Thursday, January 22, 2015

சொல்லுபவரை பார்க்காதீர்கள்.சொன்னதைப் பாருங்கள்.


மாபெரும் தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களும்.அவர்களுடைய தோழர்களும் மக்காவிலிருந்து (ஹிஜ்றத்) விரட்டப் பட்டு  மதீனாவில்  அம் மக்களுடன் நல்ல முறையில் வாழ்ந்து மீண்டும் மக்காவைக் கைப்பற்றியது சார்பாக கூறியது எனக்குப் பிடித்திருந்தது.நான் அதற்கு முன்னரேயே இந்த அறிவித்தலை பத்திரிகைகளுக்கு கொடுத்திருந்தேன். இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரபி மதரஸா அமைப்பதுவும் எனது நோக்கமாக தெரியப்படுத்தியிருந்தேன்.இதையும் எமது மாநபியின் ஹிஜ்ரத்தையும் அதைத்தொடர்ந்து  மக்காவை மீண்டும் கைப்பற்றிய தையும் எண்ணிப்பார்த்து நாமும் இன்ஷா அள்ளாஹ் மீண்டும் முல்லைத்தீவு செல்வோம் என் நம்பினேன். அன்று இதைப் பார்த்தவர்கள் சிலர் என்னை முட்டாளாகப் பார்த்து நகைத்தவர்களுமுண்டு. முல்லைத்தீவில் நம்மவர் காணிகளை விற்க முற்பட்ட போது நானும்,றிஸ்னி ஆசியர் அவர்களும் தனித்தனியாக காணி விற்க வேண்டாமெனத் தடுத்து பிரச்சாரம் செய்தோம்.நான் புலிகளுக்கு எழுதிய கடிதத்தில்  எமது சமூகத்தினர் காணி விற்பனையை தடுக்க முடியாமலுள்ளது.எனவே உங்கள் சமூகத்தினரை எமது சமூகத்தாரின் காணிகளை வாங்குவதை தடை செய்யும் படி வேண்டினேன்.புலிகளின் நிர்வாகத்தறை முல்லை மாவட்ட அதிகாரி முகுந்தன் என்னை புதுக்குடியிருப்பிற்கு வரும்படி பதில் கடிதம் அனுப்பபியதறகமைவாக நான் சென்ற போது வட்டுவால் பாலத்திற்கு அப்பால் அங்கிருந்த புலிபொலிஸ் அனுமதிக்கவில்லை.அவ்விடத்திலேயே கடிதத்தைக் கிழித்து வீசிவிட்டு அந்த பொலிசையும் ஏசி விட்டுத் திரும்பினேன். அப்போது எனது உறவுகள் கூட என் முதுகின் பின்னால் வசை பாடினர். (எங்களது பிரச்சினைகள் அவருக்கு விழங்காது )இன்று அவர்கள் அவர்களின் காணிகளில் உரிமையோடு வாழுகின்றனர். விற்றவர்களோ காணிகளைத் திரும்பப் பெற போராடகின்றார்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.