Wednesday, December 31, 2014

புத்தளம் தொகுதி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட ஐ.தே.கட்சி அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து தேர்தல் பிரச்சாரம்.





முல்லைத்தீவு முஸ்லிம்கள் 1987ம்  ஆண்டு இந்திய இராணுவத்தின் வருகை யினால் ஏற்பட்டிருந்த பாதுகாப்பு இன்மை காரணமாக புத்தளத்தை நோக்கி இடம் பெயர்ந்தனர்.அந்த நேரத்தில் புத்தளம் மக்கள் எம்மை வரவேற்று சிறந்த முறையில் உபசரித்தனர். 1988 ம் ஆண்டு பல குடும்பங்கள் மீண்டும் முல்லைத்தீவில் குடியமர்ந்த போதிலும்.அதிகமானவர்கள் புத்தளத்தில் நிலை கொண்டிருந்தனர்.1989ம் ஆண்டு பொதுத்தேர்தலில்  இருமாவட்டங்களிலும் இருந்த முல்லைத்தீவு முஸ்லிம்கள் அத்தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிறஸ் வேட்பாளர் கௌரவ அபூபக்கர் அவர்களை பாராளுமன்றம் செல்ல உறுதுணையாக இருந்து செயற்பட்டனர்.1990ம் ஆண்டு தமிழீழ விடதலைப் புலிகளால் வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நேரத்திலும் முல்லைத்தீவு முஸ்லிம்கள் புத்தளததையே நாடி வந்தனர்.அந்த அளவிற்கு புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் முல்லைத்தீவு முஸ்லிம்கள் மீது நல் லெண்ணம் கொண்டிருந்னர்.
            அத் தொடர்பினை  மேலும் வலுச்சேர்க்கும் வகையில்  இன்று (2014.12.31) புத்தளம் தேர்தல் தொகுதியின்  ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும்,புத்தளம் நகர சபை முன்னாள தலைவருமான ஜனாப் முஹம்மது நஸ்மி அவர்களும், முல்லைத்தீவு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பார் ஜனாப் முஹம்மது றிஸாம் அவர்களும் இணைந்து தமது ஆதரவாளர்கள் சகிதம் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேன அவர்களுக்கு ஆதரவு திரட்டும் முகமாக  புத்தளம் நகரில்  பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போதய படத்தினையே மேலே பார்க்கின்றீர்கள்.
2009ம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு வந்தததின் பின்னர்  முல்லைத்தீவு முஸ்லிம்களில் அதிகமான குடும்பத்தினர் அங்கு மீள் குடியமர்வுக்காக பதிவு செய்துள்ளனர்.ஆயினும் அவர்களுக்கான குடியிருப்பு வசதி வாய்ப்புக்கள் அரச அதிகாரிகளினால் செய்து கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக பெருமளவிலான முல்லைத்தீவு முஸ்லிம்கள் புத்தளத்தில் தொடர்ந்தும் வாழுகின்றனர் இவர்களின் அரச சார்பான தேவைகள் நிறையவே காணப் படுகிறது. இவற்றை நிறைவேற்றும் நல்லெண்ணம் கொண்ட முல்லைத்தீவு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் முஹம்மது றிஸாம் அவர்கள்   ஐக்கிய தேசிய கட்சியின் உயர்பீட அதிகாரிகளுடனும், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும்,புத்தளம் தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாள ருடனும்  பேச்சு வார்தைகளை மேற் கொண்டுள்ளார்.என "முஸ்லிம் அகதி" யிடம் கூறினார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.