Sunday, August 14, 2011

றஹ்மத்புரத்தில் கிறீஸ் மனிதன் புகுந்துள்ளதாக பதட்டம் ஏற்பட்டது.- இரண்டாம் இணைப்பு

புத்தளம் மாவட்டத்திலுள்ள முந்தல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் அமைந்துள்ள கிராமம்தான் றஹ்மத்புரம்.இக்கிராமத்தில் வடமாகாணத் திலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளினால் 1990ம் ஆண்டு  வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது பணத்தின் மூலம் பெறப்பட்ட காணிகளில் வீடுகள் அமைத்து 1994ம் ஆண்டு முதல் வசித்து வருகின்றனர்.இவர்களில் சிலர் வடமாகாணத்தில் மீள்குடியமர்ந்துள்ளதால் இவ்அகதிகளின் சில வீடுகளில் உள்ளுர் வாசிகள் வாடகைக்கு அமர்ந்துள்ளனர். சில காணி,வீடுகளை விலையாகவும் வாங்கி யுள்ளனர்.

இக்கிராமத்தில் இன்றிரவு 10.30 மணியளவில் தற்போது நாட்டில் பலவலாகப் பேசப்படும் “கிறீஸ் மனிதன்”புகுந்துள்ளதாக பதட்டம் ஏற்பட்டது.இது முஸ்லிம் களின் புனித றமழான் மாதமாதலால் பகலில் நோன்பிருந்து இரவு தராவிஹ் என்னும் தொழுகையை முடித்து மக்கள் அசந்து துாங்கச்செல்லும் நேரத்தில் இச்சம்பவம் நடந்ததினால் மிகப்பதட்டமாக குறிப்பாக பெண்களும், சிறுவர் களும் காணப்பட்டனர்.சம்பவம் முடிந்து ஊர் மக்கள் ஒன்று கூடியதன் பின்னர்தான் நடந்த விடயத்தினை அறிய முடிந்தது.வந்தது கிறீஸ் மனிதனல்ல என்ற விடயம் தெரியவந்தது.
இரவு பத்தரை மணியளவில் ஹா...கூ,,,கூ.. என்ற சத்தங்களுடன் சில மோட்டார்சைக்கில்களிலும்,சில ஆட்டோ வாகனங்களிலும்  வாள்கள், பொல்லுகளுடன் வந்த சிலர் அகதிகளே! ஊரைவிட்டு போங்கடா,அகதி நாய்களே, என்ற வார்தைகளுடன் ஒரு முஸ்லிமால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் கொண்டு ஏசியதுடன்,சில் கிடுகு வேலிகளை வாளால் வெட்டி வீதியில் போட்டு ,கொண்டு வந்த பழைய ரயர்களையும் சேர்த்து தீ மூட்டிவிட்டு சம்பவங்கள் பற்றி அறிய வெளியே வந்த முதியவர்களையும் துாசன் வார்தைகளினால் ஏசி உள்ளே போகும்படியும்.போடா என்றும் போகா விட்டால் கழுத்தை துண்டாக்கப் போவதாகவும்  அச்சுறுத்தியுள்ளனர்.
பின்னர்  சகல காணிகளின் கதவுகளையும்கை,கால்களால் தட்டியும்,வாளால் வேலிகளில் அடித்து சத்தம் செய்தும் ,வாகனங்களின் ஹோர்ன்களின ஒலிகளை எழுப்பியவாறு,அவதுாறான வார்த்தைகளால் ஏசியும் பள்ளிவாசல் தலைவரின் வீட்டினுள் அத்துமீறிப் புகுந்து தண்ணீர் ரெப்பையும் அடித்துடைத்து விட்டு சென்றுள்ளனர்.கலகக்காரர்களை அகதிகளால் அடையாளம் காணமுடியவில்லை.
இரண்டாம் இணைப்பு -  இவ்விடயம் சார்பாக கொத்தாந்தீவு ஜூம்ஆப் பண்ளி வாசல் நிர்வாகத்தின் கவனத்திற்கு குறித்த  றஹ்மத்புரம் பள்ளிவாசல் 
நிர்வாகத்தினர்  முறையீடு ஒன்றைச் சமர்ப்பித்தனர். இது சார்பாக கடந்த 2011.08.18 ம் திகதி அஸர் தொழுகையின் பின்னர் கொத்தாந்தீவு ஜூம்ஆப் பள்ளி வாசலில் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் கொ்தாந்தீவு மற்றும் றஹ்மத்புரம் பள்ளிவாசல் நிரவாக சபையினர் சிலரும்,றஹ்மத் புரத்தில் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களும், அமைதியின்மையை ஏற்படுத்த காரணமாகவிருந்தவர்களில் சிலரும் , கலந்து கொண்டனர்.

நடந்த சம்பவமானது திட்டமிட்டுச் செய்யப்படாத சம்பவம் எனவும் இதுபற்றி பெரிது படுத்தத் தேவையில்லை எனவும்,நடந்த சம்பவத்திற்கு  சம்பந்தப்பட்ட இளைஞர்கள் சார்பாக கொத்தாந்தீவு பள்ளி நிர்வாத்தினர் றஹ்மத்புரம் பள்ளி வாசல் நிர்வாகத்தினரிடம்  மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
குறிப்பு  -  ச்ம்பவம் சார்பாக  புத்தளம்,மன்னார்,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் ஜம்இய்யதுல் உலமா சபைக்கு குறித்த கடிதத்தின் பிரதிகள் அனுப்பப் பட்டமைக்கு கடுமையான கண்டனம்  கொத்தாந்தீவு ஜூம்ஆப் பள்ளி நிர்வாகத்தினராலும்,சம்பத்தப்பட்ட இளைஞர்களினாலும் தெரிவிக்கப்பட்டது அகதிகளின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படாது அநீதி இழைக்கப்பட்டது.


அநீதி இழைக்கப்பட்டவர்களுடைய பிரார்தனை எதுவித தடையுமின்றி அல்லாவினால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது் ”அதுவும் புனித றமழான் மாதத்தில்.....அல்லாஹ்வை பயந்த கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.