Saturday, February 20, 2016

தன்னைத்தானே ஆட்சி செய்யும் சமஷ்டி முறையிலான ”மாவட்ட அபிவிருத்தி சபை” பகுதி- 02



3. மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் கடமைகள்.
3.1. மாவட்டத்தின் மக்கள் இரண்டு பிரிவினராகப் வகைப் படுத்தல் வேண்டும்.
3.2. அ. வாக்கு அளிக்கும் உரிமை உடையவர்கள்..
3.2. ஆ. மாவட்டத்தினுள் வசிக்கும் உரிமை பெற்றவர்கள்.
3.3. தந்தையின் பெயரை முதன்மைப் படுத்தி பிள்ளைகளின் யெர்கள் பதிவு செய்திருத்தல் வேண்டும். இந்த அடிப்படையிலேயே  ஏனைய பதிவுகள் அனைத்தும் இருத்தல் வேண்டும்.  (இது கணணி மயப்படுத்த இலகுவானதாக இருக்கும்)
3.4. வாக்களிக்கும் உரிமையைப் பெற விண்ணப்பிக்கும் நபரின் தகைமைகள். குறித்த ஆண்டில் 17 வயதை பூர்த்தி செய்திருத்தல்

Tuesday, February 16, 2016

குரங்கிற்கு வாழ்க்கைப்பட்டால் தொங்கித்தான் ஆகவேண்டும்




அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இலங்கை அரசியல் களப்பரப்பில் அண்மைக் காலமாக வெளிபடுத்துகின்ற கருத்துக்களும்,அறிக்கைகளும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஒரு திருப்திகரமான மனோ நிலையை தோற்றுவித்திருக்கின்றது.

அமைச்சர்  பாட்டாளி சம்பிக்க ரணவக்க மினச் சிறந்ததொரு கல்வியலாளரும், சர்வதேச அரசியல் கள நிலவர அவதானிப்பாளருமாவாவார்.இருந்த போதிலும் குரங்கிற்கு வாழ்க்கைப்பட்டால் கொப்பில்  தொங்குவது சகஜம்என்ற கடந்த மஹிந்த ரெஜிமென்டுடைய சர்வாதிகார ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கெதிராக பலதரப்பட்ட இனவாதக் கருத்துக்களை தொடர்ந்தேச்சையாக  விதைத்தும், வெளியிட்டும் வந்தார்.

Monday, February 15, 2016

கோத்தா பொதுபல சேனாவை வழி நடத்தியது எப்படி?


பௌத்த  தேரர்களுக்கு பெரும்பான்மை சமூகம் புனித அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. அத்தகைய மேன்மையான கௌரவத்தை சதாவும் சிதைக்கம்மல் பாதுகாத்துக் கொள்வது தேரர்களுக்குரிய மிகப் பெரிய பொறுப்பாகும்.

ஆனால் ராஜபக்ச ஆட்சிக்காலத்திற்குள் தேரர்களின் செயற்பாடுகள் பாதாள உலகத்தினரைக் காட்டிலும் மிக மோசமான முறையில் காணப்பட்டன. தேரர்கள் தமது காவியுடைக்குரிய புனிதத்துவத்தை பாதுகாக்க முயற்சிக்க வில்லை.
பொதுபல சேனா,சிஹல ராவய, ராவன பல என்றவாறு தங்களை பௌத்தமாகக் காட்டிக் கொண்ட இனவாத அமைப்புக்கள் அத்தைகைய இழிவுச் சின்னங்களின் அடையாளச் சின்னங்களாக விளங்கின.
எந்த ஒரு மதத்தையோ.இனத்தையோ உள்ளத்தாலோ,உடலாலோ தொந்தரவு படுத்தக் கூடாதென புத்தபெருமான் உபதேசம் செய்துள்ளார்.

Tuesday, February 9, 2016

தன்னைத்தானே ஆட்சி செய்யும் சமஷ்டி முறையிலான ”மாவட்ட அபிவிருத்தி சபை” (பகுதி-1)

மாகாணசபைக்கு அதிகமான அதிகாரத்தை இன்று கேட்கும் சந்தர்பத்தில் நான் கூறும் ”மாவட்ட அபிவிருத்தி சபை” குறைந்த  ஆட்சி பீடம்தான்.ஆனால் இன்றைய மாகாணசபை முறையில் பாதிப்புக்களும்,அநீதிகளும் இல்லாமலில்லை.அதில் சிலவற்றை மட்டும் முதலில் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.ஒரு மாகாண சபைக்குள் வரும் ஒரு மாவட்ட முஸ்லிம்கள்  அல்லது அரசியல்வாதி இன்னுமொரு மாவட்ட முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கின்றனர். அதே போலதான் தமிழரும், சிங்களவரும் செயற் படுகின்றனர். மேலும் ஒருமாவட்டத்தின் வளங்களை  அடுத்த மாவட்டத்தினர்  கபளீகரம் செய்கின்றார்கள்.அரச தொழில்களை வல்லமை கொண்ட அரசியல் வாதிகள் தமது மாவட்ட அல்லது மகாண சீடர்களுக்கும் அவர்களது குடும்பங் களுக்கும் பகிர்ந்து கொள்கின்றனர். ஒருமாவட்டத்தினர் செய்யும் குற்றச் செயல்களுக்கு முழு மாகாண சபை சமூகங்களும் தண்டணையை அனுபவிக்க வேண்டி வந்திருக்கிறது.எனவேதான் குறுகிய பிரதேசத்தினுள் வாழும் எந்தச்சமூகமாக இருந்தாலும் சரியே இந்த மாவட்ட அபிவிருத்தி சபை மூலமாக மட்டும்தான் தன்னைத்தான் ஆளுவதுடன், உண்மையான சுதந்திரத்தினையும் பெற்றுக் கொள்ள முடியும்.இதை மத்திய அரசினது கவனத்திற்கும் கொண்டு செல்லவும்  விரும்புகின்றேன்.உங்களத பின்னுாட்ல்களை தயங்காமல் பதிவு செய்யுங்கள்.

Monday, February 1, 2016

1988ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் முன் வைத்த அதிகாரப் பகிர்வு யோசனைகள்.




1988.11.24ம் திகதி சிறீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முனன்னி[M.E.P} , சிறிலங்கா முஸ்லிம் காங்கிறஸ், அகில இலங்கை தமிழ் காங்கிறஸ் அகிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ”ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு” என்னும் அமைப்பை உருவாக்கினார்கள். என்பது இங்க நினைவு கூறத்தக்கது.
1988ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் முன் வைத்த அதிகாரப் பகிர்வு யோசனைகள்