மாகாணசபைக்கு அதிகமான அதிகாரத்தை இன்று கேட்கும் சந்தர்பத்தில் நான் கூறும் ”மாவட்ட அபிவிருத்தி சபை” குறைந்த ஆட்சி பீடம்தான்.ஆனால் இன்றைய மாகாணசபை முறையில் பாதிப்புக்களும்,அநீதிகளும் இல்லாமலில்லை.அதில் சிலவற்றை மட்டும் முதலில் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.ஒரு மாகாண சபைக்குள் வரும் ஒரு மாவட்ட முஸ்லிம்கள் அல்லது அரசியல்வாதி இன்னுமொரு மாவட்ட முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கின்றனர். அதே போலதான் தமிழரும், சிங்களவரும் செயற் படுகின்றனர். மேலும் ஒருமாவட்டத்தின் வளங்களை அடுத்த மாவட்டத்தினர் கபளீகரம் செய்கின்றார்கள்.அரச தொழில்களை வல்லமை கொண்ட அரசியல் வாதிகள் தமது மாவட்ட அல்லது மகாண சீடர்களுக்கும் அவர்களது குடும்பங் களுக்கும் பகிர்ந்து கொள்கின்றனர். ஒருமாவட்டத்தினர் செய்யும் குற்றச் செயல்களுக்கு முழு மாகாண சபை சமூகங்களும் தண்டணையை அனுபவிக்க வேண்டி வந்திருக்கிறது.எனவேதான் குறுகிய பிரதேசத்தினுள் வாழும் எந்தச்சமூகமாக இருந்தாலும் சரியே இந்த மாவட்ட அபிவிருத்தி சபை மூலமாக மட்டும்தான் தன்னைத்தான் ஆளுவதுடன், உண்மையான சுதந்திரத்தினையும் பெற்றுக் கொள்ள முடியும்.இதை மத்திய அரசினது கவனத்திற்கும் கொண்டு செல்லவும் விரும்புகின்றேன்.உங்களத பின்னுாட்ல்களை தயங்காமல் பதிவு செய்யுங்கள்.
மாவட்ட அபிவிருத்திச் சபைக்கான சட்ட,திட்டங்கள்
1.1. மாவட்டத்தின். அல்லது பிரதேச சபைகளின் எல்லைகளை மறு சீர் அமைத்தலும், தேவையேற்பட்டால் புதிய மாவட்டங்களை அல்லது பிரதேச சபைகளை தோற்று வித்தலும்.
1.2. மத்திய அரசாங்கத்தினால் மாவட்ட எல்லை மறு சீரமைப்பு சுயாதீன
ஆணைக்குழு நியமிக்கப் படுதல் வேண்டும். அதில் உத்தேச மாவட்டத்தின் செயலாளர், மாவட்ட நீதிபதிகள்,மாவட்ட பொலிஸ் அதிகாரி பிரதேச செயலாளர்கள், மற்றும்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்வாங்கப் படுதல்
வேண்டும்.
1.3. மாவட்ட எல்லைகள் நிர்ணயத்தின் போது உத்தேச குறித்த மாவட்டத்தின் தலை நகரத்திற்கும் அடுத்த மாவட்டத்தின் தலை நகரத்திற்கும் இடையிலான தூரத்தை இரண்டாகப்
பிரித்து மத்திய பகுதியை எல்லையாக கொள்ளுதல் வேண்டும்.
1.4. மாவட்ட எல்லை நிர்ணயத்தின் போது எல்லைப் பிரதேசத்தில் தொழிற் சாலைகள், குளங்கள், விவசாய பெரும் நிலப்பரப்புகள், கனிமவள நிலையங்கள் ஆகியவற்றால் பயன் பெறுவபவர்கள்
சார்ந்து வாழும் மாவட்டத்துடன் அவற்றை இணைத்தல் வேண்டும்.
2. மாவட்டத்திற்கான கொடி, மாவட்டத்திற்கான
கீதம், மாவட்டத்திற்குரிய இலச்சினை பறவை, மாவட்டத்திற்குரிய
இலச்சினை மலர்,
மாவட்டத்திற்குரிய
இலச்சினை மிருகம்.
2.1. மாவட்டத்திற்கான கொடி அமைப்பின் போது கவனத்தில்
கொள்ள வேண்டியவை. குறித்த மாவட்டத்தில் வாழும் இனங்களின் கலாச்சார பண்பாடுகள்
உள்ளடக்கப் படுதல் வேண்டும். எந்தவொரு இனத்தினதும் மேலாண்மை தன்மையை
வெளிப்படுத்தாமல் இருத்தல் வேண்டும். மனித நாகரீகத்திற்கு பொருந்தாத படங்கள்
உள்வாங்கப் படக்கூடாது. சமாதான சமத்துவத்தையும், பொருளாதார விருத்திக்கான
மூலக் கூறுகளையும் கொண்டிருத்தல் அவசியமாகும்.
2.2. குறித்த மாவட்டத்திற்கான கீதத்தில், சமாதான சகவாழ்வுக்கான அழைப்பிதழுடன், மாவட்ட பிரஜைகளின் ஒழுக்க விழுமியங்களின் அவசியத்தையும் சுட்டிக் காட்டுதல்
வேண்டும். மாவட்டத்தின் இயற்கை வளங்களையும் வர்ணித்து இருத்தல் வேண்டும்.
மாணவர்களின் கல்வி வளர்சியை ஊக்குவிக்கும் சொற்றொடர்களும் காணப்பட வேண்டும்.
மாவட்ட மக்கள் அனைவரும் ஒரு தாய் குழந்தைகள் என சொல்லப் படுதல் வேண்டும்.
2.3. குறித்த மாவட்டத்திற்கான மலர், பறவை, மிருகம் போன்றவை மாவட்டக் குழுவினரால் தேர்வு செய்யப் பட்டு மத்திய அரசினது
பரிந்தரைக்கு வழங்குதல் வேண்டும். மத்திய அரசு ஏனைய சகல மாவட்டத்தின் சின்னங்களின்
தெரிவுகளையும் ஆராய்ந்து சுமூகமான தீர்வை
எட்டலாம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.