புத்தளம் நகரம் இன நல்லுறவின் சிகரம். அது இன்று ஒரு சிலரின் நடவடிக்கைகளினால் கறைபடிந்து விட்டது. இந்நாட்டில் வெளிவந்த பத்திரிகை செய்திகள், விவரணங்கள் இந்நிகழ்வு தொடர்பிலான பிழையான பதிவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. மனிதாபிமானமற்ற இப்படுகொலை காரணமாக, எல்லா மக்களுடனும் சகவாழ்வுடனும் நட்புறவுடனும் வாழும் புத்தளம் முஸ்லிம் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மிகப் பாரதூரமானதாகும். என்றாலும் நாம் இதற்கான பிரயாசித்தங்களை நிறையவே புரிந்துள்ளோம். வியாபார தளங்களை
அடைத்து வெள்ளை கொடிகளை ஏற்றி எமது கவலைகளை வெளிப்படுத்தினோம். சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக வருடந்தோறும் நடத்தப்படும் பெருநாள் விளையாட்டுப் போட்டிகளைக் கூட நிறுத்திவிட்டு எமது பெருநாள் மகிழ்ச்சியை வணக்க வழிபாடு சார்ந்த விடயங்களுடன் மட்டுப்படுத்திக் கொண்டோம்.இவற்றினை சகோதர சமூக பெரியார்களுக்குமத்தியில் தெரியப்படுத்துவதன் மூலம் புத்தளத்தில் இன நல்லுறவை சிதைந்து விடாது மீண்டும் பாதுகாக்கும் முயற்சிகளை புத்தளம் பெரிய பள்ளி மேற்கொண்டு வருகின்றது. இந்த வகையில் இன்று (04.08.2011) புத்தளம் பெரிய பள்ளி பிரதான நம்பிக்கையாளர் அல்ஹாஜ் முசம்மில், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் உள்ளிட்ட புத்தளம் வாழ் பிரமுகர்கள் சிலர் கருவலகஸ்வெவ பௌத்த பாதுகாப்புச் சபையின் உப தலைவர், டீ.எஸ் சேனாநாயக்க கல்லூரியின் ஒய்வு பெற்ற ஆசிரியர், ஆயுர்வேத வைத்தியர், ஸ்ரீ விஜயராஜ விகாரையின் பிரதம தேரர் வண. தம்பகல மித்தாலன்கார மகாஸ்த்தவீர அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தனர். மிக நீண்ட நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் புத்தளம் பிரதேசத்தில் இனங்களுக்கிடையிலான நல்லுறவை ஏட்படுத்துவதட்கான எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
Eநுனு்றுீ புது்துளுமு்
நன்றி புத்தளம்ஒன்லைன்..கொம்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.