கடந்த சில நாட்களுக்கு முன்னர் நானொரு(முஹாஜிர்) கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அக்கருத்தரங்கில் அன்சாரிச்சகோதரர்களே அதிகமாக கலந்து கொண்டிருந்தனர்.அங்கு கறிவேப்பிலைபோன்று ஒரு மார்க்க அறிஞன்(முஹாஜிர்) மட்டும் கலந்து கொண்டிருந்தார். அப்போது அன்சாரிகளுக்கு முஹாஜிர்கள் வழங்க வேண்டிய கௌரவத்தை விபரிப்பதற்காக கீழ் வரும் ஹதீஸை கூறினேன்.
ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் எண் 17
ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்.நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி)அவர்கள் கூறினார்
ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் இல 3784
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
அதற்கு அங்கிருந்த பாடசாலை அதிபர்(அன்சாரி) ஒருவர் என்னை சினந்தவராக எங்களுக்கும் ஹதீஸ் தெரியும் எனக்கூறி இது ஆதாரமில்லாத ஹதீஸ் என மறுத்துவிட்டார். நானொரு உலமா இல்லாதபடியால் அங்கிருந்த உலமாவிடம் இதில் யார் சொல்வது உண்மையென்ற கருத்துப்படக்கேட்டேன். அதற்கு அவ்வுலமா சும்மா தலையை ஆட்டியபடி அமர்ந்திருந்தார். பதிலேதும் அவர் தரவில்லை.அவருடைய நடவடிக்கை என்னை கடுமையான மன உழைச்சலுக்கு உள்ளாக்கியது.இவர்களெல்லாம் வயிற்றுப்பிழைப்புக்காக தொழில் செய்பவர்கள் மட்டுமே இவர் போன்ற ஆலிம்கள் சுமூகத்தில் இருந்தும் ஒன்று,இல்லாமலிருப்பதுவும் ஒன்று என எண்ணியபடியும் இப்படியான மார்க அறிஞர்களினால்தான் எமது இளைஞர் சமூகம் ஒழுக்கம் கெட்டவர்களாகவும் ,கொலைகாரர்களாகவும்,குடிகாரர்களாகவும் மாறுகின்றனர் என எண்ணிக் கொண்டு வீடு வந்தேன்.
இன்று (2011.08.26)அந்த ஆலிமைக்காணக்கிடைத்தது. இன்றும் அவரிடம் என்ன? மௌலவி அந்த ஹதீஸ் ஆதாரமுள்ளதா? எனக்கேட்டேன். தெரியாதென பதிலிறுத்தார். நான் தொடர்ந்து ஹதீஸ் இலக்கத்தைக் கூறினேன். அப்படியா? என கேட்டுவிட்டு நளுவிவிட்டார். எனது மனம் சற்று சிந்தித்தது. சில கேள்விகளும் எழுந்தது.
1.இவர் உண்மையான உலமாவா?
2.உண்மை தெரிந்தும் தனது தொழில் நிமிர்தம் உண்மையை மறைக்கின்றாரா?
மேலும் கீழ்வரும் அல்-குர்ஆன் வசனம் என்னை சிந்திக்க வைத்தது. அவரைப் போன்றவர்களுக்கு இக்குர்ஆன் வசனம் பொருத்தமானதோ?.
2:42 وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.