Friday, September 2, 2011

வண. புத்தியாகம சந்திர தேரர் அவர்களுடன் பெருநாள் சந்திப்பு


Sep 2, 2011 in News, Regional News | 1 comment
கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எமது நகரத்தில் இடம் பெற்ற அசம்பாவித சம்பவங்களை தொடர்ந்து ஏற்பட்ட பின்விளைவுகள் சகோதர சமூகத்திற்கு மத்தியில் குறிப்பாக பொலிஸ் திணைக்களம் மற்றும் அரசாங்க துறைகளிலும் முஸ்லிம்களை பற்றிய தப்பபிப்பிராயங்களையும் குரோத போக்கினையும் உருவாக்கிவிட்டுள்ளது.

இந்நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து வருவதுடன் ஊடகங்களும் இச்சந்தர்பத்தினை பயன்படுத்தி  முஸ்லிம் விரோத போக்கினை தூபமிட்டு வளர்பதட்கான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்த சூழ் நிலையினை தொடரவிடாது காலாகாலமாக இப்பிரதேசத்தில் கட்டிக் காக்கப்பட்ட இனங்களுக்கிடையிலான உறவுகள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைபாட்டில் புத்தளம் பெரிய பள்ளி உள்ளிட்ட சமூக அரசியல் தலைமைகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தவகையில் பெருநாள் தினத்தன்று புத்தளம் பிரமுகர்கள் சிலர் வண்ணாத்திவில்லு ஸ்ரீ போதிராமலுவை விகாரையின் பிரதம தேரர், புத்தளம் மாவட்ட சர்வமத செயற்குழு தலைவர் வண. புத்தியாகம சந்திர தேரர் அவர்களை சந்தித்து தமது பெருநாள் சந்தோசங்களை அவருடன் பரிமாரிக்கொண்டதுடன், புத்தளத்தில் இடம்பெற்று விட்ட துயரகரமான சம்பவத்தை இட்டு தமது கவலைகளை தெரிவித்துகொண்டதுடன் இதுதொடர்பில் புத்தளம் மக்கள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் புத்தளம் முஸ்லிம் மக்களும் குறிப்பாக ஊரின் தலைமைத்துவமும் இன்று எதிர்நோக்கியுள்ள சவால்கள் பற்றியும் விளக்கப்பட்டது.
முஸ்லிம்களின் இந்த சந்திப்பினை மனதார வரவேற்ற அவர் புத்தளம் முஸ்லிம்கள் தனது சிங்கள சமூகத்துடன் எவ்வளவு தூரம் நெருங்கி கஷ்ட நஷ்டங்களில் பங்கு வகித்துள்ளார்கள் என்பதை பல உதாரணங்களுடன் ஞாபக படுத்தினார் இன்று புத்தளம் மக்கள் எதிர்நோகியுள்ள பிரச்சனைகளை தீர்த்துவைப்பதில் தன்னால் ஆன அனைத்து முயற்சி களையும் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

நன்றி புத்தளம் ஒன்லைன்.கொம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.