3. மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் கடமைகள்.
3.2. அ. வாக்கு அளிக்கும் உரிமை உடையவர்கள்..
3.2. ஆ. மாவட்டத்தினுள் வசிக்கும் உரிமை பெற்றவர்கள்.
3.3. தந்தையின் பெயரை முதன்மைப் படுத்தி பிள்ளைகளின் யெர்கள் பதிவு செய்திருத்தல் வேண்டும். இந்த அடிப்படையிலேயே ஏனைய பதிவுகள் அனைத்தும் இருத்தல்
வேண்டும். (இது கணணி மயப்படுத்த
இலகுவானதாக இருக்கும்)
3.4. வாக்களிக்கும் உரிமையைப் பெற விண்ணப்பிக்கும் நபரின்
தகைமைகள். குறித்த ஆண்டில் 17 வயதை பூர்த்தி செய்திருத்தல்
வேண்டும்.1977ம் ஆண்டு அவரது தந்தை அல்லது தாய் அல்லது அவர்களது தாய்,தந்தை
வழி முன்னோர் குறித்த மாவட்டத்தின் வாக்காளர் இடாப்பில் பதிவினை பெற்றிருத்தல்
கட்டாயமாகும். அல்லது குறித்த மாவட்டத்தின் வாக்கு உரிமையுடைய ஒருவரை திருமணம்
செய்திருக்க வேண்டும். குறித்த மாவட்டத்தில் நாற்பது வருடமாக வதிவிட உரிமை
பெற்றவராக இருக்கும் ஒருவர் வாக்காளராக விண்ணப்பிக்க உரிமை உடையவராவார்..ஒருவர்
ஒரு மாவட்டத்தில் மட்டும் வாக்காளராக இருக்க முடியும்.
3.5. வசிப்பிடத்துக்காக விண்ணப்பிக்கும்
ஒருவர் சம காலத்தில் இரண்டு மாவட்டங்களை தமது வதிவிடங்களாக கொண்டிருக்கலாம். குறித்த
குடும்பத் தலைவரது பெயரில் அரச காணி தவிர்ந்த காணி ஒன்றையாவது கொண்டிருத்தல் வேண்டும்.
அல்லது அரசாங்க உத்தியோகத்தராக இருப்பது போதுமானதாகும்.
3.6. வருடந்தோறும் பூரணமாக தயாரிக்கப் பட்ட படிவம் ஒன்றின் மூலம் மாவட்ட
மக்களிடமிருந்து குடும்பத் தலைவர் உட்பட
அவர் பாதுகாப்பில் உள்ள அனைவரது விபரங்களையும் பெறுதல் வேண்டும். இதன் மூலம்
மாவட்ட குடிசன மதிப்பீடு ஒன்றை வருடம் தோறும்
மேற் கொள்ள வேண்டும். இதிலிருந்து குறித்த மாவட்டத்தின் வாக்குரிமை
பெற்றவர்கள், வசிப்பிட அனுமதி உடைவர்கள், தொழில் அதிபர்கள், சுயதொழிலில் ஈடுபாடு
உடையவர்கள்,தொழிலை எதிர்பார்த்திருப்பவர்கள்.
தொழில் இல்லாதிருப்பவர் அவர்களின்
கல்வித் தகமை, மாணவர்கள், குழந்தைகள் என இனரீதியாக தேவையான
அனைத்து விபரங்களையும் பெற்று விகிதாசார அடிப்படையில் பட்டியலிட்டுக் கொள்ள
வேண்டும். இதன் பிரதிகளை மத்திய அரசாங்கத்தின் புள்ளிவிபரத் திணைக்களம், மாவட்ட முதலமைச்சர், மாவட்டச் செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
3.7. மாவட்ட தேர்தல்
அலுவலகத்தினால் மேற் கொள்ளப்படும் ஆய்வு மற்றும் தீர்வு அடிப்படையில் மாவட்டத்தின்
வாக்காளரும் அவரைச் சேர்ந்திருக்கும் குடும்ப
(17 வயதை அடையாத, புத்தி சுவாதீனமுடைய) உறுப்பினர்களுமே குறித்த மாவட்டத்தின் சகல உதவிகளையும்
பெற தகுதி உடையவர்களாகும். மாவட்டங்களின் இந்த விகிதாசாரத்தைப் பின் பற்றியே
மத்திய அரசினால் மாவட்ட அபிவிருத்திச் சபைக்கான சகல கொடுக்கல்,வாங்கல்கள் நடவடிக்கை மேற் கொள்ளப் படுதல் வேண்டும்.
3.8. மாவட்டத் தேர்தல் அலுவலகத்தினால் மேற் கொள்ளப் பட்ட தகவல் திரட்டுப்
படிவங்களுக்கு அமைவாக குறித்த மாவட்டத்தில் வாக்களிக்க உரிமை உடையவர்கள் அவர்களைச்
சேர்ந்து வாழுபவர்கள் பெயர்ப் பட்டியல் வேறாகவும் மற்றும் வசிப்பிட உரிமை
உடையவர்கள் அவர்களைச் சேர்ந்து வாழுபவர்கள் பெயர்ப் பட்டியல் வேறாகவும் தயாரிக்கப்பட்ட
பட்டியலின் பிரதிகள் மத்திய அரசாங்கத்திற்கும், மாவட்டச் செயலாளர், மாவட்ட திட்டமிடல்
பணிப்பாளர், பிரதேசச் செயலாளர்கள்,
கிராம சேவை அதிகாரிகள் போன்றவர்களுக்கு வழங்க வேண்டும். தமது மாவட்ட புள்ளி
விபரங்களை மாவட்டத்தில் வாழும் சகல குடிமக்களும் அறியும் உரிமை வழங்கப்
படவேண்டும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.