Posted by admin on Aug 2, 2011 in News, Regional News | 1 comment
ஓட்டமாவடி, காவத்தமுனையில் பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை தோண்டியொடுக்கப்பட்ட பட்டாணி ராசிக்கின் சடலத்தின் எச்சங்கள் இன்று செவ்வாய்க்கிழமை உறவினர்களிடத்தில் கையளிக்கப்பட்டது.வாழைச்சேனை மாவட்ட நீதவான் ஏ.எம்.றியாழின் உத்தரவிற்கிணங்க மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் உடல் எச்சம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய ஆதிகாரி டாக்டர். கே.டபிள்யூ.பி.குணதிலக பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்பிரேத பரிசோதனையின் பின் அதன் சில பகுதிகள் மரபணு பரிசோதனைக்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனஇதையடுத்து, உடல் பாகங்கள் மௌலவி இஹ்சானினால் இஸ்லாமிய முறைப்படி கபன் செய்யப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன.இதன்போது கொழும்பு குற்றப் புலனாய்வு பொலிஸ் பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டர்களான ஐ.பி.எதிரிசூரிய, ஐ.பி.சோமதிலக மற்றம் புத்தளம், முந்தல் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி ஹமீட் உட்பட பலர் சமுகமளித்திருந்தனர்.கடந்த 11.2.2010 ஆம் திகதி பொலனறுவையில் வைத்து காணாமல் போன பட்டரிணி ராசிகின் சடலம் கடந்த வியாழக்கிழமை தோண்டியேடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.