Monday, February 15, 2016

கோத்தா பொதுபல சேனாவை வழி நடத்தியது எப்படி?


பௌத்த  தேரர்களுக்கு பெரும்பான்மை சமூகம் புனித அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. அத்தகைய மேன்மையான கௌரவத்தை சதாவும் சிதைக்கம்மல் பாதுகாத்துக் கொள்வது தேரர்களுக்குரிய மிகப் பெரிய பொறுப்பாகும்.

ஆனால் ராஜபக்ச ஆட்சிக்காலத்திற்குள் தேரர்களின் செயற்பாடுகள் பாதாள உலகத்தினரைக் காட்டிலும் மிக மோசமான முறையில் காணப்பட்டன. தேரர்கள் தமது காவியுடைக்குரிய புனிதத்துவத்தை பாதுகாக்க முயற்சிக்க வில்லை.
பொதுபல சேனா,சிஹல ராவய, ராவன பல என்றவாறு தங்களை பௌத்தமாகக் காட்டிக் கொண்ட இனவாத அமைப்புக்கள் அத்தைகைய இழிவுச் சின்னங்களின் அடையாளச் சின்னங்களாக விளங்கின.
எந்த ஒரு மதத்தையோ.இனத்தையோ உள்ளத்தாலோ,உடலாலோ தொந்தரவு படுத்தக் கூடாதென புத்தபெருமான் உபதேசம் செய்துள்ளார்.
புத்தரின் அடிப்படைக் கொள்கைகளை  அவமதித்து ஏனைய இன, மதங்களுக்கெதிராக  சொற்போர் புரிந்து ஆயுதம் ஏந்தத்  தூண்டுபவர்களை  உண்மையான பௌத்தர்கள் என்று கூறமுடியாது.
இலங்கை வாழ் பௌத்த தேரர்கள், பண்பாட்டு நாகரீகம் மிக்கவர்கள் என்பதாக இது வரை காலமும் உலகம் அறிந்து வைத்திருந்தது.ஆனால் கடந்த காலப் பகுதிகளில் சிங்கள இனவாத அமைப்புகள் ஏனைய  இனத்தவர்களுக்கெதிராக பரிந்த அட்டூழியங்கள் பௌத்தர்கள் வன்முறைச் சுயரூபமிக்கவர்கள் என்பதை உலகிற்கு பறை சாற்றியுள்ளது.
ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் போது, பொதுபல சேன.சிஹல ராவய போன்ற இனவாத அமைப்புக்களை கோத்தபாய ராஜபக்ஷ் முஸ்லிம் மக்களுக்கெதிராக திரைக்குப் பின்னாலிருந்து வழி நடத்தினார். என்ற குற்றச்சாட்டு பலவலாக முன்வைக்கப்பட்டு வந்தது. இந்தக் குற்றச் சாட்டினை அன்று பொதுபல சேனா மாத்திரமல்லாமல்,அரசாங்கமும் நிகாரித்து வந்தது.ஆனால்தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி. இராணுவ இரகசிய தகவல் பிரிவு  மற்றும் அரசாங்க உளவுத் துறைகளுக்கு ஊடாக கோத்தபாய ராஜபக்ஷ் பொதுபல சேன போன்ற அமைப்புக்களை நாட்டிற்குள் இன,மத வாத வன் முறைகளை தூண்டிய மைக்கான சந்தேகத்திற்குரிய விடயங் களும் வெளி வந்துள்ளன.
குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கூடாக முறையானதொரு விசாரணை நடத்தப்பட்டால் குறித்த விடயத்தோடு தொடர்புடைய சகல தகவல்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதென்பது அவ்வளவு கடினமானல்ல.
கோத்தபாய ராஜபக்ஷ் அன்று பாதகாப்பு அமைச்சின் செயலாளராக விசேஷ அதிகாரங்களை தன்வசம் வைத்துக் கொண்டு ஒருங்கிணைந்த அரச உளவுத் துறை  பிரதானி மேஜர் ஜெனரல் கபில ஹெந்த விதாரன.இராணுவப் புலனாய்வுத்துறை பணிப்பாளர் கேர்ணல்  சரேஸ் சலே, அரசாங்க உளவுத் துறை பிரதானியாகச் செயற்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் சந்திரா வாக்கீஸ்ட போன்றவர்களுக்கூடாக பொதுபல சேனாவை வழி நடத்தியுள்ள மைக்கான தகவல்கள் பதிவாகியுள்ளன.
யுத்தக் வெற்றிக் களிப்பின் மமதையுடன் கூடிய வெறித்தனத்தில் கருமமாற்றியதன் விளைவால் ராஜபக்ஷ் அரசாங்கத்திற்கு நாற் திசைளிலிருந்தும் கடுமையான குற்றச்சாட்டுக்கள் மேலெழுந்தன. அவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் நாட்டின் பிரச்சினையை மக்கள் அவதானத்திலிருந்து வேறு பக்கம் செலுத்த வேண்டும். அதற்குரிய ஒரேவழி முஸ்லிம்களைத் தாக்கி இனவாதத்தை விதைப்பது.
இதற்கு அரசாங்கம் நேரடியாக தலையிட்டால்.தேசிய ரீதியில் மாத்திரமல்லாமல் சர்வதேச அளவிலும் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். என்பததால் பொதுபல சேன.சிஹல ராவய போன்ற பௌத்த வேஷமிட்ட அமைபுகளை உருவாக்கி அவற்றிற்கூடாக வன்முறைகளைப் புரிய  ராஸபக்ஷ் அரசு அன்று நடவடிக்கை எடுத்திருந்தது.
இலக்கம்.10,கேம்பிறிச் பிளேஸ்,கொழும்பு-07 இல் உள்ள அரசாங்க புலனாய்வுத் துறைக் கூடாகவே இத் திட்டத்திற்குரிய அத்திவாரம் இடப்பட்டது. உளவுத்துறை பிரதானியாக அப்போது கீர்த்தி கஜநாயக்கா செயற்பட்டார். இவருக்கும் ஒருங்கிணைந்த அரச புலனாய்வுத்துறை பிரதானி மேஜர் கபில ஹெந்த விதாரனைக்கும் இடையில் கருத்து மோதலொன்று ஏற்பட்டது. அரசாங்க புலனாய்வுப் பணிகளுக்கு நினைத்த விதத்தில் தலையிடுவதற்கு ஹெந்த விதாரணவுக்கு கீர்த்தி கஜநாயக்கா இடமளிக்கவில்லை. இதனால் ஹெந்த விதாரவிவகாரத்தை கோத்தபாயவின் கவனத்திற்கு கொண்டு சென்றார். விளைவாக கஜநாயக்க பதவி கவிழ்க்கப்பட்டு பிரதி பொலிஸ் மாஅதிபர் நிமல் சந்திரா வாக்கீஸ்அரசாங்க உளவுத்துறை பிரதானியாக நியமிக்கப் பட்டார்.
தன்னை ஒரு சிறந்த பௌத்தனாகக் காட்டிக் கொண்ட சந்திரா வாக்கீஸ்ட எதிராளிகளுக்கு திட்டமிட்டு சதி செய்வதில் வல்லவராகத் திகழ்ந்தார். நிமல் வாக்கிஸ்ட கிரம விமஜோதி தேர்ருக்4டாக பொதுபல சேனாவை ஆரம்பித்து அதற்குப் பின்னாலான அணுசரணையை கோத்தபாயவிடமிருந்து பெற்று முதலில் ஹலால் விவகாரத்தை பூதாகாரப் படுத்தினார்கள். ஆனால் சந்திரா வாக்கீஸ்ட விற்கும் இத் திட்டத்தினை நீண்ட காலம் முன்னெடுத்துச் செல்ல இடமளிக்கப் படவில்லை. இராணுவப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த கேர்ணல் சுரேஸ் சலே என்பவர் கலகொட அத்தே ஞானசார விதாரன் தெனியே நந்த தேர்ர்களை வலைவிரித்து மடக்கிப் பிடித்து பொதபல சேனாவினை வழி நடத்தும் பொறுப்பை தன்வசம் பெற்றார்.
அவ்விடம் தொட்டு கோதபாயவின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் இரகசிய கணக்கிலிருந்து நிதி  ஒதுக்கீடுகளைப் பெற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவு பொதுபல சேனாவை வழி நடத்தியது. அளுத்கம. தர்ஹா நகரில் நான்கு இளைஞர்களை சுட்டுக் கொண்டு அப்பிரதேசத்து மக்களுடைய  கடை வீதிகளை தீயிட்டுக் கொளுத்தி னார்கள்.இராணுவ புலனாய்வுப் பிரிவு, கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு,அரசாங்க உளவுத்துறை போன்ற பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சிலர் மற்றும் அப்போதைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரேமலால் ரணகலவினால் தெரிவு செய்யப்பட்ட ஒருசில காடையர் களுக்கும் மேற்படி அளுத்கம வன்முறைகளில் ஈடு படுத்தப் பட்டிருந்தனர். குற்றவியல் விசாரணைத் திணைக்ளம் முறையானதொரு பரிசோதனையை நடத்தினால் குறித்த நபர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர முடியும்.
அளுத்கம சம்பவத்தை விசாரணை செய்ய பிரதிப் பொலிஸ்மா அதிபர் வி.இந்திரான் பொதுபல சேனா மற்றும் இராணுவத்திலிருந்து பதின்மூன்று  பெயரை  பேருவலையில் கைது செய்திருந்தார். ஆனாலும் உயர் மட்டத்திலிருந்து வந்த அழுத்தங்களின் காரணமாக அவர்கள் பிணையில் விடுதலையானார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வி.இந்திரான் களுத்தறை மாவட்டத்திலிருந்து இ.டம் மாற்றப்பட்டு அவர் சம்பந்தப்பட்ட பாலியல் பிரச்சினை ஒன்றை உயர் மட்ட விசாரணையாக ஆரம்பித்தார்கள்.
வன்முறைச் செயல்களுடன் தொடர்பற்ற எவரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட முடியாது. அது நீதி மன்றத்திற்கூடாக மேற் கொள்ளப்பட வேண்டும்.ஆனால் அந்த வன்முறையாளர்களை ராஜபக்சக்கள் விடுதலை செய்தார்கள்.
அளுத்கம,தர்ஹாநகர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுடன் தொடர்படைய  எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இரகசிய பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜெயசூரியவின் தலைமையில் விசார ணைகள் மேற் கொள்ளப்பட்டு வந்த போதும் பின்னர் அவர் அதிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன் குமார ஹேவாவிற்கு குறித்த விசாரணை நடவடிக்கைகள் கைமாறின. ஆனாலும் அப்பரிசோதனைகளின்  பெறுபேறுகள் இதுவரையிலும் வெளியிடப்படவில்லை.
அது ஏன்? மேற்படி தாக்குதல்களுக்கு அரசாங்க உளவுத்துறை, இராணுவப் புலனாய்வத்துறை, பயங்கரவாத தடுப்புப் பிரிவிலுள்ள ஒரு,சிலரும் தொடர்பு பட்டுள்ளார்கள் என்கின்ற காரணத்திற்காகவா?
குறித்த தாக்குதலுக்காக வேண்டி பாதுகாப்புத் தரப்பினரின் துப்பாக்கிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இது பாதூரமானதொரு குற்றச் செயலாகும் பொதுபல சேன,ஹெல ராவய போன்ற அமைப்புகளின் செயற்பாடுகள் 2015.ஜனவரி எட்டாம் திகதி ராஜபக்ஷ் ஆட்சியின் வீழ்ச்சிக்கு தூபமிட்டிருந்தது
பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமல ஜோதிக்கு சொந்தமான கொழும்பு தும்முல்லையில் அமைக்கப் பெற்றுள்ள “சம்புத்த ஜயந்தி மந்திரய” கட்டிடத்தை திறந்து வைக்கும் பொழுது சாதாரண பக்தர் பொது மக்களாக வெள்ளாடை தரித்து வந்தவர்களுள் பெரும்பாலானவர்கள் அரச உளவுத் துறை மற்றும் இராணுவ புலனாய்வு துறையைச் சேர்ந்தவர்களாவார்கள்.
பொதுபல செனவைச் சூழ பெரும் தொகையான பௌத்த மக்கள் ஒன்று குழுமினார்கள்.என்பதனை ஏனைய மக்களுக்கு காண்பிப்பதற்காகவே அத்தகைய முயற்சியினை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்..இது தவிர, பொதுபல சேனா அமைப்பு நாட்டின் பல பாகங்களிலும் நடத்திய கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. மாத்திரமல்லாமல் சிவில் உடை அணிந்து கலந்து கொண்டவர்களுள் பெரும்பாலானவர்களுள் அரச உளவுப் பிரிவைச் சார்ந்தவர்கள் இருந்தார்கள்.
பொதுபல சேன,சிஹல ராவய போன்ற அமைப்புகளுக்கு ராஜபக்ஷ் ஆட்சிக் காலப் பகுதியில் நிதியுதவிகள் மற்றும் வாகன வசதிகள் எவ்வாறு கிடைத்தன? அவற்றை வழங்கி வைத்த இடைத்தரகர்கள் யார்? பல செனாவின் முதல் அந்தஸ்திலுள்ள தேரர்களின் கடந்த கால.தற்கால கணக்குகளை பரீட்சித்துப் பார்த்தால் அவர்களுக்கு நிதியதவி கிடைத்த வழி முறைகளும் அம்பலமாகும்.
அத்தோடு இவர்களின் தொலை பேசி அழைப்புக்களும் பரிசோதிக்கப்பட வேண்டியுள்ளது.இவ்விடயம் தொடர்பாக கட்டாயமாக இரகசியப் பொலிஸ் விசாரனையொன்று அவசியமாகிறது.சிகல ராவயவுக்கு அரசாங்க புலனாய்வுப் பிரிவு சாரதிகளுடன் வாகனங்கள் வழங்கியுள்ளமைக்கான சான்றிதழ்களும் உள்ளன.இது பொய்யென நிரபிக்குமாறு நிமல் சந்திரா வாகிஸ்டவுக்கு சவால் விடுகிறோம்.

போதைத்தூள் (குடு) விற்பனையாளர்களுக்கெதிரான பொதுபல சேனா அமைப்பு கூக்கரலிட்டு வந்த போதிலும் வெல்லம்பிட்டியில் இடம் பெற்ற பல சேனாவின் கூட்டத்திற்கு தெமட்டக்கொட பொதைத்தூள் மன்னராக குறிப்பிடப் படுகின்றவரும் பாரத லஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலையாளி தெமட்டகொட சமிந்த என்பவனே நிதியுதவிகளை அழித்துள்ளான்.இராணுவ புலனாய்வுப் பிரிவினரே இதற்குரிய தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
இதற்குப்டிபின்னால் பிரகித் எக்னலிகொட கொலை விவகாரம் தொடர்பில் தற்பொழுது கைது செய்யப் பட்டுள்ள கேர்ணல் சம்மி குமார ரத்ன என்பவர் செயற்பட்டு வந்துள்ளார். என்பதற்கான தகவல்களும் உள்ளன. இவர் தெமட்டகொட சமிந்தவிடமிருந்து வருவாய்களைப் பெற்று வந்த,வெள்ளை வேன் கடத்தல் காரர்களில்  ஈடுபட்டு வந்த கோத்தபாய கோஷ்ரியைச் சேர்ந்த பிரபல்யமான ஒருவராவார்.
ராஜபக்ஷ் அரசாங்கத்தினால் சீவித்து வந்த பல சேனாக்கள் 2015.ஜனவரி 8ம் திகதியின் பின்னர் அலைந்து திரிவதற்கு இடமில்லாமல் அனுசரனை உதவிப் பாதைகள் துண்டிக்கப்பட்டு அனாதரவற்றுப் போயிருந்தன. அண்மைக் காலம் தொட்டு மீண்டும் பல சேனா களத்தில் குதித்துள்ளன.அன்று ராஜபக்ஷ் ஆட்சிக் காலத்திற்குள் இத்தகைய அமைப்புகளை வழி நடத்திய இராணுவப் புலனாய்வுத்துறை பிரதானி மைத்திரி,ரணில் ஆட்சிக் காலப்பகுதியிலும் தொடர்ந்தும் அப்பதவிகளில் நிலைத்து வருவதன் காரணத்தினாலேயே அவ்வமைப்புகளுக்கு ஒட்சீசன் கிடைத்துள்யது. இராணுவ புலனாய்வுத்துறை பிரதானியின் அடிவருடிகள் மறை நிழலில் செயற்பட்டு வருவதனை இவ்வரசாங்கம் புரிந்து கொள்ளாமல் இருப்பது பாரியதொரு துரதிஷ்டமாகும்.
உடகவியலாளர்  பிரகித் எக்னலிகொடவைக் கடத்திச் சென்று கொலை செய்தது யார்? இராணுவப் புலனாய்வுத் தகவல் லெப்டினன் கேர்ணல் சம்மி குமார ரத்ன என்பவனாவான். இவ்வரசாங்கம் இன்று புலிப்பயங்கர வாதிகளிட மிருந்து நாட்டைப் பாதுகாத்த இராணுவ வீர்ர்களை தள்ளி வருவதாக கூக்குரலிடுவது யார்? பொதுபல செனா அமைப்பும்,விமல்வீரவன்ச கோஷ்டி யினருமாவார். 
இத்தகைய பலசேனாக்களுக்கு தெமட்டகொட குடு அரசனுக்கூடாக உதவி புரிந்தது சம்மி குமார ரத்ன என்பவராவார். இந் நிலையும் இன்று கொலை குற்றவாளி ஒருவனான சம்மி குமார ரத்ன என்பவனை இராணுவ சிப்பாய் ஒருவனாக காண்பித்து விடுவித்துக் கொள்வதற்கு  பொதுபல செனாவும்  விமல்வீரவன்சகுழுவினரும் குரலெழுப்புவதன் இரகசியம் என்ன என்பதனை இலகுவில் புரிந்து கொள்ள முடிகிறது.
விடுதலைப் புலிகளுக்குகெதிரான யுத்தத்தின் போர்வையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பாதூரமான குற்றங்களில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் யுத்தத்திற்கு வழங்கிய பங்களிப்பை மதிக்க வேண்டிய அதே நேரம்.அதன் போர்வையில்  அவர்கள் கொலை,கொள்ளை,கப்பம் பெறக் கடத்தல், செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் அதற்கு  மன்னிப்பு வழங்குவது இலகுவானதல்ல.அவர்களின் செயல்கள் இன்று அம்பலமாகும் பொழுது உளவுத்தறை அதிகாரிகளுக்கு மாத்திரமில்லாமல் அவர்களிடமிருந்து பண உதவிகளை பெற்று வந்த தேரர்களுக்கும் கூட மண்ணெண்ணை படிந்த சாரைப் பாம்புகள் போல தடுமாறத் தொடங்கியுள்ளார்கள்.
ராஜபக்ஷ்களின் குற்றங்களைப் புரிந்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளனர். இத்தகைய பின் புலத்தைக் கொண்ட இராணுவ வீரனை விடுதலை செய்யுமாறு தேரர்கள் இன்று கூக்குரலிட்டு வருகின்றார்கள்.
பௌத்த சிந்தனையின் பிரகாரம் இத்தகைய பாவச் செயல்களைப் புரிந்த ஒருவரை விடுவித்துக் கொள்வதற்கு சட்டத்தை வலியுறுத்துவதென்பது எந்த அளவிற்கு உசிதம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. ராஜபக்ஷ் ஆட்சிக் காலத்திற்குள் இராணுவத்தினர் இழைத்த குற்றங்களுக்கு சட்டத்தினால் வேலி கட்டப்படுகின்ற பொழுது பிக்குகளின் பலசேனாக்கள் உசுப்பேத்தி விட்டு தங்களுடைய பிழைப்பை பாதுகாத்துக் கொள்ள இராணுவ புலனாய்வுப் துறையினர்  ஒக்ஸிசன் வழங்கி வருகின்றார்கள். எனவே இத்தகைய நடவடிக்கைகள்  அரசாங்கத்தையும்,உளவுப்பிரிவையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவதற்காக அரங்கேற்றப் படுகின்ற சூழ்ச்சித் திட்டங் களாகும். அதனால் விரைவாக இராணுவ உளவுப்பிரிவு சீர்திருத்தப் படாவிட்டால் நீண்ட காலம் செல்ல முன்னரே இவ்வரசாங்கம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். என்பதில் ஐயமில்லை.
கோத்தபாய நியமித்த உயர் அதிகாரிகளே இன்னும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் உள்ளார்கள்.இன்னும் அவர்கள் திருட்டுத்தனமான முறையில் கோத்தபாய போன்றவர்களுக்கு கூஜா  தூக்குகின்றார்கள்.
கடந்த தினமொன்றில் அநுரகுமார திசாநாயக்கா ஆற்றிய உரையொன்றில் இரகசியமான உளவுத்துறை அறிக்கைகள் அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த இடங்களுக்குச் செல்வதாகவும் முன்னரே எதிர்தரப்பினர் கரங்களுக்கு கிடைப்பதாகவும் அவை தனக்கும் கிடைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.இதன் மூலம் இவ்வரசாங்கத்தின் பாதுகாப்பிலுள்ள ஒட்டைகளை இலகுவில் புரிந்து கொள்ள முடிகிறது.
அன்று கோத்தபாய ராஜபக்சக்கள் நியமித்த பதவிகளில் உள்ளவர்களே மறுபுறத்தால் அரச தகவல்களை விசுவாசிகளுக்கு வழங்கி வருகின்றனர். முப்படைகளின் தளபதிகளாகவுள்ள மைத்திரிபால சிறிசேன இன்னும் வேடிக்கை பார்த்து காத்துக் கொண்டு மௌனியாக இருப்பது அவரின் எதிர்கால இருப்புக்கு அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.
நன்றி 2016.02.05ம் திகதிய ”மீள்பார்வை”  (சமூக மாற்றத்திற்கான குரல்)
த்தலய சஞ்சிகை வெளியிடும் பரபரப்புத் தகவல்கள். –தமிழில்- ஹெட்டி றம்ஸி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.