Friday, August 5, 2011

அப்பாவி மக்களுக்கு அநீதம் இழைத்தோர் அதற்குரிய விலையைக் கொடுத்தே தீருவர்-டாக்டர் அப்துல்லாஹ்



டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்)

அஸ்ஸலாமு அலைக்கும்

      முதலில்  டாக்டர் அப்தல்லாஹ்(பெரியார்தாசன்)பற்றி,சைவக்குடும்பத்தில் பிறந்தவர். பெயர் சேசாஷலம்.இவர்  பெரியார்தாசன் என்ற பெயரில் இறைமறுப்பாளராகவும், சித்தார்த்தன் என்னும் பெயரில்பௌத்தராகவும் வாழ்ந்தவர்,கருத்தம்மா திரைப்படத்திலும், தென்றல் என்னும் சின்னத்திரையிலும் சிறந்த நடிகராக விளங்கியவர். தத்துவஇயல் கற்றவர்,பேராசிரியர்,உளவியல் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்வர்,உலகறிநத மனோதத்துவ வைத்தியர்.இவர் 2010.12.03ஆம் திகதி ஸஊதியில் ஏகத்துவத்தை ஏற்று பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார்.இப்போது இவர் தஃவா பணியில் முழு நேரமும் ஈடுபடுகிறார்.இன்னும் சொல்லலாம்.


     அண்மையில் ஜெம்ஸித் அஸீஸ் அவர்களால் வெளியிடப்பட்ட “கம்பளிப்G+ச்சியின் ரோமம் உதிர்வதுபோல் எனது அறியாமை உதிர்ந்த்துஎன்னும் புத்தகத்திலிருந்து டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தான்) அவர்கள் கூறிய சிலவிடயங்களை இன்றைய காலகட்டத்தில் இ(-)த்தளத்தில் வெளியிடுவது பொருத்தமென முஸ்லிம் அகதி எண்ணுகின்றான்.கேள்வி (எங்கள்தேசம்) கடந்த மூன்றுதசாப்தங்களாகஇலங்கையில்நடைபெற்ற யுத்தம் மற்றும் அதில் மூன்றாம்தரப்பானமுஸ்லிம் சமுதாயத்தின் பாதிப்புக் குறித்து எந்தளவுதெரிந்து வைத்திருக்கின்றீர்கள்?
பதில் (டாக்டர் அப்துல்லாஹ்) ஆரம்பத்தில் ஈழப்போராட்டத்தை பெரிதும்ஆதரித்தவன் நான்.தமிழ் மக்களுக்காக தனித்துவத்தீர்வு வழங்கப் படவேண்டும் என்று குரல் கொடுத்தவன்.இதற்காகநாடு,நாடாகச்சென்று ஆதரவுப் பிரச்சாரம் செய்தவன்.1990ஆம் ஆண்டு புலிகளால் வடக்கு முஸ்லிம்கள் இருமணி நேர அவகாசத்தில் விரட்டியடிக்கப்பட்ட போது நான் பிரான்சில் இருந்தேன்.இதனைக்கேள்வியுற்றதும் பிரான்சிலுள்ள தமிழ்த்தலை வர்களை சந்தித்து இதுபற்றி வன்மையாக எச்சரித்தேன். அங்கிருந்து விவாவதிப்பது பயனற்றது எனக்கருதி உடனடியாக பிரான்சி லிருந்து இலங்கைக்கு  வந்து இங்குள்ளமுக்கிய இயக்கத் தலைவர்களை சந்தித்து இந்த கொடுங்கோல் முறையை வன்மையாக எதிர்த்தேன்.
கடைந்தெடுத்த இந்த அயோக்கியத்தனத்திற்கு விலைகொடுக்கப் போகி றீர்கள் என்று வன்மையான தொனில் எச்சரித்தேன்.ஆனால் முஸ்லிம் களில் காட்டிக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள் அதனால்தான் அவர்களை விரட்டியடித்தோம்.எனக்காரணம் சொல்லப்பட்டது.
ஆனால் அப்படி காட்டிக் கொடுப்பவர்கள் இருந்தால் அவர்களை தனிமையாக இனங்கண்டு அவர்களுக்கான தண்டனையை வழங்குங்கள்.குழந்தைகளையும்,பெண்களையும், வயோதிபர்களையும், நோயாளிகளையும்  விரட்டியடிக்கும் ஈனச்செயலை ஏன் செய்கிறீர் களென எதிர்த்தேன்.
        இந்த அநீதிக்கு விலை கொடுக்கப் போகிறார்களே! என்பதை உணர்ந்தேன்.இது பல இடங்களில் நடந்த யதார்த அனுபவம்.யார் நிராயதபாணிகளான அப்பாவி மக்களை ஆயுதபலத்தால் அழித்து,வெளி யேற்றும் கொடுஞ்செயலை செய்கிறார்களோ அவர்கள் அதற் குரிய விலையை கொடுத்தே வந்திருக்கின்றனர்வடக்கு முஸ்லிம்களின் பொரு ளாதாரத்தை சுறையாடிக் கொண்டுஅவர்களைவிரட்டு,விரட்டு என அவர் களைவிரட்டியமை,காத்தான்குடிப பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த வர்களை ஈவிரக்கமின்றிசட்டுக்கொன்றதும் இச்சம்ப வங்களை நியாயப் படுத்தி சைவப்புலவர்கள்பத்திரிகைகளில் கட்டுரை எழுதியதும் என்னை மிகவுமே உறுத்திய இடங்கள்.விடுதலை என்பது சுதந்திர உணர்ச்சிக்கானது. பிறருடைய சுதந்திரத்தைப்பறித்து  எப்படி நீங்கள் சுதந்திரத்தைப் பெறப் போகின்றீர்கள் என்று இறுதி வரை போராடினேன்.ஆனால் அதனை நியாயமென அவர்கள் வாதித்துக்கொண்டே இருந்தார்கள்.
  சமகாலத்தில்தமிழ்நாட்டுத்தமிழ்த் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு இச் சம்பவங்களைக் கண்டிக்குமாறு வேண்டிகே கொண்டேன்.ஆனால் ஒருசிலர் மாத்திரம்  மிகவும் நழுவல் போக்குடன் இதுபற்றி எழுதினார்கள் அதைவிட இலங்கையிலும்,தமிழ் நாட்டிலும் இந்த ஈனச்செயலை நியாயப் படுத்தியே தமிழ்ப்பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருந்தமை மிகவும் கவலைதரும் விடயமாகும்.இந்த கொடுஞ்செயல்களுக்குப் பின்னால் நான் அவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொண்டேன்.

உளநோய் பற்றி டாக்டர் அப்துல்லா அவர்கள் கூறுகையில்-

நாள்பட்டஉளமனநோய் [Schizophrenia]
        Schizophrenia மனச்சிதைவினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது மனசுக்குள் எப்போதும் ஒருகுரல் ஒலிப்பது போல உணர்வார்கள்.அந்தக்குரல் அவர்களைத் தீமை செய்யத்தாண்டும். சிலபோது ஒன்னுமில்லாத நிலையிலும் மணங்களை நுகர்வார்கள்.உதாரணமாக தமக்குத் தெரிந்த, தெரியாத சிலர் தம்முடன் கதைப்பதாகவோ அல்லது தங்களுக்குள் கதைப்ப தாகவோ அவர்கள் செவிவழி உணரக்கூடும்அந்த குரல் ஓசை யுடன் அவர்கள் சங்கமித்து விடுவார்கள் அந்தக்கட்சியைப் பார்க்கும் பிறருக்கு அவர்கள் தமக்குள் கதைப்பது போலத் தோன்றும்.
சிலபோது இவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக்கூடும் .இப்படியா னவர்களில் வித்தியாசமான, மாறுபாடான நடத்தைகள் தொடர்ந்து காணப்படலாம்.அவர்கள் யதார்த்தத்திலிருந்து விடுபட்டிருப்பார்கள். இந்த மனச்சதைவு ஏற்பட்டு விட்டால் அதை குணப்படுத்துவது கடினம்.பாபரி மஸ்ஜிதைஇடித்தபோது அதனை இடிப்பதுபோல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த அவ்விருவரையும் Schizophrenia வினால் கடுமையாக பாதிக்கப் பட்டார்கள். அவர்களைக்குணப்படுத்த பல பெரும்,பெரும் உளவியலாளர்கள் முயற்ச்சி த்தார்கள் முயற்சி வெற்றியளிக்கவில்லை.நானும் அவர்களுக்கு சிகிச்சையளிக்கச் சென்றேன்.என்னாலும் இயலவில்லை.பின்னர் ஹலீம் ஸித்தீக் என்ற ஒரு மார்க்க அறிஞர் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை வழங்கினான்.அதன் பிறகுதான் அவர்களது அந்த நோயும் குணமடைந்த்து.அவ்விருவரும் தற்போது நாடெங்கும் சென்று பள்ளிவாசல் களை நிர்மாணிப்பதிலும்,பள்ளிவாசல்களை புனர்நிர்மானிப் பதிலும் ஈடு பட்டுக் கொண்டி ருக்கின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்
       இந்த மனச்சிதைவு ஏற்படாமலிருப்பதற்கு இஸ்லாம் வழி சொல்லித் தருகிறது. அதாவது உலகில்எது நடந்தாலும் நல்லதோ ,தீயதோ அது அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது. என்று ஆழமாக நம்பிக்கை வைத்து அதன்படி கருமமாற்றும் ஒருவருக்கு Schizophrenia என்ன! எந்த ஒரு மனச்சிதைவும் ஒருபோதும் ஏற்படாது. என்கின்றார் டாக்டர் அப்துல்லாஹ்.

        நமக்கு தெரியாத விடயங்களை அல்லாஹ் இவருக்கு புரிய வைத்துள்ளான். இவரிடம் நாம் கற்றுக்கொள்ள முயல்வோமாக “முஸ்லிம் அகதி”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.