Wednesday, August 3, 2011

படுகொலை செய்யப்பட்டட பட்டானி றாசிக் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

படுகொலை யெ்யப்பட்ட அன்சாரி றாசிக் அவர்களின் ஜனாஸாவை முல்லைத்தீவு முஹாஜிரீன் ஒருவர்  முன்னே சுமந்து செல்லும் காட்சி
முஹம்மது றாசிக் முஹம்மது றிப்கான்
2010.02.11ம் திகதிபொலனவையில் இருந்து கடத்தப்பட்டபுத்தளம் மாவட்ட முந்தல் பிரதேச செயலாளர் பிரின் கீழுள்ள சமீரகம கிரமத்தைச் சேர்ந்தவரும்,சி.ரி.எப் என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரும்.ஓய்வுபெற்ற கிராமசேவையாளருமான மர்ஹூம் றாசிக் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு மட்டக்களப்பு,ஓட்டமாவடி பிரதேசத்தில் புதைகுழி யொன்றில்கண்டு பிடிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.அன்னாரின் ஜனாஸா இன்று(2011.08.03) சமீரகம பாடசாலை விளையாட்டு மைதானத்தில் தொழுகை நடாத்தப்பட்டு,பெருக்குவட்டான் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.பலபாகங்களிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான வர்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டனர். அதைவிட அமைச்சர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,புத்தளம் நகரபிதா பாயிஸ் அவரகள்,ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டக்கிளை உறுப்பினர்கள்,புத்தளம் பாராளுமன்ற ஐ.தே.கட்சி பாளுமன்ற உறுப்பினர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள்,வடமாகாண முஹாஜிரீன்கள், அரபுக்கல்லர்ரி மாணவர்களென பலரும் கலந்து கொண்டனர்.மெலும் றாசிக் குடும்பத்தினரின்  மாற்றுமத நண்பர்கள்,  என பலரும் கலந்து கொண்டனர்.

       தொழுகையின் முன்னர் ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டக்கிளையின் தலைவர் அல்-ஹாஜ் மெளலவி அப்துல்லா அவர்கள் குறித்த சம்பவம் தொடர்பாக உரையாற்றி யதுடன்  கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேதக நபர்களைத்தவிர ஏனைய குற்றவாளிகளையும்  கைது செய்யப்படவேண்டுமெனவும், அதற்கு சகலரது ஒற்றுழைப்பையும் வேண்டிக் கொண்டார்.,
    நன்றியுரை நிகழ்த்திய முஹம்மது றாசிக்,முஹம்மது றிப்கான் கடத்தப்பட்ட தனது தந்தையை கண்டு பிடிக்க கடந்த  காலங்களில் தமக்கு உதவிய அனைத்தத் தரப்பினருக்கும் தமது குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவத்தார்.தனதுதந்தையைப்பற்றி தவறான செய்திகளைகொலையாளிகள் பரப்பியிருந்த நிலையில்  தந்தையின் ஜனாஸாவின் ஒரு பகுதியாவது கண்டு பிடிக்கப்பட்டடதினால் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த களங்ச்சுமை அழிக்கப்பட்டுள்ளது.சந்தோசததை தருவதாவும் குறிப்பிட்டார்
       ஜனாஸா தொழுகை அவரது மருமகனினாம்,துஆப்பிரார்த்தனை புத்த

நீதி அமைச்சர்ரும்,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான அல்-ஹாஜ்  ரஊப் ஹக்கீம்  அவர்களும் அவர்களது  குழுவினரும் அமர்திருக்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்லாஸ் அவர்கள்.
வடமாகாண முஹாஜிரீன்களில் சிலர்
அன்னாரது வீட்டில் துக்கத்தில் நின்றிருக்கும் பிரமுகர்கள்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எஸ்.அபு-பக்கர் அவர்களும் அவரது மகனான உமர் பாறுர்க் அவர்களும்
புத்தள்ம் மாவட்ட ஐககிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டார அவர்கள்
முந்தல் பிரதேச போலிஸ் அத்தியட்சகரும்,அவரது உதவியாளர்களும் போக்குவரத்து ஒழுங்கு படுத்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாவை பின் தொடர்ந்து செல்லும் மக்கள் கூட்டம்
அன்னாரது இல்லத்தில் ஜனாஸா வைக்கப்பட்டுள்ளது
                 ஜனாஸாத் தொழுகைக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டத்தின ஒரு பகுதியினர்
முஸ்லிம் அகதியும்  முஹாஜிரீன்கள் சார்பாக அன்னாரது குடும்பத்தின் துக்கங்களில் பங்காளியாகிறது.   

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.