Thursday, June 23, 2011

மூஸா அலைஹி வஸ்ஸலாம் மற்றும் ஃபிர்அவ்ன்





பரோவா மன்னர்கள் பயன்படுத்திய பொருள்கள் கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்ச்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.




Jewelry of Pharoah Kings
நகைகள்
Gold Bed
தங்கத்திலான கட்டில்
Coins
நாணயங்கள்
Golden coffin
உடல்கள் வைக்கப்பட்டிருந்த கூடுகள்.
Tutankhamun Gold Mask
டூடுட் அங்க் அமான் என்ற பரோவா மன்னனின் முகமூடி
மூஸா அலைஹிவஸ்ஸலாம் அவர்களை தன் சகோதரர் ஹாரூன் அலைஹி வஸ்ஸலாம் அவர்களையும் அழைத்துக் கொண்டு ஃபிர்அவ்னை சந்திக்க செல்லும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவர்கள் நாங்கள் உலக இரட்சகனான அல்லாஹ்வின் திருத்தூதர்கள் அதனால் அல்லாஹ்வை நீ ஏற்றுக்கொள், இஸ்ராயீலின் சந்ததியினரை எங்களுடன் அனுப்பிவை என்றும் நானே இறைவன் என்று சொல்லிக்கொண்டிருந்த ஃபிர்அவ்னிடம் கூறினார்கள்.

ஃபிர்அவ்னின் கொடுமையிலிருந்து இஸ்ராயீலர்களை காப்பற்ற மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் முடிவு செய்தார்கள். மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்களும் ஹாரூன் அலைஹி வஸ்ஸலாம் அவர்களும் இரவோடு இரவாக ஆயிரக்கணக்கான இஸ்ராயீலர்களை ரகசியமாக எகிப்தில் இருந்து அழைத்துச் சென்றனர். இதனை அறிந்த ஃபிர்அவ்ன் ஒரு பெரும்படையுடன் அவர்களை பிடிக்க புறப்பட்டான். செங்கடலின் வடக்கு எல்லையில் உள்ள சூயஸ் வளைகுடாவின் வடக்கு எல்லைக்கு இரண்டு கூட்டத்தாரும் சென்று சேர்ந்தனர் என்று வரலாறு கூறுகிறது. இந்த தருணத்தில் அல்லாஹ் அவர்களுக்கு கட்டளையிட்டான்.

“உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது. அல்குர்ஆன் 26:63

தண்ணீர் இல்லாமல் வறண்டு போன பாதை கால்வாயின் நடுவில் தோன்றியது. அப்பாதையில் இஸ்ராயீலர்கள் மறுகரையில் உள்ள சினாய் பகுதிக்கு தப்பிச் சென்றனர். ஃபிர்அவ்னும் அவனது படையினரும் கடலின் நடுவில் தோன்றிய பாதையில் நுழைந்து இஸ்ராயீலர்களை பிடிப்பதற்க்கு ஓடிச்சென்றனர். ஆனால் அவர்கள் பாதையின் நடுவே சென்று கொண்டிருக்கும் போது அந்த பாதையை அல்லாஹ் மீண்டும் கடலாக மாற்றினான். ஃபிர்;அவ்னும் அவனது படையினரும் தண்ணீரில் முழ்கி இறந்தனர். ஃபிர்அவ்னுடைய பிரேதத்தை ஒரு அத்தாட்சியாக்கி நிலைநிறுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்.

மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). அல்குர்ஆன் 10:90-92

அல்குர்ஆனில் கூறப்பட்டது உண்மையாகிவிட்டது. 1898ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட ஃபிர்அவ்னின் இந்த உடல் எகிப்து அருங்காட்சியகத்தில் ராயல் மம்மி ஹாலில் ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வுடல் 202 சென்டிமீட்டர் நீளமுள்ளது. கி.மு. 1235ல் தண்ணீரில் முழ்கடிக்கப்பட்டு இறந்துபோன ஃபிர்அவ்னின் உடல் பல ஆண்டுகளுக்கு மேலாகியும் கெட்டுப்போகமல் அல்லாஹ் கூறியது போல பாதுகாக்கப்பட்டிருப்பது அல்குர்ஆன் ஒரு இறைவேதம் என்பதற்க்கு மாபெரும் சான்றாகும்.




Firoun Firoun
ஃபிர்அவ்ன்
இதே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஏனைய பரோவா மன்னர்களின் உடல்கள் குடல்கள் எடுக்கப்பட்டு மருந்தால் நனைக்கப்பட்டு, துணிகளால் சுற்றப்பட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிகளாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் குர்ஆனில் கூறப்பட்ட இரண்டாவது ராம்ஸஸ் என்றழைக்கப்படும் ஃபிர்;அவ்னின் உடல் மம்மி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிர்அவ்னின் பிடியில் இருந்து தப்பித்த இஸ்ராயீலர்கள் மூஸா அலைஹி வஸ்ஸலாம் மற்றும் ஹாரூன் அலைஹி வஸ்ஸலாம் ஆகியோருடன் சினாயில் தங்கியிருந்த இடத்திற்க்க பெயர் உயூன் மூஸா என்பதாகும். உயூன் மூஸா என்ற அரபி சொல்லுக்கு மூஸாவின் ஊற்றுக்கள் என்று பெயர்.

இஸ்ராயீலர்கள் 12 கோத்திரங்களாக இருந்தனர். அவர் தண்ணீர் பிடித்துக்கொள்வதற்கு தனித்தனி இடங்கள் இருந்தன. அதில் ஒன்றுதான் இந்த கிணறு.




யாருமற்ற சினாயில் இஸ்ராயீலர்கள் பயன்படுத்திய மற்றொரு ஊற்றுதான் இது. ஊற்றின் இடத்தில் சமீப காலத்தில் சிறிய இருவழிக்குழாய் பொருத்தபட்டிருக்கிறது.
தெற்க்கு சினாய்க்கு சென்ற இஸ்ராயீலர்களை அழைத்து மீண்டும் துவா பள்ளத்தாக்கிற்க்கு அருகிலிலுள்ள வாதியராஹ் என்ற இடத்தில் தங்கவைத்தார்கள். அந்த காலத்தில் இஸ்ராயீலர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்ப்பட்டபோது அவர்கள் மூஸா அலைஹிவஸ்ஸலாம் அவர்களிடம் முறையிட்டனர். அதற்க்குபிறகு நடைபெற்ற நிகழ்ச்சியை குர்ஆன் விவரிக்கிறது.

மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு: “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!” என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம்(நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்கு மன்னு. ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து: “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்” (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவிலலை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள். 7:160




Rock where the Prophet Moosa struck Rock where the Prophet Moosa struck
வாதிஅர்பையின் என்று அறியப்படும் இந்த பள்ளத்தாக்கில் இந்த கல்லில்தான் மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் அடித்தார்கள். அந்த ஊற்றுக்களில் நீர் வடிந்த அடையாளங்கள் இன்றும் உள்ளன.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.