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு (எருவில் நிருபர்)




வடக்கு,கிழக்கு இணைப்­புக்கு முஸ் லிம் மக்கள் உணர்­வோடும் இணக்­கத்­தோடும் ஒன்று சேர்ந்து ஒத்­து­ழைக்க வேண்டும் என்று பகி­ரங்­க­மாக அழைப்பு விடுக்­கின்றேன் என்று தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா கூறினார்.

வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்­தினை நாங் கள் இப்­பொ­ழுது கோர­வில்லை. மாறாக பூரண அதி­கா­ரத்தை கொண்­டி­ருக்கும் சமஷ்டி முறை­யி­லான தீர்­வி­னையே கேட்டு நிற்­கின்றோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கல்­முனை கார்மேல் பற்­றிமா கல்­லூ­ரியின் கிளனி மண்­டபத்தில் நேற்று நடை­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் வடக்கு கிழக்கு இணைப்பு என்­பது இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தின் மூலம் கொண்­டு­வ­ரப்­பட்டு 18 ஆண்­டுகள் நடை மு­றையில் இருந்­தது.

முஸ்­லிம்­களும், தமி­ழர்­களும் இணைந்த வடக்கு,கிழக்கு தாய­கத்தில் ஒற்­று­மை­யாக வாழவேண்டும் என்­ப­துதான் எமது குறிக்­கோ­ளாகும்.

வடக்கின் பலம் கிழக்கு மக்­க­ளுக்கு கொடுக்­கப்­பட வேண்டும் என்று அன்று தந்தை செல்வா சொன்னார். அத­னையே நாங்­களும் எதிர்­பார்த்து நிற்­கின்றோம்.

வடக்கு கிழக்கு இணைப்­பிற்கு முஸ்லிம் மக்கள் உணர்­வோடும் இணக்­கத்­தோடும் ஒன்று சேர்ந்து ஒத்­து­ழைத்து வர­வேண்டும் என்று இன்றும் பகி­ரங்­க­மாக அழைப்பு விடுக்­கின்றேன். நாங்கள் அனை­வரும் சேர்ந்து பேசுவோம். சென்ற முறை மாகா­ண­சபை தேர்­தலில் முஸ்லிம் மக்கள் எங்­க­ளுக்கு தேவை என்­ப­தற்­காக முத­ல­மைச்சு பத­வி­யி­னையும் கொடுத்தோம்.

ஆனால் முஸ்லிம் காங்­கிரஸ் எங்­க­ளுடன் ஒத்­து­ழைக்­க­வில்லை என்­பது ஒரு துர­திஷ்­ட­வ­ச­மான உண்மை.

நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி ஜனா­தி­ப­தி­யிடம் கூறினோம். அதற்­கா­க­வேண்டி முஸ்­லிம்­க­ளுடன் பேசுங்கள் என்று கூட கூறினோம் அதற்­காக நாங்கள் பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்­டிய சூழ­லுக்குள் இருக்­கின்றோம்.

சமஷ்டி தத்­து­வத்தின் அடிப்­ப­டை­யிலே அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்டு இணைந்த வடக்கு கிழக்கில் ஆட்சி அதி­கா­ரத்­தினை நாங்­களே பயன்­ப­டுத்­து­கின்ற அள­விற்கு தீர்வு கிடைக்க வேண்டும்.

நம்ப நட நம்பி நட­வாதே என்று தந்தை செல்வா அன்று கூறினார். அதற்கு இணங்­கவே விடு­த­லைப்­பு­லி­களும், ஜன­நா­யக ரீதி­யாக செயற்­பட்ட தமி­ழ­ர­சுக்­கட்­சியும், தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பும், தமிழர் விடு­தலை கூட்­டணி என அனைத்தும் புரிந்­து­ணர்­வுடன் ஒன்று சேர்ந்து செயற்­பட்­டன.

இதன் நிமித்தம் நாங்கள் சர்­வ­தே­சத்தில் மிகப்­பெரும் பலம் மிக்க சக்­தி­யாக இருந்து செயற்­பட்டோம்.

மிகவும் மேச­மான கொள்கை வேறு­பா­டு­களைக் கொண்ட ஐக்­கி­ய­தே­சியக் கட்­சியும், சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஒன்று சேர்ந்து இருப்­ப­துடன் அவற்­றுடன் எமது கட்­சி­யையும் சேர்த்தால் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யாக செயற்­பட முடியும். அதற்­காக அந்த இரண்டு கட்­சி­களும் கூறு­ப­வற்றை நாங்கள் கேட்­க­வேண்டும் என்­பது அர்த்­த­மில்லை. ஆனால் மக்கள் தந்த ஆணையின் படி ஒரு தீர்வை நோக்­கியே சென்­று­கொண்­டி­ருக்­கின்றோம். அந்த தீர்­வினை சிங்­கள தேசத்­த­லை­வர்கள் ஏற்­றுக்­கொள்­ளா­விட்டால் நாங்கள் அதனை ஏற்­றுக்­கொள்ள மாட்டோம்.

மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சியின் போது அவர் அடைத்து வைத்­தி­ருந்த நிலம், ஊழல், மோச­டிகள், குடும்ப ஆட்சி என்­ப­வற்றை மூடி மறைப்­ப­தற்­காக அவர் எடுக்கும் முயற்­சி­க­ளுக்குள் நாங்கள் சிக்­கிக்­கொள்­ளக்­கூ­டாது என்­ப­துதான் எமது தற்­போ­தைய நிலைப்­பாடு. இந்த சந்­தர்ப்­பத்­தினை நாங்கள் இழந்து விடக்­கூ­டாது.

நீங்கள் ஆயு­த­மேந்­திய கால­கட்­டங்­களில் இர­ர­ஜ­தந்­திர ரீதி­யான வெற்­றி­களை அடை­ய­வில்லை ஆனால் தற்­போது அதனை அடைந்­தி­ருக்­கின்­றீர்கள் என்று உலக நாடுகள் கூறு­கின்­றன. அதற்­கா­க­வேண்டி நாங்கள் பொறுமை காக்­க­வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்றோம்.

விடு­த­லைப்­பு­லி­களின் போராட்ட காலங்­களில் இருந்த கல்­வியின் உயர்ந்த நிலை தற்­போது இல்லை. தற்­போ­தைய கால­கட்­டத்தில் கல்­வியின் நிலையில் வீழ்ச்சி கண்­டி­ருப்­ப­தனை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து 65 வீத­மா­ன­வர்கள் கலைப்­பட்­ட­தா­ரி­க­ளா­கத்தான் வெளியே வரு­கின்­றார்கள். அதிலும் கலைப்­பி­ரி­விலே உள்ள பாடங்­களை கற்­ப­வர்­க­ளது தொகை அதிகம். குறிப்­பாக வடக்கு கிழக்கில் உள்ள மாண­வர்கள் போராட்­டத்­தினால் எமது தேசத்தில் கல்வி அழிக்­கப்­பட்­ட­துடன் கல்­வியில் வீழ்ச்சி நிலையும் காணப்­ப­டு­கின்­றது. அன்று வீதிகள் மிகவும் மோச­மாக இருந்­த­கா­லத்தில் பாட­சா­லைகள் அரை­கு­றை­யாக இடி­பா­டு­க­ளுடன் கதிரை, மேசைகள், கரும்­ப­லகை இல்­லாமல், புத்­தகம், சீருடை இல்­லாமல் இருந்த காலங்­களை நான் நேர­டி­யா­கவே கண்­டி­ருக்­கின்றேன்.

ஆனால் இந்த நாட்­டிலே யுத்தம் நடை­பெற்ற காலத்தில் தமிழ் மாண­வர்­க­ளது கல்­வியில் வீழ்ச்சி ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. மிகப்­பெ­ரும்­பாலும் யாழ்ப்­பாணம் கல்­வியில் உயர்ந்­தது என்று பாராட்­டி­னார்கள். ஆனால் போர் முடிந்­த­தற்கு பின்பு ஏன் இந்த கல்வி வீழ்ச்சி கண்­டி­ருக்­கின்­றது என்று நான் ஆராய்ந்து பார்த்­தி­ருக்­கின்றேன்.

65 வீத­மாக இருக்­கின்ற கலைப்­பி­ரிவு மாண­வர்கள் ஒவ்­வொரு ஆண்டும் தெரிவு செய்­யப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்கள் அர­சியல் நெருக்­கடி கார­ண­மா­கவும், படிக்­காத பாடத்­து­றைக்கு அப்­பாலும் வேலை­களை பெறு­வார்கள். சிலர் பெறா­மலும் போவார்கள். ஒரு காலத்தில் மது பாவ­னையில் மிகக்­கு­றைந்த மாவட்­ட­மாக இருந்­தது யாழ்ப்­பாணம். ஆனால் இம்­முறை வரவு செல­வுத்­திட்­டத்தில் யாழ் மாவட்டம் இன்று அதி­க­ள­வான வரி கிடைக்கும் மாவட்டமாக உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்று யாழ் மாவட்டத்தினை பொறுத்தவரையில் கேரளா கஞ்சா, போதை வஸ்த்து என்பன தினமும் கிலோக்கணக்கில் கைப்பெற்றப்படுகின்றன. ஆனால் அதிகமானவை எங்கே போகின்றன யார் அதனை கைப்பற்றுகின்றார்கள் என்று தெரியவில்லை. இப்படியான நிலைதான் இன்று இருந்து கொண்டிருக்கின்றது.

எதிர்காலத்தில் எமது மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியில் கலைத்துறையினை குறைத்து ஏனைய துறைகளில் அதாவது மருத்துவம், பொறியியல், வர்த்தகம் ஆகிய துறைகளில் அதிக நாட்டம் காட்ட வேண்டும் என்றார். (2016.12.27வீரகேசரி நன்றி)
பிரதி - தேசபந்து ,தேசகிர்த்தி,சாமசிறி முஹம்மது சுல்தான் பரீத் (அகில இலங்கை சமாதான நீதவான்)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.