Thursday, January 15, 2015

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் அசாதாரண சூழ்நிலையில் முறைகேடாக மாற்று மதத்தினர் கொள்வனவு செய்துள்ளர்.

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் வடமாகாண முஸ்லிம்களுடன் 1990ம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்டது சர்வதேசம் அறிந்த உண்மையாகும். இதன் பின்னரான காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களினால்  முஸ்லிம்களுக்கு சொந்தமான உறுதிக் காணிகளும்,அரச உத்தரவுப் பத்திரமுடைய காணிகளும் மதிப்பீட்டுக்கு குறைவான விலையிலும், மோசடியான முறையிலும் வாங்கியுள்ளனர்.அவர்களின் நினைவு முஸ்லிம் கள் இனி முல்லைத்தீவிற்கு வரமாட்டாரகள் என்று எண்ணமே மேலோங்கி யிருந்தது.அதே போல் சில மூட நம்பிக்கையுடைய முஸ்லிம்களும் காணப் பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு (மாஞ்சோலை) முன்னாலுள்ள கடைத் தொகுதியின் படத்தையே இங்கு காண்கின்றீர்கள். இக்காணி மர்ஹும் அகுமது சாகுல் ஹமீது.அவரது மகன் மர்ஹும் சாகுல் ஹமீது சலீம் ஆகிய இருவருக்கும் அரசினால் வழங்கப்பட்டகாணியாகும்.இதன் காணியின் விஸ்தீரணம் இரண்டு ஏக்கர் ஆகும்.இக்காணியை 1007ம் ஆண்டு மார்ச் மாதம்17ம் திகதி கணுக்கேணி செல்லையா சுபாஸ்கரன் என்பவர் முறைகேடான ஒரு ஒப்பந்த மூலம் வாங்கி இக்கட்டிடத் தொகுயை அமைத்து வருகின்றார்.இதன் மூலம்  பெருமளவிலான பணத்தையும் பெற்றள்ளதாக அறிய முடிகிறது. மர்ஹும் சா.சலிம் இல்லாத நிலையில் அவரது காணி ஒரு ஏக்கரை அவரது சகோதர. சகோதரிகள் மூல்ம் அபகரிக்கப்பட்டுள்ளது. இது சார்பான ஆவணங்கள; ஹிஜ்ராபுரம்,கிராம சேவையாளருக்கு அனுப்பப் பட்டு அதன் பிரதிகள் முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கரை துறைப்பற்று பிரதேசசபை செயலாளர், முல்லைத்தீவு பிரதேச செயலாளர், மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கும் கடந்த 2014.11.24ம் திகதி அனுப்பப்பட்டுள்ளது.
மர்ஹும் சாகுல் ஹமீது  சலீம் அவர்களுடைய மகன் றிபாஸ் என்பவரால் குறித்த காணிக்கான உரிமை கோரும் இனைப்பு 1  என்னும் படிவம் கடந்த 2014.09..18ம் திகதி கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணிப்பிரிவில் ஒப்படைக்கப்ப்ட்டுள்ளது. சலீம் றிபாஸ் அவர்களுக்கு குறித்த காணிப் பகுதினரால் இணைப்பு இரண்டு வழங்கப்பட்டுள்ளது. [mu/mpp/hij/ii-150]ஆயினும் குறித்த காணியில் கட்டிடப் பணி தொடர்ந்தும் நடைபெறுகிறது. முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் அதிகம் காணப்படுகிறது. புதிய அரசிடம் இவற்றை முன் கொண்டு செல்ல முல்லை முஸ்லிம்கள் பிரதாணிகள் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென சமபந்தப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் எதிர் பார்கின்றனர்











பக்கத்தில் ஹிஜ்ராபுரம் ஜும்ஆப் பள்ளிவாசல் காணப்படுகிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.