Tuesday, June 14, 2011

சமூகத்தின் நலன்களைக்கவனிக்கும் அரசஅதிகாரிகள் நற்பண்புடையவராயிருத்தல் அவசியமாகும்

1990ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வடமாகாண முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள்  தமது சொந்தப்பிரதேசத்ததில் குடியமர வேண்டிய கட்டாய நிலையிலுள்ளனர்.ஆயினும் கடந்து சென்ற இருபத்தியொரு வருட அகதி வாழ்க்கையில் சுமார் நான்கு வருடங்களை  அகதிமுகாம் வாழ்க்கையில் துன்பப்பட்டனர்.தமது கலாச்சாரங்களையும்,குழந்தைகளின் கல்வி அபிவிருத்தியையும் கவனத்தில கொண்டு  கடின உழைப்பினால் 10 அல்லது 20 பேட்ஸஸ் காணித்துண்டுகளை சொந்தப்பணத்தில் பெற்று குடிசைகளை அமைத்து வாழ்ந்தனர். காலப்போக்கில் பலர் வசதியான கல் வீடுகளை அமைக்கும் வாய்ப்பினை  எல்லாம்வல்ல அல்லாஹ் வழங்கினான்.குழந்தைகளாய் வந்தவர்கள் இளைஞனாகவும்,இளைஞர்களாய் வந்தவர்கள் முதுமையும் அடைந்து விட்டனர் பல முதியவ்கள் தமது துணைகளையும் இழந்து தவிக்கின்றனர்.முதுமையான நிலைமையில் கட்டிய வீடுகளில் நிம்மதியர்க படுத்துறங்க ஆயத்தமான போது மீள்குடியேற்றம் என்ற நிலைமை வந்துள்ளது.துணையுடன் வந்தவர்கள் தனியாக போகவேண்டிய நிலைமை.குழந்தையாக வந்தவர்கள் புது உறவுகளோடு செல்லும் மகிழ்வு. வெளி மாவட்டங்களில் கட்டிய அல்லது வாங்கிய வீடுகளை பாதுகாக்க வேணடடிய தேவை,கல்விகற்கும் பிள்ளைகளை இடைநடுவில் பாடசாலைகள் மாற்றஞ் செய்வதால் ஏற்படப்போகும்பாதிப்பு,செய்யும் தொழிலை விட்டுச்செல்வதால் ஏற்படப்போகும நட்டங்கள். போன்ற பல காரணங்கள் கண்முன்வந்து அச்சுறுத்தும் நிலையிலும் வந்த இடத்தில் ஒருவரும் சொந்த இடத்தில் இருவரும் இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை. இவையனைத்தையும் மறப்பித்து மீள்குடியமர வேண்டிய காலகட்டத்தில்  முல்லைத்தீவு முஸ்லிம் சமூகம் காணப்படுகிறது.
     கடந்த காலத்தில் அகதி என்ற வடுச்சொல்லோடு வாழும் போது,அகதிகளாகக்காரமானவர்கள் மீதும் அவர்கள் சார்ந்த சமூகம் மீதும் இஸ்லாமிய இளஞ்சமூகத்தினர் அதிர்ப்தியுடைய நிலைமையிலேயே வாழ்ந்தது முதியோரால் உணரப்பட்டது. .காரணம் சில பிரதேசங்களில் அகதிச்சமூகத்தினர் கற்றுக்கொண்ட பாடஙகளும் மன உளச்சலுமாகும்.இப்போது அவர்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி மீளக்குடியமரச் செல்லும் மனநிலையை முதியோரும்,புத்திஜீவிகளும் ஏற்படுத்தியுள்ளனர்.
       இந்நிலையில் மீள்கடியமரச் சென்றுள்ள முஸ்லிம்களை சமூகத்துடன் தொடர்புடைய மாற்றுமத அதிகாரி ஒருவர் காழ்ப்புணர்வைக் காட்டுவதாக முல்லைத்தீவு முஸ்லிம் இளைஞர்கள் கூறுகின்றன்ர். சிலவேளை அவர் இனத்துவேசம் காட்டுவதாகவும், முஸ்லிம்களுக்கு வழங்கும் சேவைகளில் முஸ்லிம்களுக்கு மத்தியிலேயே பாரபச்சம் காட்டுவதாகவும்,பேசப்படுகிறது அவர் ஒருவருக்கு சொன்னாராம்  தமிழர்களெல்லாம் இருக்கும் போது உங்களுக்கு இங்கு இருக்க முடியாதோ என்றும்,விருப்பினால்இரும் இல்லாவிட்டால் போய்விடும் என்று கூட க்கூறியுள்ளார்..இப்படிப்பட்ட அரசஅதிகாரிகள் சமூகத்திற்கு தேவையில்லை என்பது “முஸ்லிம் அகதியின்”மட்டுமல்ல சகல முஸ்லிம்களின் கருத்தாகும். இல்லை மனிதநேயமுள்ள சகலினரதும் கருத்து.ம் இதுவாகத்தான் இருக்க முடியும்.. வெளிமாவட்டத்திலும் அரச அதிகாரிகளுடன் இணைந்துமுஸ்லிம் அகதிகளை விற்றுப்பிழைத்த சில முஸ்லிம்றேஸன் வியாபாரிகளும் ,டபிள்,றிபிள் றேஸன் காரர்களும் (ஊழல்பேர்வழிகள்)  இவரின் எடுபிடிகளாக செயற்படுவதாகவும் கூறப்படுகிறது.
   மாற்றுமத அரச அதிகாரிகள் பலர் மனிதப்புனிதர்களாக  முஸ்லிம்களுக்காக சேவை செய்வதனையும் காணமுடிகிறது.இவர்களைப்  பார்த்தாவது அந்த இழிநிலை அதிகாரி செயற்படவேண்டும். அல்லது போகவேண்டும்.
அப்போதுதான் சமூக அமைதியும்,சமாதானமும் ஏற்படும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.